ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா – கொந்தளித்த கார்த்தி!


நாகரிக சமுதாயத்தில் கருத்துச் சுதந்திரத்தை நெரிப்பது விரும்பத்தகாதது என நடிகர் கார்த்தி ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா காட்டமான ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

ஒளிப்பதிவு திருத்த மசோதா கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதியில் மாநிலங்களவை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அது நிலை குழுவிற்கு அனுப்பப்பட்டது.

நிலைக் குழு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிக்கையை சமர்ப்பித்தது. தற்போது மீண்டும் 2021ல் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா சட்டப்படி ஒரு முறை தணிக்கைக்கு உள்ளன திரைப்படங்கள் மீண்டும் தணிக்கை செய்ய கூற முடியும்.

Also Read  ரஜினியின் அமெரிக்க பயணம் குறித்து நடிகை கஸ்தூரி கேள்வி - விளக்கமளித்த ரஜினி தரப்பினர்!

மேலும் திரைப்படத்துக்கு கடுமையான சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும். இந்த மசோதா குறித்து கடந்த சில நாட்களாக திரைப்படத்துறையினர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒளிப்பதிவு வரைவு மசோதாவுக்கு நடிகர் கார்த்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “படத்தின் தணிக்கை சான்றிதழை எந்த நேரத்திலும் ரத்து செய்ய ஒன்றிய அரசு அனுமதிக்கும் ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா வாய்ப்புகளையும் தொழில் துறையும் கடுமையாக பாதிக்கும்.

Also Read  வாக்களித்த 'குக் வித் கோமாளி' நட்சத்திரங்கள்… வைரல் புகைப்படங்கள் இதோ…!

திருட்டுத்தனத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்றாலும் நாகரிக சமுதாயத்தில் கருத்து சுதந்திரத்தை நெரிப்பது விரும்பத்தகாதது” என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நடிகர் சூர்யாவும் “சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக தானே தவிர அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல” என ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதாவுக்கு எதிராக குரலெழுப்பியது குறிப்பிடத்தக்கது.

Also Read  பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்…! அதிர்ச்சியில் திரையுலகினர்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகை ஐஸ்வர்யா மேனனின் கலக்கல் கடற்கரை போட்டோஷூட்..!

Jaya Thilagan

‘பிக்பாஸ்’ சாக்ஷியின் காலில் உள்ள டாட்டூவின் பொருள் என்ன தெரியுமா?

Lekha Shree

பர்த்டே பேபி ‘பவித்ரா’ வின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

Lekha Shree

“சூரரைப் போற்று படத்தில் சூர்யா சிறப்பாக நடித்துள்ளார்” – ரஹானே புகழாரம்

Tamil Mint

கிறங்கடிக்கும் அழகு…! ரம்யா பாண்டியனின் புதிய போட்டோ ஷூட்…!

Devaraj

விக்னேஷ் சிவன்-நயன்தாரா திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்?

Lekha Shree

கொரோனா 2ம் அலையின் எதிரொலி – முன்னணி ஹீரோக்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்?

Lekha Shree

“அண்ணாத்த” எனக்கு கடைசி திரைபடமா? கண் கலங்கிய ரஜினி?

HariHara Suthan

மறைந்த நடிகர் விவேக் பேரில் தபால் தலை வெளியிடும் மத்திய அரசு?

Lekha Shree

அரசியலுக்கு வர விரும்பும் பிரபல நடிகர்… எந்த கட்சியில் சேர ஆசைப்படுகிறார் தெரியுமா?

Lekha Shree

“காதலில் விழுந்தேன்”… காதலியின் போட்டோவை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகர்…!

Tamil Mint

மக்களுக்காக களமிறங்கிய சோனு சூட்! – நேரடியாக சந்தித்து உதவி!

Shanmugapriya