நடிகர் சிலம்பரசனுக்கு கிடைக்க இருக்கும் மிகப்பெரிய கௌரவம்…! என்ன தெரியுமா?


வேல்ஸ் பல்கலைக்கழகம், நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்க இருக்கிறது. உலகெங்கிலும் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள், கலைத்துறையில் சாதனை படைத்த முன்னணி கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் கௌரவ டாக்டர் பட்டம் கொடுப்பது வழக்கம்.

அந்த வகையில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட பல கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

அந்த வரிசையில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் பல்கலைக்கழகம் நடிகர் சிலம்பரசனுக்கு வருகிற ஜனவரி 11ஆம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்து சிறப்பு செய்ய இருக்கிறது.

இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் ஐசரி.கணேசன், “மரியாதைக்குரிய நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு இந்த கௌரவ டாக்டர் பட்டத்தை கொடுப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

Also Read  தமிழக பட்ஜெட் 2021 - 6 மாதங்களில் வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் திருத்திய பட்ஜெட் தயாரிப்பு..!

எங்கள் பல்கலைக்கழகத்தில் இந்த விருதுக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுப்பதற்கு என்று ஒரு குழு இருக்கிறது. அவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதனை செய்யும் பிரபலங்களை கவனமாக ஆய்வு செய்து இறுதி பட்டியலை முடிவு செய்வார்கள்.

அந்த வகையில் 6 மாத குழந்தையாக இருக்கும்போது திரைத்துறையில் நடிக்க வந்தவர் சிலம்பரசன். விரைவில் அவருக்கு 39 வயது ஆகப்போகிறது. ஒருத்தரோட வயதும் அவருடைய கேரியரும் ஒரே ஆண்டாக அமைவது அபூர்வம்.

Also Read  நடிகர் சூர்யா கைவசம் 4 படங்கள்! - குஷியில் ரசிகர்கள்!

அப்படி ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட கலைஞன் தான் சிலம்பரசன். நடிப்பு, இயக்கம், இசை, பாடகர் என சினிமாவின் பல்வேறு துறைகளிலும் இப்போதுவரை சாதனை படைத்து வரும் அவரின் சாதனைகளை பொருட்டே இந்த கௌரவ டாக்டர் பட்டம் என்கிற அங்கீகாரம்.

அது எங்கள் வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்குவதில் எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி” என கூறியுள்ளார்.

Also Read  நீட் தேர்வில் இந்திய அளவில் 8 வது இடத்தை பிடித்தார் தமிழக மாணவர் ஸ்ரீஜன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னையில் திடீர் கனமழைக்கு காரணம் என்ன? வானிலை ஆய்வு மையம் விளக்கம்..!

Lekha Shree

PSBB பள்ளியின் டிரஸ்டி ஒய்.ஜி.மகேந்திராவின் தலைசுற்ற வைக்கும் குடும்ப பின்னணி!

sathya suganthi

ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகை… யார் தெரியுமா?

Lekha Shree

4 நாளில் அதிரடி வசூல் செய்த சிம்புவின் ‘மாநாடு’…!

Lekha Shree

ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவு மசோதா – உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கண்டனம்!

Lekha Shree

’எனக்கு திருமணமாகாததற்கு இவர் தான் காரணம்’… பிரபல நடிகர் குறித்து பேசிய நடிகை தபு..!

suma lekha

சிம்புவின் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு…!

Lekha Shree

இன்று எம்எல்ஏவாக பதவியேற்காதவர்கள் பட்டியல் இதோ…!

sathya suganthi

இசையை மையப்படுத்தும் இசைப்புயலின் புதிய அவதாரம்…

VIGNESH PERUMAL

வாகனங்களில் உள்ள நம்பர் பிளேட்டுகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் : சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியீடு

Tamil Mint

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்த அனுமதி: சென்னை உயர்நீதிமன்றம்

Tamil Mint

‘அனிருத்திடம் இருந்து மற்றுமொரு செஞ்சுரி’… சிலிர்த்துப் போன சிவகார்த்திகேயன்… காரணம் இதுதான்!

Lekha Shree