அயன் பட பாணியில் தங்கத்தை கடத்த முயன்ற நபர்… சிக்கியது எப்படி?


கேரள மாநிலத்தில் ஓர் நபர் தனது பேண்டுக்குள் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை மறைத்து வைத்து கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், கோழிக்கோடு, கண்ணூர், கொச்சின் ஆகிய பகுதிகளில் தங்கம் கடத்தல் சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

அதனால், இந்த பகுதிகளிலும் மற்ற பகுதிகளிலும் போலீசார் சமீப காலமாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜூலை 1ம் தேதி துபாயில் இருந்து கோழிக்கோடு வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தங்கம் கடத்திக்கொண்டு வரப்படுகிறது என புலனாய்வுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

Also Read  "பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" - அமைச்சர் அன்பில் மகேஷ்

எனவே, அந்த விமானத்தில் வந்த அனைத்து பயணிகளிடமும் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அப்போதான் காசர்கோடு பகுதியை சேர்ந்த ஷபீர் என்ற 31 வயது நபர் மாட்டியுள்ளார்.

அவர் மீது சந்தேகம் ஏற்படவே அவரை தீவிர சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். அப்போது அவர் தனது பேண்டுக்குள் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை உருக்கி மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.

Also Read  இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை தொடங்கியது! கேரளாவில் தீவிரமாக பரவும் வைரஸ்!

தங்க பேஸ்டை பேண்டில் பூசி அதன் மீது லைனிங் துணியை வைத்து தைத்து அந்த தங்கத்தை மிக நூதனமாக கடத்த முயன்றுள்ளார்.

ஷபீர் தற்போது துபாயில் இருந்து வந்ததால் 14 நாட்கள் குவாரன்டைனில் உள்ளார். அந்த குவாரன்டைன் பீரியட் முடிந்ததும் இதுகுறித்து அவரை விசாரிக்க போலீசார் முடிவெடுத்துள்ளனர்.

Also Read  ஹெல்மெட் அணியாத கர்ப்பிணி பெண்ணை 3 கி.மீ நடக்க வைத்த பெண் காவலர்…!

இப்படி யாரும் யோசிக்க முடியாத அளவிற்கும் தங்கத்தை உருக்கி அதை பேண்டுக்குள் வைத்து மறைத்து கடத்த முயன்ற சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பல இடங்களில் இணைய சேவை துண்டிப்பு; விவசாயிகள் போராட்டத்தால் ஸ்தம்பித்துப்போன டெல்லி!

Tamil Mint

வேளாண் சட்டங்களை பிரதமர் திரும்ப பெற வேண்டும்: தமிழக எதிர்க்கட்சிகள்

Tamil Mint

இன்றைய தலைப்புச் செய்திகள் | 16.5.2021

sathya suganthi

நாளை வெளியாகிறது இந்தியாவுக்கான பப்ஜி செயலி! ஆன்லைன் கேம் பிரியர்கள் கொண்டாட்டம்!

Lekha Shree

கங்குலி நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்

Tamil Mint

பன்றிமூக்கு தவளை – கேரளாவில் காணப்படும் அபூர்வ இனம்..!

Lekha Shree

28 மனைவிகள்! 135 குழந்தைகள்! 126 பேரக்குழந்தைகள்! 37வது திருமணம் செய்த தாத்தா!

sathya suganthi

இந்தியா: பிரிட்டனின் உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம்…!

Lekha Shree

“குழந்தைகளுக்கு எவ்வளவு வேலை இருக்கிறது தெரியுமா?” – ஆன்லைன் வகுப்பு குறித்து பிரதமரிடம் புகார் அளித்த மழலை!

Shanmugapriya

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்…!

Lekha Shree

விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றது

Tamil Mint

பிரசாந்த் கிஷோர் பெயரில் மோசடி : காங்கிரஸ் தலைவர்களுக்கு விபூதியடித்த மர்மநபர்கள்…!

sathya suganthi