சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் காலமானார்


தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளரும் லண்டன் ஐபிசி வானொலியின் முன்னாள் அறிவிப்பாளருமான சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் இன்று காலை எட்டு மணி அளவில் காலமானார்.

தமிழின் முதல் கிரிக்கெட் வர்ணனையாளர், சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.

1980-ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளின் தமிழ் வர்ணனையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அப்போது தமிழ்நாடு கேரள அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் தமிழ் வர்ணனையைச் செய்தார்.

1982-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இந்திய இங்கிலாந்து போட்டியில் இவரது தமிழ் வர்ணனையைச் செவிமடுத்த அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர், இவரை நேரில் அழைத்துப் பாராட்டினார்.

Also Read  21 வருடம் விளையாடிய கிளப்பை விட்டு விலகும் மெஸ்ஸி… இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

1999-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் வர்ணனையாளராக செயலாற்றும்படி ஐ.பி.சி தமிழ் வானொலி விடுத்த அழைப்பை ஏற்று, இலண்டன் சென்று 45 நாட்கள் வர்ணனை செய்தார். மீண்டும் 2004 ஆம் ஆண்டு இலண்டன் சென்று உலகக் கிரிக்கெட் போட்டிகளை தமிழில் வர்ணனை செய்தார். 

2007-ஆம் ஆண்டு சிங்கப்பூர் சென்று ESPN – STAR CRICKET தொலைக்காட்சிக்காக, தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 20:20 உலகக்கோப்பை கிரிக்கெட்டை தமிழில் வர்ணனை செய்தார். இதுவரை 35 கிரிக்கெட் மற்றும் ஹாக்கி போட்டிகளின் வர்ணனையாளராக சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்.

Also Read  அக்டோபர் 17ம் தேதி தொடங்குகிறது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள்?

இவரது இலக்கிய நயம் மிக்க தமிழ் வர்ணனையால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன். 2002 ஆம் ஆண்டு இவரை ஈழத்திற்கு நேரில் அழைத்து விருந்தளித்துப் பாராட்டினார். அந்த சந்திப்பு அனுபவத்தை “அழைத்தார் பிரபாகரன்” எனும் நூலாகப் பதிவு செய்துள்ளார் அப்துல் ஜப்பார்.

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக ஆசிரியர், ஊடகவியலாளர், வர்ணனையாளர் என பன்முகம் கொண்ட அப்துல் ஜப்பார் இன்று காலமான செய்தி பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Also Read  4-வது டெஸ்ட் போட்டி: 4 விக்கெட்டுகள் இழந்து இங்கிலாந்து அணி திணறல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டோக்கியோ பாராலிம்பிக்: வட்டு எறிதல் போட்டியின் இறுதி முடிவு நிறுத்திவைப்பு!

suma lekha

பாராலிம்பிக்ஸ்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்… இந்திய வீரர் சுமித் அண்டில் உலக சாதனை..!

Lekha Shree

இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: பகல்-இரவு ஆட்டத்தில் சாதிக்குமா இந்தியா?

Lekha Shree

ஐபிஎல் 2021: “எங்கள் வழி தனி வழி..!” – மும்பையை வீழ்த்தியது குறித்து கொல்கத்தா கேப்டன் பெருமிதம்..!

Lekha Shree

மாற்று வீரர்களை வாங்க முடியாமல் திணறும் சென்னை சூப்பர் கிங்ஸ்!

Devaraj

கடைசி டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி – ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி!

Lekha Shree

‘ஒரு வெற்றி பல சாதனை’… 18 வயதில் அமெரிக்க கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீராங்கனை எம்மா…!

Lekha Shree

இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு உறுதி: அரையிறுதிக்கு முன்னேறிய லவ்லினா!

suma lekha

டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவிற்கு சிறந்த நாள்… ஏன் தெரியுமா?

Lekha Shree

4-வது டெஸ்ட் போட்டி: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறுமா?

Lekha Shree

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: 170 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்..!

Lekha Shree

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை போட்டிகள்..!

Lekha Shree