அரசியலுக்கு வர விரும்பும் பிரபல நடிகர்… எந்த கட்சியில் சேர ஆசைப்படுகிறார் தெரியுமா?


சீன நடிகர் ஜாக்கி சான் தமக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார். ஹாங்காங்கில் பிறந்த ஜாக்கி சான் தனக்கே உரிய பாணியில் பல அதிரடி படங்களில் நடித்து உலக அளவில் புகழ் பெற்றவர்.

இவரது அசாத்தியமான சண்டை காட்சிகளின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை உலகம் முழுவதும் பெற்றுள்ளார். அதிலும் குறிப்பாக இந்தியாவிலும் இவருக்கு ரசிகர்கள் அதிகம்.

Also Read  அசாமில் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 50% இட ஒதுக்கீடு - காங்கிரஸ் வாக்குறுதி!

நடிகராகவும், எழுத்தாளராகவும், இயக்குனராகவும் ஹாங்காங்கில் பல திரைப்படங்கள் பணியாற்றியுள்ளார் ஜாக்கி.

இதனிடையே சீன அரசு ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அப்போது மக்கள் இதை எதிர்த்தனர். ஆனால், ஜாக்கி சான் அப்போது சீனாவுக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக அவரை பலரும் விமர்சித்தனர்.

தற்போது சீன திரைப்பட சங்கத்தின் துணைத் தலைவராக பதவி வகித்து வரும் ஜாக்கி சான் பெய்ஜிங்கில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கருத்துக்கள் இப்போது உலக அளவில் டிரெண்ட் ஆகி வருகின்றன.

அந்நிகழ்ச்சியில் ஜாக்கி சான், “சமீபத்தில் சீனா வேகமாக முன்னேறி வருவதை பல நாடுகளுக்கு நான் சொல்லும்போது உணரமுடிகிறது. எனவே, ஒரு சீன குடிமகனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். உலகம் முழுதுமே ஐந்து நட்சத்திரங்களை உடைய நம் சிவப்பு கொடிக்கு மரியாதை கிடைக்கிறது.

Also Read  முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் தலைமறைவு?

கொடுத்த வாக்குறுதிகளை மிகக் குறைந்த காலத்திலேயே சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறைவேற்றி வருகிறது. இந்த கட்சியில் உறுப்பினராக சேர ஆர்வமாக உள்ளது” என தெரிவித்தார்.

ஜாக்கி சானின் இந்த கருத்து பல்வேறு அனல் பறக்கும் விவாதங்களுக்கு வழிவகை செய்துள்ளது. பலர் அவரது இந்த முடிவை வரவேற்றுவாழ்த்தி வருகின்றனர்.

Also Read  "நான் தினமும் மாட்டு சிறு நீரை குடிக்கிறேன்" - பாஜக எம்பி சர்ச்சை பேச்சு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இளம் நாயகனுடன் இணையும் நடிகை அனுஷ்கா?

HariHara Suthan

காற்றின் மூலம் கருவுற்று குழந்தைப் பேறு – மாயாஜால கதை கூறும் இளம் பெண்

Bhuvaneshwari Velmurugan

பிரபல நடிகருடன் விஜய் டிவி டிடி-யின் முன்னாள் கணவர்! வைரலாகும் புகைப்படம்…

HariHara Suthan

அதிபர் சுட்டுக் கொலை – பிரதமர் மோடி இரங்கல்

sathya suganthi

2 தேசிய விருதுகளை பெரும் ஒத்த செருப்பு..

VIGNESH PERUMAL

உதயநிதியின் ‘கொங்கு’ பிராஜக்ட்! வானதியை டீல் செய்ய கனிமொழியை இறக்கும் திமுக!

Lekha Shree

பிக் பாஸ் டேனி மீது குவியும் பாலியல் புகார்கள்…! நடந்தது என்ன?

Lekha Shree

ரஜினியின் உடல்நிலை குறித்து வந்த செய்திகள் யாவும் வதந்திகள்: ரஜினியின் பிஆர்ஒ ரியாஸ்

Tamil Mint

பாஜக-வுக்கு எதிராக உருவாகும் மெகா கூட்டணி! தேசியவாத காங்கிரஸ் போடும் பலே திட்டம்!

Lekha Shree

நடிகை ஷகிலாவின் மகளை பார்த்துள்ளீர்களா? அஸ்வினுடன் ஷகிலா மகள் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல்..!

HariHara Suthan

தமிழகம்: கோயில்களில் இனி தமிழில் அர்ச்சனை?

Lekha Shree

“எடப்பாடி தொகுதியில் அதிமுக மண்ணை கவ்வும்!” – விஜயபிரபாகரன்

Lekha Shree