ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா…! போட்டிகள் நடத்தப்படுமா?


டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானின் டோக்கியோ நகரில் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய இந்த தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது நடைபெற உள்ளத.

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read  கொரோனாவின் கடும் பாதிப்பை குறைக்கும் உடற்பயிற்சி! முழு விவரம் இதோ..!

மேலும், இதை ஒலிம்பிக் 2020 தலைமை நிர்வாக அதிகாரியும் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், அந்த நபர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

கொரோனா பாதிக்கப்பட்டவர் எந்த நாட்டு குடிமகன் என்பதை தெரிவிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டிருப்பதாக ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

Also Read  ஐபிஎல் 2022: இரு புதிய அணிகளுக்கான டெண்டர் ஆகஸ்டில் துவக்கம்!

தொற்றுக்கு உள்ளானவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்றும் விளையாட்டு வீரர் அல்ல என்றும் கூறியுள்ளனர். மேலும், அந்த நபர் விளையாட்டு ஏற்பாடுகளை வந் செய்ய வதவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 115க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.

Also Read  கொரோனா அப்டேட் - தமிழகத்தில் ஒரேநாளில் 478 பேர் உயிரிழப்பு..!

இது ஒலிம்பிக் போட்டிகளுக்கு செல்லும் மிகப்பெரிய இந்திய குழு என்பதும் 18 விளையாட்டுகளை உள்ளடக்கிய மொத்தம் 69 போட்டிகளில் இந்தியா பங்கேற்பதும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆக்சிஜன் தட்டுப்பாடு…. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் நிதியுதவி..!

Lekha Shree

பிப்ரவரியில் மினி ஏலம்: ஐபிஎல் 2021 போட்டி இந்தியாவில் நடக்குமா?

Tamil Mint

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மழையால் ரத்து…!

Lekha Shree

இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்றது

Tamil Mint

இந்தியா இங்கிலாந்து முதல் ஒருநாள் – சில துளிகள்…!

Devaraj

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 – 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!

Jaya Thilagan

சதத்தால் சாதனை படைத்த சஞ்சு சாம்சன்!

Devaraj

”மனசு வலிக்கிறதுடா சாரி” அந்நியன் மீம் போட்டு மஞ்ரேக்கரை கலாய்த்த அஷ்வின்!

sathya suganthi

ஐபிஎல்லில் இளம் வயதில் அரை சதம் விளாசிய வீரர்கள்!

Jaya Thilagan

4-வது டெஸ்ட் போட்டி: இந்திய பவுலர்களின் சூழலில் சுருண்டது இங்கிலாந்து!!!

Lekha Shree

ஷாக் கொடுத்த தோனி அவுட்!

Tamil Mint

ஐபிஎல்லில் விளையாடுவதை ஜோ ரூட், ஸ்டார்க் தொடர்ந்து புறக்கணிப்பதற்கு என்ன காரணம்?

Tamil Mint