திருமணத்துக்கு மறுத்த இளைஞர் மீது ஆசிட் வீச்சு!!! 2 குழந்தைகளின் தாய் கைது…


கேரளாவில் திருமணம் செய்துகொள்ள மறுத்த இளைஞரின் மீது 2 குழந்தைகளின் தாய் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் இடுக்கியை அடுத்த அடிமாலி பகுதியை சேர்ந்தவர் ஷீபா. இவருக்கும் திருவனந்தபுரத்தை அடுத்த பூஜப்புரா பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் பின்னர் காதலிக்க தொடங்கினர்.

Also Read  வரதட்சணை கேட்டு ஆணியால் குத்தி கொடுமை! நாட்டையே உலுக்கிய விஸ்மயா மரணம்…!

இந்த நிலையில் ஷீபா, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அருண்குமாரை வற்புறுத்தினார். அப்போதுதான் ஷீபா, திருமணம் ஆனவர் என்பதும், அவருக்கு 2 குழந்தைகள் இருப்பதும் அருண்குமாருக்கு தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் ஷீபாவை சந்திப்பதை தவிர்த்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஷீபா, அருண்குமாரை பேச வருமாறு அடிமாலிக்கு அழைத்தார்.அவரும் நண்பர்களுடன் நேற்று அடிமாலி சென்றார். அங்குள்ள இரும்பு பாலம் அருகே அருண்குமாரும், ஷீபாவும் தனியாக சந்தித்து பேசினர். சிறிதுநேரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

Also Read  போதை பொருள் வழக்கு - விசாரணைக்கு ஆஜரான நடிகை ரகுல் ப்ரீத் சிங்..!

இதில் ஆத்திரம் அடைந்த ஷீபா, மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து அருண்குமார் மீது வீசினார். அவர் அலறிதுடித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும், அவரது நண்பர்களும் ஓடிவந்தனர். அவர்கள் அருண்குமாரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுபற்றி அடிமாலி போலீசில் புகார் செய்யப்பட்டது. அருண்குமார் போலீசாரிடம் கூறும்போது, ஷீபாவுடனான தொடர்பு மற்றும் திருமணத்திற்கு மறுத்ததால் அவர் பணம் கேட்டு மிரட்டியதும், பணம் கொடுக்க மறுத்ததால் தன் மீது ஆசிட் வீசியதாகவும் கூறினார்.

Also Read  கேரள வரலாற்றில் முதல்முறை… விஸ்மயா வழக்கில் கைதான கணவர் பணி நீக்கம்…!

இதையடுத்து போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.பின்னர் ஷீபா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி – சர்ச்சை தீர்ப்பை வழங்கிய பஞ்சாயத்து!

Lekha Shree

தஞ்சை: அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையை கடத்திய மர்மப்பெண் கைது..!

Lekha Shree

சீன செயலிகள் மூலம் இந்தியர்களிடம் இருந்து ரூ.150 கோடி சுருட்டல்…!

Lekha Shree

கோவை: கிராம உதவியாளர் காலில் விழுந்த சம்பவத்தில் திடீர் திருப்பம்!

Lekha Shree

கொலுசுக்காக காலை வெட்டிக் கொன்ற கொடூரன்..!

Lekha Shree

தன்னை சிறார் வதை செய்த பாதிரியாரை மணக்க விரும்பும் இளம்பெண்… கேரளாவில் பரபரப்பு..!

Lekha Shree

நடிகை மீரா மிதுன் மீண்டும் கைது..!

Lekha Shree

தற்கொலை செய்துகொண்ட விஸ்மயா நடிகர் காளிதாசுக்கு எழுதிய கடிதம்…!

Lekha Shree

பெண்ணாக மாற விருப்பம் தெரிவித்த தம்பியை அடித்து கொலை செய்த அண்ணன்….

VIGNESH PERUMAL

விஸ்மயா மர்ம மரணம்! சகோதரர் சொன்ன பகீர் தகவல்கள்!

Lekha Shree

மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது – ஸ்டாலின்

Lekha Shree

‘ஜோக்கர்’ பட பாணியில் ரயிலில் பயணிகளை சரமாரியாக குத்திய நபர்..! 17 பேர் படுகாயம்..!

Lekha Shree