a

பிரதமர் மோடி முதல் யோகி வரை – யாரையும் விட்டுவைக்காத சித்தார்த்


உத்தரப்பிரதேசத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வரும் மருத்துவமனைகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார். இதற்கு, பதிலளிக்கும் விதமாக சாமானியனோ, சாமியாரோ, அரசியல் தலைவரோ யாராக இருந்தாலும் பொய் சொன்னால் அவர்களுக்கு ஓங்கி ஓர் அறை விழும் என நடிகர் சித்தார்த் சமீபத்தில் ட்வீட் செய்திருந்தார்.

இதற்கு பா.ஜ.க தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழ்நாடு பா.ஜ.க-வினர் தனது மொபைல் எண்ணை வெளியிட்டதாகவும், 500-க்கும் மேற்பட்ட அழைப்புகளில் தனக்கும் தனது குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளில் திட்டி, பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் விடப்படுவதாகவும் சித்தார்த் ட்வீட் செய்திருந்தார்.

Also Read  பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் நெஞ்சுவலியால் மரணம்

இதையடுத்து சித்தார்த்துக்கு சமூக ஊடகங்களில் ஆதரவு தெரிவித்து #Isupportsiddarth என்ர ஹேஷ்டேக் ட்ரெண்டானது. தனக்கு வரும் மிரட்டல்களைப் பார்த்து தன் அம்மா மிகவும் பயந்துவிட்டார் என்றும் அவருக்குத் தைரியம் சொல்ல தன்னிடம் வார்த்தைகள் இல்லை என்ற போதிலும் ஆதரவாளர்களின் ட்வீட்களைதான் அவர்களிடம் படித்து காட்டி சமாதானம் செய்ததாகவும் சித்தார்த் குறிப்பிட்டுள்ளனார். மேலும் தன்னுடன் துணைநின்ற அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

கொரோனா பேரிடர் சமயத்தில் முறையாக செயல்படாத அதிகார வர்க்கங்களை விமர்சித்து வரும் சித்தார்த், அத்தோடு நிற்காமல் கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வுகள், சிகிச்சை மையங்கள், உதவி தேவைப்படுவோருக்கான வழிகாட்டுதல் என ட்விட்டர் மூலமாக பல உதவிகளை செய்து வருகிறார்.

Also Read  பிரதமர் மோடி தமிழகத்திற்கு உடனே இதை செய்ய வேண்டும்.. முதல்வர் ஸ்டாலின் கடிதம்..

தற்போது மட்டுமின்றி காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது, குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்திய போது, வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தபோது என மக்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் சித்தார்த் விமர்சித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அரசு, உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரை சித்தார்த்தின் ட்விட்டர் விமர்சனத்தில் இருந்து தப்பியவர்கள் இல்லை.

Also Read  பிக்பாஸ் புகழ் நடிகை ரேஷ்மாவின் வைரல் போட்டோ ஷூட் இதோ!

மத்திய அரசை மட்டுமின்றி 2015-ல் சென்னை பெருவெள்ளத்தைக் கண்டுகொள்ளாத வட இந்திய ஊடகங்கள், 2017-ல் 2ஜி ஊழல் வழக்கின் தீர்ப்பில் தி.மு.க-வின் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டபோதும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு அ.தி.மு.க ஆதரவளித்த போதும் அவர்கள் மீதும் விமர்சனங்கள் வைத்திருக்கிறார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கூகுள் குட்டப்பன் படத்தின் நடிக்கும் தர்ஷன் மற்றும் லாஸ்லியா; பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

Tamil Mint

“கே.வி. ஆனந்துடன் படம் பண்ண நினைத்தேன்… மிஸ் பண்ணிவிட்டேன்!” – நடிகர் ரஜினியின் வைரல் வீடியோ!

Lekha Shree

பிரபல தமிழ் நடிகைக்கு விரைவில் திருமணம், நிச்சயதார்த்தம் முடிந்தது

Tamil Mint

‘குக் வித் கோமாளி’ பவித்ராவுக்கு அடித்த ஜாக்பாட்…. அதுவும் இந்த நடிகருடனா?

Lekha Shree

மக்கள் செல்வனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்… வைரல் புகைப்படங்கள் இதோ..!

Lekha Shree

‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் ‘சீதா’ ரோலில் நடிக்கும் ஆலியா பட்டின் First Look poster வெளியாகும் தேதி அறிவிப்பு!

Lekha Shree

நடிகர் விவேக் மறைவு.. பிரபலங்களின் கண்ணீர் பதிவு…

HariHara Suthan

லெஜெண்ட் சரவணா அண்ணாச்சி படத்தின் படப்பிடிப்பு ஸ்டில்ஸ் வைரல்…!

Lekha Shree

சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ்!

Bhuvaneshwari Velmurugan

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கே.வி.ஆனந்த் மாரடைப்பால் உயிரிழப்பு…! ரஜினிகாந்த் இரங்கல்

Devaraj

நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட கருப்பு உடை கவர்ச்சி போட்டோ ஷூட் வீடியோ – இணையத்தில் வைரல்..!

HariHara Suthan

கமல்ஹாசனுடன் இணைவது குறித்து ஹாட் தகவலை தந்த விஜய்சேதுபதி…!

Devaraj