ஸ்டாலின் முதல்வராக வேண்டுதல்… நிறைவேறியதால் தீக்குளித்த நபர்… கரூரில் பரபரப்பு சம்பவம்!


ஸ்டாலின் முதல்வரானால் தீக்குளிப்பதாக வேண்டிய நபர் ஒருவர் அதன்படி தீக்குளித்து மரணித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் லாலாப்பேட்டையை சேர்ந்தவர் உலகநாதன். இவருக்கு வயது 62. கரூர் போக்குவரத்து துறையில் நடத்துனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

Also Read  தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை

இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். கரூர் மன்மங்கலம் பகுதியில் உள்ள புது காளியம்மன் கோயிலில் உலகநாதன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து இறந்துள்ளார்.

இவர் தீக்குளிப்பதற்கு முன்னர் இரண்டு பக்க கடிதம் ஒன்றை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எழுதி வைத்துள்ளார். அதனை தற்போது போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

Also Read  கொரோனா பரவல் அதிகரிப்பு - முழு ஊரடங்கு அறிவிப்பு!

அதில், “ஸ்டாலின் முதல்வராக வேண்டும், செந்தில் பாலாஜி அமைச்சர் ஆக வேண்டும் என புது காளியம்மன் கோயிலில் வேண்டினேன்.

அதன்படி திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார். அதேபோல செந்தில் பாலாஜியும் அமைச்சராக பொறுப்பேற்றார்.

Also Read  தேசிய பறவை மயிலுக்கு போலீசார் தேசியக்கொடி போர்த்தி மரியாதை

என் வேண்டுதல் நிறைவேறியதால் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொள்கிறேன். எனது மரணத்திற்கு வேறு காரணமில்லை” என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஸ்டாலின் சைக்கிள் சவாரி: குஷியில் திமுக தொண்டர்கள்

Tamil Mint

பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களுக்கு முதல்வர் நிவாரணம்

Tamil Mint

போராட்ட வழக்குகள் வாபஸ் – சட்டசபையை அசர வைத்த மு.க.ஸ்டாலின் உரை…!

sathya suganthi

சென்னையில் இடியுடன் கொட்டித் தீர்த்த கனமழை…!

Lekha Shree

தமிழகம்: டெல்டா பிளஸ் வைரஸால் 3 பேர் பாதிப்பு..!

Lekha Shree

காந்தியைப் போல் நேதாஜி படமும் ரூபாய் நோட்டில் வருமா?

Tamil Mint

தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அறிவித்தது தமிழக அரசு

Tamil Mint

சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது…!

Lekha Shree

சமூகவலைதளங்களில் இழிவான கருத்து…! கிஷோர் கே.சாமி மீது நடிகை ரோகிணி புகார்…!

sathya suganthi

சிவசங்கர் பாபா வழக்கு – சுஷில் ஹரி பள்ளி ஆசிரியை தலைமறைவு!

Lekha Shree

“இலங்கையை சேர்ந்த நிழல் உலக தாதாக்கள்சுமார் 10 பேர் தமிழகத்தில் பதுங்கல்”

Tamil Mint

தமிழகத்தில் ஊரடங்கை நீடிக்க பரிந்துரை..!

Lekha Shree