“கே.பி. சார் இல்லாதது வருத்தமளிக்கிறது” – ரஜினிகாந்த் உருக்கம்.!


தாதா சாகேப் பால்கே விருது நான் பெறவுள்ள நிலையில் கே.பி. சார் இல்லாதது வருத்தமளிக்கிறது என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமாவின் தந்தையாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே பெயரில் சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்திய சினிமாவின் உயரிய விருதாக தாதா சாகேப் பால்கே விருது போற்றப்படுகிறது. இந்த விருதினை தமிழ்நாட்டில் இருந்து நடிகர் திலகம் சிவாஜியும், இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரும் பெற்றுள்ளனர். இந்த நிலையில்., 2019-ம் ஆண்டுக்கான இந்த விருது ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால், கோவிட் பெருந்தொற்று காரணமாக விருது வழங்கும் விழா நடத்தப்படாமல் இருந்தது.

Also Read  திருப்பதிக்கு செல்ல தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் - கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

தற்போது நாளை(25-10-2021) டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தாதா சாகேப் பால்கே விருதினை நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்குகிறார். இதற்காக., இன்று விமான நிலையம் புறப்படும் முன்பு போயஸ் கார்டன் இல்லத்திற்கு வெளியே நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ரஜினிகாந்த், “தாதா சாகேப் பால்கே விருது கிடைத்தது ரொம்ப மகிழ்ச்சி, இந்த நேரத்தில் கே.பி. சார் இல்லாதது வருத்தமளிக்கிறது.” என தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

போகிற போக்கில் சசிகலாவுக்கும் குட்டு வைத்த கமல்…!

Devaraj

”திமுக ஆட்சிக்கு வந்தால் மணல் அள்ளலாம்” – செந்தில் பாலாஜி பேச்சால் சர்ச்சை! அதிமுக புகார்!

Lekha Shree

வரும் தேர்தலில் நடிகர் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்: கமல்ஹாசன்

Tamil Mint

இருளர் மாணவர்களின் கல்விக்காக ரூ.1 கோடி நிதியுதவி அளித்த சூர்யா-ஜோதிகா..!

Lekha Shree

“அண்ணனாக இருந்தாலும்… இப்படியெல்லாம் செய்வாங்களா?” – விஜய் குறித்து விக்ராந்த் நெகிழ்ச்சி..!

Lekha Shree

மாஸ்க் முறையாக அணியாவிட்டால் ரூ.200 அபராதம்! சென்னை மாநகராட்சி அதிரடி!

Lekha Shree

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு – கூடுதல் தளர்வுகள் என்னென்ன?

Lekha Shree

வடிவேலு நடிக்க இருந்த கதையில் நடிக்கும் விஜய் சேதுபதி..! வெளியான சுவாரசிய அப்டேட்..!

Lekha Shree

“கோ படத்தில் முதலில் நடித்திருக்க வேண்டியது நான் தான்” – நடிகர் சிலம்பரசன்

Lekha Shree

தமிழகத்தில் 4000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

சிலர் சதி செய்கின்றனர்… சிம்பு தாய் உஷா ராஜேந்தர் விளக்கம்

suma lekha