இந்தியா: அரிய வகை நோயால் வருடத்தில் 300 நாட்கள் தூங்கும் நபர்…!


ராஜஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் ஹைபர்சோம்னிய (Hypersomnia) என்ற மிக அரிதான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் வருடத்துக்கு 300 நாட்கள் தூக்கத்திலேயே இருக்கிறார்.

ராஜஸ்தானின் நகவுரில் பாத்வா என்ற கிராமத்தில் வசிப்பவர் புர்க்காராம். இவருக்கு வயது 42. இவருக்கு தூக்கத்திலேயே சாப்பாடு, குளியல் என குடும்பத்தினர் சேவகம் செய்து வருகின்றனர்.

Also Read  தமிழக ஆளுநர் திடீர் டெல்லி பயணம்

இவர் வருடத்தில் 300 நாட்கள் தூக்கத்திலேயே கழிக்கிறார். பொதுவாக நாளொன்றுக்கு மனிதர்களுக்கு 6 முதல் 8 மணி நேர உறக்கம் அவசியம்.

ஆனால், இவர் ஒருமுறை தூங்க ஆரம்பித்தால் 25 நாட்களுக்கு தொடர்ச்சியாக தூங்குகிறார். அப்படி தூங்க ஆரம்பித்தால் இவரை எழுப்புவது கடினம்.

23 ஆண்டுகளுக்கு முன்பாக இவருக்கு இந்த அரிதான நோய் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் 15 மணி நேரம் தூங்கி கொண்டு இருந்தார். பிறகு படிப்படியாக அதிகரித்து இப்போது 25 நாட்களுக்கு தொடர்ச்சியாக தூங்குகிறார்.

இதோடு புர்க்காராமுக்கு கடுமையான தலைவலியும் இருந்து வருகிறது. இதுகுறித்து கூறுகையில் புர்க்காராம், “இது ஒரு கொடிய நோய். மற்றவர்களுக்கும் கஷ்டம்… எனக்கும் கஷ்டம்” என கூறினார்.

Also Read  சீனாவிடம் நிதி பெற்றாரா சோனியா? பகீர் புகார்

இவருக்கு படுக்கையிலேயே குளியல் நடக்கிறது. ஒருவேளை குளிக்கவில்லை என்றால் உடலெல்லாம் புண்ணாகிவிடும் என கூறுகின்றனர்.

இத்தகைய கொடிய நோய் புர்க்காராமுக்கு இருந்தாலும் மனைவி லட்சுமி தேவி மற்றும் தாய் கன்வரி தேவி ஆகிய இருவரும் இவருக்கு விரைவில் இந்நோய் குணமாகும் என நம்பிக்கையோடு இருக்கின்றனர்.

Also Read  சேவை கட்டண உயர்வை ஒத்திவைத்த ஜியோ... குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 10 குறைப்பு! – தேர்தல் யுத்தியா?

Shanmugapriya

திருமணத்தன்று மணமகள் உயிரிழப்பு! உடனேயே மணமகளின் தங்கையை திருமணம் செய்துகொண்ட மணமகன்!

Shanmugapriya

3 நாள் மனைவியுடன்… 3 நாள் காதலியுடன்…. ஜார்கண்ட் நபருக்கு கிடைத்த வித்யாசமான தண்டனை!

Tamil Mint

உலக தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த 3 இந்திய பல்கலை…! தேசிய கல்விக் கொள்கைதான் காரணமாம்…!

sathya suganthi

35 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த முதல் பெண் குழந்தை – வித்தியாசமாக வரவேற்ற குடும்பத்தினர்!

Lekha Shree

கொரோனா மருத்துவமனைகளாக மாற்றப்படும் ராணுவ முகாம்கள்…!

Devaraj

நாய்களையும் விட்டு வைக்காத காம கொடூரர்கள் – ஊரடங்கிற்கு பின் பாலியல் கொடுமைகள் அதிகரிப்பு; அதிர்ச்சி தகவல்கள்

Devaraj

இந்தியாவில் 6 மாதத்தில் கொரோனா 3வது அலை – மத்திய அரசின் வல்லுநர் குழு தகவல்!

Lekha Shree

சிவனின் கையில் மதுபானம்… சர்ச்சையை கிளப்பிய இன்ஸ்டாகிராம்..!

Lekha Shree

தனது கணவர் கைது குறித்து ஷில்பா ஷெட்டியின் பரபரப்பு வாக்குமூலம்..!

suma lekha

உ.பி. முதலமைச்சர் யோகிக்கு கொரோனா…! தடுப்பூசி போட்டுக்கொண்ட போதிலும் நோய் பாதிப்பு…!

Devaraj

கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள 21 டிப்ஸ்கள்…!

Devaraj