ஏன் விவாகரத்து செய்தோம்? அமீர்கான் மற்றும் மனைவி கிரண் ராவ் இணைந்து வெளியிட்ட வீடியோ!


பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது மனைவி கிரண் ராவ்வை விவாகரத்து செய்துவிட்டதாக அறிவித்தார்.

அமீர்கானின் இந்த அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அமீர்கானின் விவாகரத்து விவகாரம் நாடு முழுவதும் பேசு பொருளாக ஆகி உள்ளது.

இந்நிலையில், நடிகர் அமீர்கான் மற்றும் அவரது இரண்டாவது மனைவி கிரண் ராவ் இருவரும் ஒன்றாக அமர்ந்து கைகளை கோர்த்தபடி வெளியிட்டிருக்கும் வீடியோ ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது.

அதில், தங்களின் இந்த திடீர் விவாகரத்து முடிவு ரசிகர்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும் என்றும் ஆனால் தாங்கள் இருவரும் இந்த முடிவால் ரொம்பவே சந்தோஷமாக உள்ளோம் என்றும் அமீர்கான் கூறியுள்ளார்.

கணவன் – மனைவி என்கிற உறவை மட்டுமே தாங்கள் பிரிவதாக அறிவித்துள்ளோம் எனக் கூறிய அவர், மகன் ஆசாத்துக்காக இருவரும் ஒரே குடும்பமாக எப்போதுமே நட்பு பாராட்டி வாழ்வோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  நயன்தாரா படம் குறித்த சூப்பர் அப்டேட் வெளியிட்ட விக்னேஷ் சிவன்..!

மேலும் இதனை ஒரு முடிவாக பார்க்காதீர்கள் என்றும் இது ஒரு புதிய தொடக்கத்தின் ஆரம்பம் என்றும் குறிப்பிட்டுள்ளார் அமீர்கான்.

இருவரும் இணைந்து வாழ்ந்த கடந்த 15 ஆண்டுகளும் எங்களுக்கு பொன்னான ஆண்டாகவே இருந்தது என்றும் வாழ்க்கையை நிறைய சந்தோஷ தருணங்களுடன் வாழ்ந்து முடித்து விட்டோம் என்றும் அமீர்கான் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  குளிர்காலத்துக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை குறையும் - மத்திய அமைச்சர்

இனி இருவரும் சுதந்திர பறவையாக பறக்க ஆசைப்படுகிறோம் என தெரிவித்த அவர், ரசிகர்கள் தங்கள் விருப்பத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என இருவரும் அந்த வீடியோவில் கூறியுள்ளனர்.

இதனிடையே பாலிவுட்டில் இருந்து நடிகர் அமீர்கானை தடை செய்ய வேண்டும் என அமீர்கானுக்கு எதிராக #Boycott_AamirKhan என்ற ஹாஷ்டேக் இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது.

Also Read  இனியும் உன்னோடு வாழ முடியாது… காதல் கணவரிடம் விவாகரத்து கோரிய பிரபல நடிகை…!

மேலும், அமீர்கான் லவ் ஜிகாத் செய்கிறார் என்கிற குற்றச்சாட்டுகளையும், இந்து பெண்களை திருமணம் செய்து முஸ்லிம் குழந்தைகளை பெற்று பின்னர் மீண்டும் அதே வேலையை செய்து வருகிறார் என்றும் விமர்சித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்…!

Lekha Shree

நேற்று ஜனநாயக கடமை; இன்று தொழில் பக்தி – அசத்தும் ‘தளபதி’ விஜய்!

Lekha Shree

சுரேஷ் ரெய்னாவுடன் விஜய் டிவி பிரபலம் எடுத்து கொண்ட புகைப்படம் இதோ…!

Lekha Shree

2021-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிப்பு: மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு பத்ம விபூஷன் விருது! முழு விவரம் இதோ.!

Tamil Mint

கர்ணன் டீசர் ரிலீஸ் எப்போது?… ஒற்றை வார்த்தை தனுஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

Jaya Thilagan

உச்சகட்ட கோவத்தில் பாபா பாஸ்கர்… சண்டையிட்டு கொண்ட ‘குக்கு வித் கோமாளி’ பிரபலங்கள்…!

Lekha Shree

நடிகர் சோனு சூட்டுக்கு கொரொனா தொற்று உறுதி..ரசிகர்கள் கவலை..

HariHara Suthan

‘நான் முதல் ஆளாய் வந்து நிற்பேன்’… தாய் சங்கத்திற்கு பாரதிராஜா விடுத்த எச்சரிக்கை…!

malar

பிரிட்டன் விமானங்களுக்கான தடை மேலும் நீட்டிக்கப்படலாம்

Tamil Mint

குஷ்பூவுக்கு நோ சொன்ன சன் டிவி? வரவேற்ற ஜீ தமிழ்!

Tamil Mint

கொரோனா பாதிப்பால் நேற்று 1,129 பேர் உயிரிழந்துள்ளனர்

Tamil Mint

‘Say No to Plastic’ – அட்டை பெட்டிகளில் தண்ணீர் விற்கும் நபர்கள்!

Lekha Shree