சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கோரிய நடிகர் சித்தார்த்…!


சாய்னா நேவால் குறித்த சர்ச்சை பதிவிற்கு நடிகர் சித்தார்த், “தவறான நோக்கத்தில் நான் எதுவும் குறிப்பிடவில்லை. ஒரு குறிப்பிற்காக மட்டுமே அந்த வார்த்தையை உபயோகித்தேன்” என விளக்கமளித்திருந்த நிலையில், தற்போது மன்னிப்பு கோரியுள்ளார்.

தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஆக்டிவாக இயங்கி வரும் திரையுலகை சேர்ந்த பிரபலங்களில் முக்கியமானவர்கள் நடிகர் சித்தார்த்.

தான் நடிக்கும் படங்களை விளம்பரப்படுத்துவது மட்டுமன்றி அரசியல் ரீதியான கருத்துக்களையும் துணிச்சலாக வெளியிட்டு வருபவர். ஆனால், இதனால் சில நேரங்களில் சர்ச்சைகளில் சிக்குவதும் உண்டு.

அந்த வகையில் புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார் நடிகர் சித்தார்த். கடந்த 5ம் தேதி பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக அங்கு சென்றபோது, வழியில் விவசாயிகளின் போராட்டத்தால் பாதுகாப்பு குறைபாடு காரணமாக மீண்டும் டெல்லி திரும்பினார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “எந்த ஒரு நாட்டின் பிரதமரின் பாதுகாப்பும் சமரசம் செய்யப்பட்டால் அந்த நாடு தன்னைத்தானே பாதுகாப்பாக இருப்பதாக கூறிக் கொள்ள முடியாது.

பிரதமர் மோடி மீது அராஜகவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலை வன்மையான வார்த்தைகளால் நான் கண்டிக்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.

Also Read  மும்பை டெஸ்ட்: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறும் நியூசிலாந்து…!

சாய்னாவின் இந்த பதிவை டேக் செய்த சித்தார்த், சர்ச்சைக்குரிய வகையில் பொருள் கொள்ளும்படி பதில் பதிவிட்டிருந்ததாக அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழத்தொடங்கின.

நடிகர் சித்தார்த்தின் கருத்து பெண்களை மிகவும் இழிவுப்படுத்துவதாக இருப்பதாக எழுந்த எதிர்ப்புகளை அடுத்து பாடகி சின்மயி, நடிகை குஷ்பு, கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, தேசிய மகளிர் ஆணையத் தலைவர் சர்மா உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

எதிர்ப்புகள் அதிகரித்து வந்த நிலையில் நடிகர் சித்தார்த், “நான் தரக்குறைவாக எதுவும் சொல்லவில்லை. யாரையும் அவமரியாதை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அவ்வளவுதான். தவறான நோக்கத்தில் நான் எதுவும் குறிப்பிடவில்லை. ஒரு குறிப்பிற்காக மட்டுமே அந்த வார்த்தையை உபயோகித்தேன்” என்று விளக்கம் அளித்தார்.

ஆனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா காவல் துறைக்கு கடிதம் எழுதியது.

Also Read  கோவையில் கடைகள் இயங்க நேரக் கட்டுப்பாடு : மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு

மேலும், சித்தார்த்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், “உங்களின் கருத்து பெண்களை மற்றும் பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கும் நோக்கத்தில் உள்ளது.

ஒரு பெண்ணுக்கு எதிரான இத்தகைய மோசமான மற்றும் பொருத்தமற்ற கருத்தை மகளிர் ஆணையம் வன்மையாக கண்டிக்கிறது. தானாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம்” என கூறியது.

இந்நிலையில், நடிகர் சித்தார்த், “சாய்னா அவர்களுக்கு, சில நாட்களுக்கு முன்பு உங்கள் ட்வீட்டுக்கு பதிலடியாக நான் எழுதிய எனது முரட்டுத்தனமான நகைச்சுவைக்காக உங்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

Also Read  நயன்தாராவுடன் இணையும் 'மாநகரம்' ஸ்ரீ மற்றும் விதார்த்…!

நான் உங்களுடன் பல விஷயங்களில் உடன்படாமல் இருக்கலாம். ஆனால், உங்கள் ட்வீட்டைப் படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் அல்லது கோபம் என் தொனியையும் வார்த்தைகளையும் நியாயப்படுத்த முடியாது.

நகைச்சுவையைப் பொறுத்தவரை, நகைச்சுவையை விளக்க வேண்டும் என்றால் அது ஒரு நல்ல நகைச்சுவை அல்ல. எனது வார்த்தைப் பிரயோகம் மற்றும் நகைச்சுவையானது எல்லாத் தரப்பிலிருந்தும் பல எதிர்ப்புகளை பெற்றது.

ஆனால், எனக்கு எந்த தீங்கிழைக்கும் நோக்கமும் இல்லை. நான் ஒரு உறுதியான பெண்ணியவாதி மற்றும் எனது ட்வீட் எந்த பாலினத்தையும் குறிக்கவில்லை மற்றும் ஒரு பெண்ணாக உங்களைத் தாக்கும் நோக்கமும் இல்லை என்று நான் உறுதியளிக்கிறேன்.

நீங்கள் எனது கடிதத்தை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன். நீங்கள் எப்போதும் என் சாம்பியனாக இருப்பீர்கள்” என கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘மாயவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் சந்தீப் கிஷன்! வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

Lekha Shree

படப்பிடிப்பில் பாடகியை அந்த இடத்தில் கடித்த பாம்பு: வைரலாகும் வீடியோ!!

suma lekha

அடுத்த வாரம் வெளியாகிறது வலிமை டீஸர்? : வெளியான வேற மாதிரி அப்டேட்

suma lekha

சென்னை ஐஐடியில் எறிந்த நிலையில் பிணமாக கிடந்த விஞ்ஞானியின் மகன்…! ஐஐடியில் தொடரும் மர்ம மரணங்கள்…!

sathya suganthi

மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

Ramya Tamil

நாங்கள் சாதனையைதான் முன்னிறுத்திக்கின்றோம், சாதியை அல்ல – மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன்

Tamil Mint

புடவை அணிந்து வந்ததால் உணவகத்திற்குள் அனுமதி மறுப்பு? பெண் பத்திரிகையாளர் குற்றச்சாட்டு..!

Lekha Shree

ஓடிடி தளங்கள் குறித்து இயக்குநர் சீனு ராமசாமி குற்றச்சாட்டு…

suma lekha

நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டமில்லை: மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

Tamil Mint

கமல் தலைமையில் மெகா கூட்டணி அமையுமா?

Lekha Shree

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடா…? அமைச்சர் விளக்கம்…!

Devaraj

சாத்தான்குளம் வழக்கில் கைதான ஆய்வாளருக்கு உடல்நலக்குறைவு

Tamil Mint