‘ஜோக்கர்’ பட பாணியில் ரயிலில் பயணிகளை சரமாரியாக குத்திய நபர்..! 17 பேர் படுகாயம்..!


ஓடும் ரயிலில் ஜோக்கர் பட பாணியில் ஜோக்கரை போல உடை அணிந்து வந்த ஒருவர் பயணிகளை சரமாரியாக கத்தியால் தாக்கியதில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அரங்கேறியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகில் உள்ள ஷின்ஜூகு நகருக்கு மெட்ரோ ரயில் ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

Also Read  பொள்ளாச்சி பாலியல் வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க உத்தரவு…!

அப்போது ஜோக்கர் போல உடை அணிந்து வந்த ஒருவரும் பயணம் செய்துள்ளார். நேற்று ஹலோவீன் தினம் என்பதால் அதற்காக அவர் அப்படி வந்திருக்கிறார் என சக பயணிகள் நினைத்துள்ளனர்.

இந்நிலையில் திடீரென அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அங்கிருந்தவர்களை சரமாரியாக குத்த ஆரம்பித்துள்ளார். இதில் 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

Also Read  என்னா அடி…! காவலர் முன்னிலையில் டேக்சி ஓட்டுநரை தாக்கிய இளம்பெண்..! வைரல் வீடியோ இதோ..!

இதனால் பயணிகள் சத்தமிட்டு அலறி ரயிலுக்கு உள்ளேயே அங்கும் இங்கும் ஓடியுள்ளனர். ரயில் நின்றதும் அந்த நபர் ரத்தக்கரை படிந்த கத்தியுடன் வெளியே வந்துள்ளார்.

அவரை விரைந்து வந்த போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும், படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Also Read  சிறுவனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல்..! 2-வது கணவர் வெட்டி படுகொலை...!

இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் தனக்கு மரண தண்டனை கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படி செய்ததாக கூறியுள்ளார். அந்த நபருக்கு சுமார் 24 வயது இருக்கலாம்.

இந்த சம்பவம் ஜப்பான் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நாசா திட்டம் திடீர் ரத்து

Tamil Mint

இரவு நேரத்தில் நூற்றுக்கணக்கில் உதித்த சூரியன்கள் – தாவரங்களை உறைபனியில் இருந்து பாதுகாக்க புது உத்தி…!

Devaraj

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு – சென்னை அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Lekha Shree

தடுப்பூசிப் போட்டுக்கொண்டால் “டெல்டா” கொரோனா வேகமாக பரவாது…!

sathya suganthi

பண மோசடி வழக்கில் சிக்கிய பிரபல யூடியூபர்கள் கோபி-சுதாகர்…! நடந்தது என்ன?

Lekha Shree

கோடநாடு வழக்கு: கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் கைது..!

Lekha Shree

இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!

Lekha Shree

‘Squid Game’ 2-வது சீசன் குறித்து இயக்குனர் கொடுத்த சூப்பர் அப்டேட்..! ரசிகர்கள் கொண்டாட்டம்..!

Lekha Shree

பன்றி வளர்ப்பிற்கு மாறிய ஹூவாய் நிறுவனம்! இப்படி ஒரு நிலையா?

Bhuvaneshwari Velmurugan

“நான் ரொம்ப பிஸி..!” – கணவர் ராஜ் குந்த்ரா வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டி வாக்குமூலம்..!

Lekha Shree

அரசக்குடும்ப மம்மிகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு – புல்லரித்து போன பார்வையாளர்கள்…! கண்களை கவர்ந்த காட்சிகள் இதோ…!

Devaraj

தாலிபான்களை இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுடன் ஒப்பிட்டு பேசிய சமாஜ்வாதி எம்.பி மீது தேசதுரோக வழக்கு..!

Lekha Shree