a

“கோ படத்தில் முதலில் நடித்திருக்க வேண்டியது நான் தான்” – நடிகர் சிலம்பரசன்


பிரபல திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த், அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 54.

பத்திரிகைகளில் போட்டோகிராபராக பணியை தொடங்கி அயன், மாற்றான், கவண், காப்பான், கோ, அனேகன் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உருவெடுத்தார் கே.வி. ஆனந்த்.

இவரது மறைவுக்கு பல திரையுல பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிலம்பரசனும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மரணம் எதிர்பாராத ஒன்று தான் என்றாலும் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவர்களை நம்மோடு தினமும் தொடர்பில் இருப்பவர்களை எதிர்பாராமல் இழப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிர்ந்து பேசாத நல்ல மனிதர் கே.வி. ஆனந்த். அவருடைய கோ படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது. அப்போதிருந்த சூழலில் தவிர்க்கும்படி ஆகிவிட்டது.

Also Read  'வாத்தி கம்மிங்' பாடலுக்கு வேற லெவல் ஆட்டம் போட்ட பிக் பாஸ் பிரபலம்..!

சமீபத்தில் மிக அருமையான கதை ஒன்று எனக்குச் சொல்லியிருந்தார். சேர்ந்து படம் பண்ணலாம் என சொல்லி இருந்தேன். தினமும் என்னோடு தொடர்பில் இருந்தார். நேற்று வரை பேசிக் கொண்டிருந்தவர் இன்று அதிகாலை மரணம் அடைந்துவிட்டார் என்று சொல்வதை மனம் நம்ப மறுக்கிறது. பொய் செய்தியாக இருக்க கூடாதா என அங்கலாய்க்கிறேன்.

இவ்வளவு சீக்கிரம் அவரை இழந்து இருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. ஒளிப்பதிவாளர்கள் இயக்குனராகி வெற்றி பெற்றவர்களில் கே.வி. ஆனந்த் மிக முக்கியமானவர். நிச்சயம் பேசப்படும் நிறைய படங்களை தொடர்ந்து தந்திருப்பார். அவரின் மறைவு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கும் திரையுலகினருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ட்ரெண்டாகும் ‘தல 61’ ஹேஷ்டேக்…! ஏன் தெரியுமா?

Lekha Shree

பிக்பாஸ் ஷிவானி – பாலா மாலத்தீவு பயணம்..? வைரலாகும் புகைப்படங்கள்…

HariHara Suthan

குக் வித் கோமாளி கனியை கலாய்த்த ஏ.ஆர்.ரகுமான்! – என்ன சொன்னார் தெரியுமா?

Shanmugapriya

கணவர் மீது அளித்த புகாரை வாபஸ் வாங்கிய ‘சுந்தரா டிராவல்ஸ்’ நடிகை!

Lekha Shree

வாத்தி கம்மிங் பாடலுக்கு வேற லெவலில் நடனமாடிய சிறுவன்! – வைரலாகும் வீடியோ

Shanmugapriya

கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிவாரண நிதி வழங்கிய நடிகர்கள் சூர்யா, கார்த்தி!

Lekha Shree

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட ‘வலிமை’ அப்டேட்… வைரலாகும் போஸ்டர்…!

malar

மலையாள திரைப்படப் பாடலாசிரியரான அனில் பனச்சூரன் காலமானார்

Tamil Mint

ஒப்பனையற்ற அழகு தேவதைகள்…! “கர்ணன்” ஷூட்டிங் ஸ்பார்ட் புகைப்படங்கள்…!

Devaraj

கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட நடிகை நக்மாவுக்கு மீண்டும் கொரோனா!

Shanmugapriya

நீண்ட நாட்களுக்குப் பிறகு விஷ்ணு விஷால் பற்றி வெளியான நல்ல செய்தி… காடன் பட லேட்டஸ்ட் அப்டேட் இதோ…!

HariHara Suthan

கடைசி ஆசை நிறைவேறாமல் இறந்த நடிகர் விவேக்…!

Lekha Shree