a

“எனது முதல் படத்தில் நீங்கள்… உங்களின் கடைசி படத்தில் நான்…” – நடிகர் சூர்யாவின் உருக்கமான கடிதம்!


பிரபல திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த், நேற்று அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 54.

பத்திரிகைகளில் போட்டோகிராபராக பணியை தொடங்கி அயன், மாற்றான், கவண், காப்பான், கோ, அனேகன் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உருவெடுத்தார் கே.வி. ஆனந்த்.

இவரது மறைவு தமிழ் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரையுல பிரபலங்கள் பலர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

அவருடன் அயன், மாற்றான், காப்பான் ஆகிய படங்களில் பணியாற்றிய நடிகர் சூர்யாவும் அவரது மறைவுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், “கே.வி. சார்… இது ‘பேரிடர் காலம்’ என்பதை உங்கள் மரணம் அறைந்து நினைவூட்டுகிறது. நீங்கள் இல்லை என்ற உண்மையை மனமெங்கும் அதிர்வையும் வலியையும் உண்டாகுகிறது.

உங்கள் இறப்பின் துயரத்தில் மறக்க முடியாத நினைவுகள் அலை அலையாக உயிர்தெழுகின்றன. நீங்கள் எடுத்த புகைப்படங்களில் தான் ‘சரவணன் சூர்யாவாக’ மாறிய அந்த அற்புத தருணம் நிகழ்ந்தது.

Also Read  'தல' பிறந்தநாளன்று வைரலாகும் அவரது முதல் பட காட்சிகள்…! வீடியோ இதோ..!

முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவனை சரியான கோணத்தில் படம் பிடித்து விட வேண்டும் என இரண்டு மணி நேரம் நீங்கள் கொட்டிய உழைப்பை இப்போதும் வியந்து பார்க்கிறேன். மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகத்தில் வந்து நான் இருந்த அந்த இரண்டு மணி நேரம் ஒரு போர்க் களத்தில் நிற்பது போலவே உணர்ந்தேன்.

நேருக்கு நேர் திரைப்படத்திற்காக நீங்கள் என்னை எடுத்து அந்த ரஷ்யன் ஆங்கிள் புகைப்படம்தான் இயக்குனர் வசந்த் மற்றும் தயாரிப்பாளர் மணிரத்னம் உள்ளிட்ட அனைவருக்கும் என் மீது நம்பிக்கை வர முக்கிய காரணம்.

புகைப்படத்தை விட ஆயிரம் மடங்கு பெரியதாக முகம் தோன்றும் வெள்ளித்திரையிலும் நடிகனாக என்னை படம் பிடித்ததும் நீங்கள் தான். முதன் முதலில் என் மீது பட்ட வெளிச்சம் உங்கள் கேமராவில் இருந்து வெளிப்பட்டது. அதன் மூலம்தான் என் எதிர்காலம் பிரகாசமானது.

என்னுடைய திரையுலக பயணத்தில் உங்களின் பங்களிப்பும் வழிகாட்டலும் மறக்கமுடியாதது. வளர்ச்சிக்கு நீ இதையெல்லாம் மாற்றிக் கொள்ள வேண்டுமென அன்புடன் ஆசையுடன் நீங்கள் சொன்ன வார்த்தைகள் இப்போதும் என்னை வழிநடத்துகின்றன.

இயக்குனராக அயன் திரைப்படத்திற்கு நீங்கள் உழைத்த உழைப்பு ஒரு மாபெரும் வெற்றிக்கு காத்திருந்த எனக்கு புதிய உத்வேகத்தை அளித்தது. அந்த திரைப்படத்தின் வெற்றி அனைவருக்கும் பிடித்த நட்சத்திரமாக என்னை உயர்த்தியது என்பதை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.

Also Read  'அரண்மனை 3' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு…!

எனது முதல் திரைப்படத்தில் நீங்களும் உங்களின் கடைசி திரைப்படத்தில் நானும் பணியாற்றியது இயற்கை செய்த முரண்.

எங்கள் நினைவில் என்றும் நீங்கள் வாழ்வீர்கள் சார். இதயபூர்வமான நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

புதிய படத்தில் தனுஷுடன் இணையும் செல்வராகவன்…. ரசிகர்கள் கொண்டாட்டம்…

VIGNESH PERUMAL

விவேக் மறைவுக்கு கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட நடிகர் சத்யராஜ்!

Lekha Shree

நடிகர் விவேக்கின் உடல்.. கண்ணீர் வரவைக்கும் புகைப்படம்..

HariHara Suthan

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகர் தவசிக்கு புற்று நோய் பாதிப்பு: சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பு

Tamil Mint

இயக்குனர் சங்கரின் இந்த படம் இரண்டாவது பாகம் தயாராக உள்ளது…

VIGNESH PERUMAL

இந்திய அளவில் முதலிடம் பிடித்த ‘வாத்தி கம்மிங்’… காரணம் என்ன தெரியுமா?

HariHara Suthan

இயற்கை, பேராண்மை பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்

Devaraj

நடிகர் விவேக்கின் கடைசி ட்விட்டர் பதிவு என்ன தெரியுமா?

Lekha Shree

விவசாயிகள் போராட்டம்… “அசுரன்” டீமில் இருந்து வந்த அழுத்தமான ஆதரவு குரல்…!

Tamil Mint

3 நாள் வசூலில் உலக அளவில் முதலிடம் பிடித்ததா விஜய்யின் மாஸ்டர்? – ட்விட்டரில் தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்!

Tamil Mint

துவங்கியது சூர்யாவின் வாடிவாசல்! ட்விட்டரில் ட்ரெண்ட்டாகும் வாடிவாசல் அப்டேட்!

HariHara Suthan

என்னம்மா ரைசா எல்லாம் வெறும் மேக்கப்பா? மருத்துவர் சொன்ன பகீர் தகவல்!

Devaraj