a

கூடி பயணிக்கும் யானைகள்…! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்…!


சீனாவின் யுனான் மாகாண வனத்தைச் சேர்ந்த 16 யானைகள் கிராமம், நகரம் என மனிதர்கள் வாழும் பகுதிகள் வழியாக மகாண தலைநகர் குன்மிங் நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

ஓராண்டாகவே இந்த யானைகள் கூட்டம், 500 கி.மீ. துாரம் நடந்து சில மாதங்களுக்கு முன் நகருக்குள் புகுந்துள்ளன. இதுவரை மனிதர்களை தாக்காத இந்த யானைகள் உணவுக்காக சில கடைகளை சூறையாடியுள்ளன. வயல்களில் புகுந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சோளப் பயிர்களை சாப்பிட்டுள்ளன.

Also Read  கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு - பேக்கரியின் பலே ஐடியா...!

இந்த யானைகள் எதை நோக்கி செல்கின்றன என்பது புரியாத புதிராக உள்ளது.
தன் தலைவரை தேடிச் செல்வதாக கூறப்படும் நிலையில், ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் யானைகளை சீன அரசு கண்காணித்து வருகிறது.

ஆங்காங்கே போலீசார் மற்றும் அவசர உதவிக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த யானைகள் குழுவில் இருந்து பாதி வழியில் இரு யானைகள் வனப்பகுதிக்கு திரும்பி விட்டதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

Also Read  கணவன்-மனைவி வாழ்க்கை முறையில் வெறுப்பு - ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு பெருகும் ஆதரவு…!

எஞ்சிய யானைகளில் ஒன்று வழியில் குட்டியை ஈன்றுள்ளது. தற்போது ஆறு பெண், மூன்று ஆண், ஆறு குட்டி யானைகள் உள்ளன. இவை நகருக்குள் மேலும் வருவதை தடுக்க சாலைகளின் குறுக்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

‘யானைகளை யாரும் துன்புறுத்த வேண்டாம்; பட்டாசுகளை வெடித்து துரத்த வேண்டாம்’ என சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், சாலைகளில் யானைகள் செல்வது, வாய்க்காலில் விழுந்த குட்டியை தாய் யானை கடும் முயற்சிக்கு பின் துாக்கி விடுவது உள்ளிட்ட புகைப்படங்கள் சர்வதேச அளவில் டிரெண்டாகி உள்ளன.

சீனாவின் ‘வெய்போ’ சமூக வலைதளத்தில் தொடர்ந்து பல நாட்களாக இந்த யானைகள் ‘டிரென்டிங்கில்’ உள்ளன.

Also Read  திருமண கோலத்தில் குக் வித் கோமாளி பவித்ரா! புகைப்படம் இதோ!

நேற்று சராசரியாக 20 கோடி பேர் இந்த யானைகள் செய்யும் செயல்களை சமூக ஊடகங்களில் பார்த்து ரசித்துள்ளனர்.

சாலையோரம் யானைகள் கூட்டமாக துாங்கும் படத்தை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாராட்டி பதிவிட்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமெரிக்காவில் டிக்டாக்கிற்கு தடை இல்லை – அதிபர் ஜோ பைடன் அதிரடி…!

sathya suganthi

பள்ளிகளை திறந்து அமெரிக்கா தனக்குத் தானே வைத்துக் கொண்ட ஆப்பு

Tamil Mint

மெக்சிகோவில் கால்பந்து போட்டியின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி

Tamil Mint

மியான்மரில் முகநூலுக்கு இடைக்கால தடை விதிப்பு!

Tamil Mint

அடடா! – 19 லட்சத்திற்கு விற்கப்பட்ட நாய்!

Shanmugapriya

“இது தேவையா?” – பர்கர் சாப்பிடுவதற்காக 160 கி.மீ பயணம் செய்த பெண்; ரூ.20,000 அபராதம் விதித்த காவலர்கள்!

Tamil Mint

வவ்வாலிடம் இருந்து உருமாறியதா கொரோனா வைரஸ்…! ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Devaraj

இறந்தவர்கள் கனவில் வருகிறார்கள்! – கனடாவில் புதிய நோய்?

Shanmugapriya

2015 ஆண்டிலேயே கொரோனா குறித்து எச்சரித்த பில் கேட்ஸ்

Tamil Mint

அமெரிக்க தேர்தலில் ஜோ பைடன் வெற்றியை தொடர்ந்து, டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

Tamil Mint

உலக அளவில் கிடுகிடுவென அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை

Tamil Mint

தடுப்பூசி செலுத்திக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்த இளைஞர்கள்…!

Lekha Shree