சாய்னா நேவால் குறித்த சர்ச்சை பதிவிற்கு நடிகர் சித்தார்த் விளக்கம்…! நோட்டீஸ் அனுப்பிய தேசிய மகளிர் ஆணையம்..!


சாய்னா நேவால் குறித்த சர்ச்சை பதிவிற்கு நடிகர் சித்தார்த், “தவறான நோக்கத்தில் நான் எதுவும் குறிப்பிடவில்லை. ஒரு குறிப்பிற்காக மட்டுமே அந்த வார்த்தையை உபயோகித்தேன்” என விளக்கமளித்துள்ளார்.

தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஆக்டிவாக இயங்கி வரும் திரையுலகை சேர்ந்த பிரபலங்களில் முக்கியமானவர்கள் நடிகர் சித்தார்த்.

தான் நடிக்கும் படங்களை விளம்பரப்படுத்துவது மட்டுமன்றி அரசியல் ரீதியான கருத்துக்களையும் துணிச்சலாக வெளியிட்டு வருபவர். ஆனால், இதனால் சில நேரங்களில் சர்ச்சைகளில் சிக்குவதும் உண்டு.

அந்த வகையில் புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார் நடிகர் சித்தார்த். கடந்த 5ம் தேதி பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக அங்கு சென்றபோது, வழியில் விவசாயிகளின் போராட்டத்தால் பாதுகாப்பு குறைபாடு காரணமாக மீண்டும் டெல்லி திரும்பினார்.

Also Read  கர்நாடகாவில் புஷ்பா படத்துக்கு கிளம்பிய எதிர்ப்பு!

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “எந்த ஒரு நாட்டின் பிரதமரின் பாதுகாப்பும் சமரசம் செய்யப்பட்டால் அந்த நாடு தன்னைத்தானே பாதுகாப்பாக இருப்பதாக கூறிக் கொள்ள முடியாது.

பிரதமர் மோடி மீது அராஜகவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலை வன்மையான வார்த்தைகளால் நான் கண்டிக்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.

சாய்னாவின் இந்த பதிவை டேக் செய்த சித்தார்த், சர்ச்சைக்குரிய வகையில் பொருள் கொள்ளும்படி பதில் பதிவிட்டிருந்ததாக அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழத்தொடங்கின.

நடிகர் சித்தார்த்தின் கருத்து பெண்களை மிகவும் இழிவுப்படுத்துவதாக இருப்பதாக எழுந்த எதிர்ப்புகளை அடுத்து பாடகி சின்மயி, நடிகை குஷ்பு, கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, தேசிய மகளிர் ஆணையத் தலைவர் சர்மா உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

Also Read  சிவகாசியில் பட்டாசு விபத்து தொடர்பாக மக்கள் தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிமுகம்

எதிர்ப்புகள் அதிகரித்து வந்த நிலையில் நடிகர் சித்தார்த், “நான் தரக்குறைவாக எதுவும் சொல்லவில்லை. யாரையும் அவமரியாதை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அவ்வளவுதான். தவறான நோக்கத்தில் நான் எதுவும் குறிப்பிடவில்லை. ஒரு குறிப்பிற்காக மட்டுமே அந்த வார்த்தையை உபயோகித்தேன்” என்று விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா காவல் துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.

Also Read  கடந்த 3மாதங்களில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனைகளில் 33 அரசு ஊழியர்கள் கைது

மேலும், சித்தார்த்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், “உங்களின் கருத்து பெண்களை மற்றும் பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கும் நோக்கத்தில் உள்ளது.

ஒரு பெண்ணுக்கு எதிரான இத்தகைய மோசமான மற்றும் பொருத்தமற்ற கருத்தை மகளிர் ஆணையம் வன்மையாக கண்டிக்கிறது. தானாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம்” என கூறியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா! – கர்நாடகாவில் 30 குழந்தைகள் பாதிப்பு..!

Lekha Shree

மின்னல் தாக்கி பலர் உயிரிழப்பு… பிரதமர் மோடி இரங்கல்..!

Lekha Shree

12-வகுப்பு மாணவர்களுக்கு அலகு தேர்வு..? அரசு தேர்வுத்துறை விளக்கம்..

Ramya Tamil

சொந்த இடத்தில் கோயில் கட்டிய நடிகர் யோகி பாபு… கோலாகலமாக நடைபெற்ற கும்பாபிஷேகம்..!

suma lekha

தலைநகரில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்..கேள்விக்குறியாகும் பெண்கள் பாதுகாப்பு..!

suma lekha

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயாவுக்கு மாற்றம்…!

Lekha Shree

121 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீராங்கனை!

Lekha Shree

நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள்: அதிர்ச்சி தகவல் கொடுத்த மத்திய அரசு

mani maran

“5 மாநில தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய உள்ளோம்” – விவசாயிகள்

Shanmugapriya

“தனி ஒருவன்!” – துபாய்க்கு தனி ஆளாக விமானத்தில் பறந்த நடிகர் மாதவன்…!

Lekha Shree

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ கதையில் நடிக்கும் விக்ரம்?

Lekha Shree

பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப்பணியாளர்கள் – மு.க.ஸ்டாலின்

sathya suganthi