a

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள்…! உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு…!


நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் கொரோனா தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை, அங்குள்ள வசதிகள் உள்ளிட்டவை குறித்து தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.

இதன் வழக்கு விசாரணையில், கடந்த ஆண்டு மார்ச்சுக்கு பிறகு பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவரம், இறப்புக்கு காரணம் கொரோனாவா அல்லது வேறு ஏதேனுமா என்பது உள்ளிட்ட விவரம், பெற்றோரை இழந்த குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை ஆகியவை குறித்து மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.

Also Read  செப்.15க்குள் உள்ளாட்சி தேர்தல்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

மேலும், இது தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டது.

அதன்படி, கொரோனா தொற்றுக்கு இதுவரை 1,742 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

Also Read  2 டோஸ்களுக்கு வெவ்வேறு கொரோனா தடுப்பூசி போடலாமா? - மத்திய அரசு விளக்கம்

7,464 குழந்தைகள் தாய் அல்லது தந்தையை இழந்துள்ளனர் என உச்சநீதிமன்றத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்தது.

தமிழகத்தில் இதுவரை 16 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர் என்றும் 143 குழந்தைகள் தாய் அல்லது தந்தையை இழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Also Read  ஊரடங்கு விதிகளை மீறியவருக்கு ரோஜாப்பூ! - டெல்லி போலீஸ் விழிப்புணர்வு

இதையடுத்து, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கோரிக்கைக்கு இணங்க பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான திட்டங்களை செயல்படுத்த ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க, முதல்கட்டமாக தமிழகம், தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மராட்டியம், பீகார் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவமாட இதுதான் காரணம் – உலக சுகாதார அமைப்பு

sathya suganthi

இந்தியாவில் இதுவரை எத்தனை பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது தெரியுமா?

Shanmugapriya

வரட்டியால் விரட்டி அடிக்கும் வினோத திருவிழா…!முழு விவரம் இதோ..!

Lekha Shree

பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படவுள்ளது

Tamil Mint

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்… இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு…!

HariHara Suthan

“நன்றி… சகோதரரே..” வாழ்த்து தெரிவித்த ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் ட்வீட்…

Ramya Tamil

இன்றைய தலைப்புச் செய்திகள் | 12.05.2021

sathya suganthi

மத்திய அரசு போட்ட அடுக்கடுக்கான கட்டுப்பாடு! ஏற்க முடியாது என வாட்ஸ் ஆப் வழக்கு…!

sathya suganthi

இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை: 16 லட்சத்தை தாண்டியது

Tamil Mint

காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல்…! வெளியே குதித்து தப்பிப்போரை தடுக்க முடியாது…! – சொன்னது யார் தெரியுமா?

sathya suganthi

டெல்லி வன்முறை: “300க்கு மேற்பட்ட காவலர்கள் காயம்” – டெல்லி போலீஸ் தந்த அதிர்ச்சி தகவல்!

Tamil Mint

கொரோனா தடுப்பூசி மருந்து இறுதிக்கட்டததை எட்டியது: விடிவு காலம் வருமா?

Tamil Mint