பழிவாங்க துடிக்கும் குரங்கு….வீட்டிலேயே பயந்து ஒளிந்து கொண்டிருக்கும் ஆட்டோ ஓட்டுநர்..!


கர்நாடக மாநிலத்தில் தன்னை பிடித்து கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை 22 கிலோ மீட்டர் பயணித்து வந்து குரங்கு ஒன்று பழிவாங்க காத்துக் கொண்டிருக்கிறது.

கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் பகுதியில் உள்ள பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு குரங்கு ஒன்று புகுந்து அட்டகாசம் செய்து வந்த நிலையில், வனத்துறையினர் குரங்கை பிடிக்க திட்டமிட்டு பள்ளிக்கு வந்தனர். ஆனால் குரங்கை எளிதாக பிடிக்க முடியாத காரணத்தால் அந்த ஊரைச் சேர்ந்த பொது மக்கள் உதவியை வனத்துறையினர் நாடினர். அப்போது அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர் ஜெகதீசன் என்பவர் குரங்கை திசை திருப்பி பிடிக்க முயன்றார். இதனால் கடும் கோபம் அடைந்த குரங்கு ஜெகதீசன் மேல் பாய்ந்து பயங்கரமாக தாக்கியது.

Also Read  என்னயா சொல்றீங்க… முத்தம் கொடுக்க தடை செய்யப்பட்ட பகுதியா?

இதையடுத்து வனத்துறையினர் குரங்கை மடக்கி பிடித்து 22 கிலோ மீட்டர் தொலைவில் குரங்கை விட்டு வந்துள்ளனர். சில மணி நேரத்தில் மீண்டும் குரங்கு அந்த ஆட்டோ ஓட்டுனரை தேடி வந்து ஆட்டோவில் மேல் குதித்து ஆட்டோவின் கவரை நாசமாக்கி ஜெகதீசனை தாக்கியுள்ளது. இதனால் அவர் பயந்து போய் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து வருகிறார்.

இந்த சம்பவம் நடந்து ஏழு நாட்கள் கடந்த நிலையிலும் அந்த குரங்கு அவரது வீட்டையே சுற்றி சுற்றி வருகிறது. இதனால் அவர் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகிறார்.

Also Read  ஈஸ்டரை கொண்டாடும் லண்டன் குரங்குகள்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கண்ணுக்கு தெரியாத சிற்பம்… இவ்வளவு லட்சத்திற்கு விற்பனையா?

Lekha Shree

பொழுதுபோக்கிற்காக மீன்பிடித்த நண்பர்கள்… ஒரேநாளில் லட்சாதிபதிகளான விநோதம்..!

Lekha Shree

ஆளே இல்லாமல் வந்த புல்லட்… அதிர்ச்சியில் உறைந்த மக்கள்… வைரலாகும் வீடியோ..!

Lekha Shree

நான்கு கால்களுடன் பிறந்த கோழி குஞ்சு! – வைரலாகும் புகைப்படம்

Shanmugapriya

ஒவ்வொரு வீட்டினருக்கும் ஹெலிகாப்டர்!! சுயேட்சை வேட்பாளரின் பிரம்மாண்ட வாக்குறுதிகள்..

HariHara Suthan

பிரேக் அப்பை தவிர்க்க புதிய வழி சொல்லும் காதல் ஜோடி…!

Lekha Shree

வினோத திருமணம்: சேலை கட்டிய மணமகன்… பட்டு வேட்டியில் மணமகள்…!

Lekha Shree

ஐ லவ் யு சொல்லும் 2 வயது கிளி! – வைரலாகும் வீடியோ

Shanmugapriya

பல பெண்கள் No சொன்ன விரக்தியில் Boyfriend for Rent என்ற புதிய முறையை அறிமுகம் செய்த இளைஞர்! – இது காதலர் தின ஸ்பெஷல்!

Tamil Mint

கழிவறைக்கு கதவு இல்லை! – ஆனால், 6.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட வீடு!

Shanmugapriya

மாயமான பெண் 10 ஆண்டுகள் கழித்து கிடைத்த சம்பவம்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!

Lekha Shree

“அடேங்கப்பா” – 100 வருடங்கள் கழித்து வெளிவரப்போகும் படம்… இதை உங்களால் பார்க்க முடியாது!

Lekha Shree