மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் அதர்வா?


மலையாள ஹிட் படமான அஞ்சாம் பத்திரா என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நாயகனாக நடிக்கிறார் நடிகர் அதர்வா.

மலையாளத்தில் வெளிவந்த ஜோசப் என்ற படம் விசித்திரன் என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ரீமேக் ஆகிறது.

இது தவிர த்ரிஷ்யம் 2, டிரைவிங் லைசென்ஸ், ஐயப்பனும் கோஷியும் படங்களும் ரீமேக் ஆக இருக்கிறது. இப்படி மலையாள படங்கள் பல ரீமேக் ஆகிறது.

அந்த வகையில் அஞ்சாம் பத்திரா என்ற படமும் ரீமேக் ஆக உள்ளது. இப்படத்தை மானுவேல் தாமஸ் இயக்கியிருந்தார். ஆஷிக் உஸ்மான் தயாரிப்பில் வெளியான இந்த படத்தில் குஞ்சாக்கோ போபன், சரப்பு தீ, உன்னிமயா பிரசாத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

Also Read  'பாடும் நிலா' எஸ்பிபி-க்கு சினிமாவில் பாடும் வாய்ப்பு எப்படி கிடைத்தது தெரியுமா?

போலீசை மட்டும் குறிவைத்து தொடர் கொலைகள் செய்யும் சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிப்பதே இக்கதையின் கரு. இந்தப்படம் 6 கோடியில் தயாரிக்கப்பட்டு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியானது.

ஆனால், படம் வெளியாகி சுமார் 60 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இந்த படம் தற்போது தமிழ் மற்றும் இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர்.

Also Read  '5 years of இறைவி' - சீன் பேப்பரை லீக் செய்த கார்த்திக் சுப்புராஜ்!

ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட், ஆஷிக் உஸ்மான் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஏபி இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளன.

இதில் தமிழ் ரீமேக்கில் நாயகனாக நடிகர் அதர்வா நடிக்க உள்ளது உறுதியாகி இருக்கிறது. மேலும், விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

Also Read  உதவிகள் கேட்டு நடிகர் சோனு சூட்டிற்கு குவியும் குறுஞ்செய்திகள்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தளபதியின் 65 ஆவது படத்தை இயக்குகிறார் நெல்சன் திலீப்குமார்

Tamil Mint

ஈஸ்வரன் படம் வெளியாவதில் சிக்கல்: ”100% இருக்கைகள் குறைக்கப்பட்டால் மாஸ்டர் மட்டுமே வெளியாகும்”!

Tamil Mint

விஜய் மகனுக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படும் ‘ராட்சசன்’ பட நடிகை!

Lekha Shree

மறுபடியும் ஏமாந்துடாதீங்க மக்களே… வைகைப்புயல் வடிவேல் பெயரில் வைரலாகும் வீடியோ..!

HariHara Suthan

கொரோனாவால் ‘தொரட்டி’ பட கதாநாயகன் ஷமன் மித்ரு உயிரிழப்பு…!

sathya suganthi

நேற்று ஜனநாயக கடமை; இன்று தொழில் பக்தி – அசத்தும் ‘தளபதி’ விஜய்!

Lekha Shree

பூஜா ஹெக்டேவா? ராஷ்மிகா மந்தனாவா?… தளபதி விஜய்யுடன் அடுத்து போடப்போவது யார் தெரியுமா?

HariHara Suthan

நம்பி நாரயணனின் வாழ்க்கை படமான ’ராக்கெட்ரி’ ட்ரைலர் வெளியானது – அட முன்னனி நடிகரான இவரும் நடித்துள்ளாரா?

HariHara Suthan

நடிகை ஐஸ்வர்யா மேனனின் மொட்டை மாடி போட்டோ ஷூட்.. காட்டுத் தீ போல் பரவும் புகைப்படங்கள் இதோ..!

HariHara Suthan

“நமது வீரத்தை பறைசாற்றும் சின்னம்” – வெளியானது ‘வாடிவாசல்’ படத்தின் டைட்டில் லுக்…!

Lekha Shree

அது மட்டும் பண்ண மாட்டேன்: சாரி சொல்லும் சாய் பல்லவி

Tamil Mint

விதவையான கேமரா…! கே.வி.ஆனந்த் மரணத்துக்கு கண்ணீர் சிந்தும் பிரபலங்கள்!

Devaraj