மீண்டும் இணையும் “தாமிரபரணி” கூட்டணி: வெற்றி பெறுவாரா விஷால், எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!


தாமிரபரணி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் விஷாலுடன் நடிக்கவுள்ளார் நடிகர் பிரபு.

இயக்குனர் ஹரி இயக்கத்தில், நடிகர்கள் விஷால், பிரபு, விஜயகுமார், நாசர், கஞ்சா கருப்பு, நடிகைகள் மனோரமா, நதியா, முக்தா என திரையுலக பட்டாளமே நடித்து 2007-ஆம் ஆண்டு வெளியான தாமிரபரணி திரைப்படம் தமிழ் சினிமாவில் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. குறிப்பாக அந்தப் படத்தில் சென்டிமென்ட் சரியாக ஒர்க் அவுட் ஆனதால் கிராமப்பகுதிகளில் ரசிகர்கள் பெருமளவில் திரையரங்குகள் பக்கம் அழைத்து வந்தது. அந்தத் திரைப்படம் தான் நடிகர் விஷாலுக்கு திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு நடிகர் விஷாலும் பிரபுவும் இணைந்து எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. இந்த நிலையில் அறிமுக இயக்குனர் வினோத் என்பவர் இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணையும் இந்த ஜோடியின் கூட்டணி நிச்சயம் வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இவர்கள் இணைந்து நடித்த ஆம்பள திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது

Also Read  வெளியானது 'சார்பட்டா பரம்பரை' படத்தின் டிரெய்லர்… ரசிகர்கள் கொண்டாட்டம்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘தளபதி 65’ பர்ஸ்ட் லுக்: விஜய் ரசிகர்களுக்கு இன்று காத்திருக்கும் கொண்டாட்டம்!

Lekha Shree

விஜய்யின் ’பீஸ்ட்’ படத்தில் இணைந்த யோகி பாபு..!

suma lekha

‘வடசென்னை’ ராஜனாக கென் கருணாஸ்? வெளியான ‘மெர்சல்’ அப்டேட்..!

Lekha Shree

வரிசையாக ஓடிடிக்கு செல்லும் படங்கள்… அதிர்ச்சியில் திரையரங்கு உரிமையாளர்கள்..!

Lekha Shree

நடிகர் பொன்னம்பலத்திற்கு உதவிய மெகா ஸ்டார் சிரஞ்சீவி…!

Lekha Shree

சன் டிவி Vs விஜய் டிவி: விரைவில் ஒளிபரப்பாகும் ‘மாஸ்டர் செப்’ நிகழ்ச்சி..!

Lekha Shree

வைரலாகும் அஜித்-சிவகார்த்திகேயனின் அரிய புகைப்படம்…!

Lekha Shree

இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கிய நடிகை ஜோதிகா… முதல்நாளே 1.2 மில்லியன் Followers…!

suma lekha

சத்குருவுடன் ஆனந்த நடனமாடிய நடிகை சமந்தா!

Lekha Shree

‘லிப்ட்’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடிய பாடல் வெளியானது…!

Lekha Shree

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் விஜய் சேதுபதி சந்திப்பு.!

suma lekha

‘சார்பட்டா பரம்பரை’ – யார் அந்த ‘Dancing Rose’? Overnight-ல் பேமஸ் ஆன வில்லன்…!

Lekha Shree