அஸ்வினை கலாய்க்கும் நெட்டிசன்கள்..என்ன நடந்தது?


குக் வித் கோமாளி மூலம் பிரபலமடைந்த அஸ்வின் நடிக்கும் படத்தின் ஆடியோ லாஞ்சில் அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் குமார் நாயகனாக நடித்துள்ளார். அவந்திகா, தேஜு அஸ்வினி, ‘குக் வித் கோமாளி’ புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஹரிஹரன் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு பேசினர்.

CWC Ashwin Kumar's reaction about his arrest - Tamil News - IndiaGlitz.com

இதில் பேசிய அஸ்வின் குமார், ” எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்குங்க. கதை பிடிக்கவில்லை என்றால் நான் தூங்கிவிடுவேன். இதுவரை நான் கேட்ட 40 கதைகளில் நான் தூங்கி விட்டேன். ஆனால், நான் தூங்காத ஒரு கதை தான் ’என்ன சொல்ல போகிறாய்’. அந்த கதை பிடித்துப்போய் நான் நடிக்க ஓகே சொல்லிவிட்டேன்.

Also Read  இணையத்தில் பகிரப்படும் குக் வித் கோமாளி நட்சத்திரங்களின் சம்பள விவரம்! - யாருக்கு அதிகம் தெரியுமா?

மேலும், கதை, தயாரிப்பாளர், மியூசிக் என்று ஏனோ தானோ இல்லாமல் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து இருக்கிறோம். ஏன் என்றால் நான் நிறைய பார்த்துவிட்டேன். ஏதோ படம் கொடுக்க வேண்டும் என்று இல்லாமல் எல்லா கோணத்திலும் யோசித்து தான் செய்து இருக்கிறோம். இதில் என்னுடைய உழைப்பு மட்டும் இல்ல எல்லாருடைய உழைப்பும் இருக்கிறது” என்று அஸ்வின் கூறினார்.

Enna Solla Pogirai Film (2022): Forged | Teaser | Songs | Trailer | Unlock  Date - TheNewsTrace

இறுதியாக, “ நான் அழகா இருக்கேனு நினைச்சிங்கனா என் அப்பா அம்மாக்கு நன்றி சொல்லுங்க, நான் நல்லா நடிக்கிறனு நினைச்சிங்கனா எனக்கு நன்றி சொல்லுங்க. அழகனா இருக்க மட்டுமிருக்க ஆசை இல்ல, நடிகனாவும் இருக்கனும்னு நினைக்கிறேன்” என்று அஸ்வின் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Also Read  "தேர்வு உயிரை விட பெரிது அல்ல" - நடிகர் சூர்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..!

பின்னர் பேசிய இயக்குநர் ஹரிஹரன், ”AK அதாவது Ashwin kumar sign பண்றதுக்கு முன்னாடி அவ்வளவு impact இல்ல. அவரோட ரசிகர்கள் எனக்கு மெசேஜ் பண்ணுறப்போதான், இந்த படத்தை அறிமுக ஹீரோகூட பண்ணுற மாதிரியே தெரில, ஒரு சூப்பர் ஸ்டார் கூட பண்ணுற மாதிரி தான் தோணுச்சி” என்று தெரிவித்தார்.

ஹரிஹரனின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. இன்னும் ஒரு படமே ரிலீஸ் ஆகல, அதுக்குள்ள சூப்பர்ஸ்டார் ரேஞ்சுக்கு பேசுறது தப்பு என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read  ’நான் ஆணவம் பிடிச்சவன் கிடையாது’- நடிகர் அஸ்வின் விளக்கம்!

மேலும், அஸ்வின் பேசிய வீடியோவையும் ஷேர் செய்து, ”இவ்வளவு ஆணவம் வேண்டாம். படம் ரிலீஸாகி வெற்றி பெற்ற பிறகு பேச வேண்டியதை ஆடியோ லாஞ்சிலேயே பேசக்கூடாது. ஒரு வேலை படம் தோல்வியடைந்தால் என்ன ஆகும்?” என்று நெட்டிசன்கள் அஸ்வினை விமர்சித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கணவர் ராஜ்குந்த்ராவை பிரியும் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி?

Lekha Shree

“புதுசா எவன் மா கதை சொல்றான்”: வெளியானது ‘Annabelle Sethupathi’ படத்தின் ட்ரைலர்.

mani maran

ராஷ்மிகா மந்தனாவிற்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் இவரா? ரசிகர்கள் அதிர்ச்சி!

Lekha Shree

வெளியான மூன்று நாட்களில் ‘தலைவி’ வசூல் செய்தது எவ்வளவு தெரியுமா?

suma lekha

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபுக்கு கொரோனா தொற்று உறுதி…!

Lekha Shree

தனுஷின் ‘மாறன்’ மோஷன் போஸ்டர் நாளை வெளியீடு…!

Lekha Shree

ஷாருக்கான்-அட்லீ படத்தின் டைட்டில் ‘ஜவான்’ இல்லையாம்…! வெளியான ‘கொலமாஸ்’ அப்டேட்..!

Lekha Shree

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகர் தவசிக்கு புற்று நோய் பாதிப்பு: சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பு

Tamil Mint

“ஒரிஜினல் கேங்ஸ்டர்ஸ்” – வைரலாகும் ரஜினி – மோகன் பாபு மாஸ் புகைப்படங்கள்!

Lekha Shree

தேம்பி அழும் குக் வித் கோமாளி புகழ்! வைரலாகும் வீடியோ…

HariHara Suthan

’மாமனிதன்’: சீனு ராமசாமி கொடுத்த சூப்பர் அட்டேட்!

Jaya Thilagan

“சூப்பர்ஸ்டாருடன் நடிக்கும் கனவு நனவானது” – நடிகர் சதீஷ் நெகிழ்ச்சி..!

Lekha Shree