“நல்லா இருக்கிற தமிழ்நாட்டை ஏன் பிரிக்கனும்?” – ‘வைகைப்புயல்’ வடிவேலு


நடிகர் வடிவேலு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். மேலும், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்கினார்.

இதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவர் மிகவும் எளிமையாக குடும்பத்தில் ஒருவர் மாதிரி பேசினார். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கினேன்” என கூறினார்.

பின்னர், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ஆட்சி அமைத்த ஒரு மாதத்திலேயே உலகமே உற்று நோக்கும் அளவிற்கு கொரோனாவை முதல்வர் கட்டுப்படுத்தி உள்ளார். மக்களுக்கு உண்மையில் மெய் சிலிர்க்கிறது.

அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என மக்களை கேட்டு மக்களை தன்வசப்படுத்தி அழகாக செய்தார். யார் மனமும் புண்படாமல் அவர்களே ஆர்வமாக வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளும் வகையில் செய்தது எனக்கு பெரும் நெகிழ்ச்சியாக இருந்தது.

Also Read  'கர்ணன்' தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் நடிகர் யார் தெரியுமா?

வீடு வீடாக காய்கறி வழங்கியது உட்பட பல விஷயங்களால் பெண்கள் சந்தோஷமாக இருக்கின்றனர். பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என ஒவ்வொரு திட்டமாக நிறைவேற்றி வருவது உண்மையில் மக்களுக்கு இது ஒரு பொற்கால ஆட்சி என நினைக்கிறேன்” என கூறினார்.

அதைத்தொடர்ந்து திரை உலகம், ஓடிடி என மாற்றங்களை சந்தித்து உள்ளது பற்றி கேட்டதற்கு, “ஆமாம் அடுத்தடுத்து போய்க்கொண்டிருக்கிறது.

Also Read  ஆட்டோவில் பயணம் செய்த தல அஜித்? வைரலாகும் வீடியோ இதோ..!

சினிமாவிலும் வாரிசுகள் என வரிசையாய் போய்க்கொண்டிருக்கிறது. இனி ஓடிடி ஒரு குட்டி போடும். காலத்திற்கேற்றவாறு நாமும் நடிக்க வேண்டியதுதான்” என பதிலளித்தார்.

அதன்பின்னர் ஓடிடியில் நீங்கள் நடிப்பதாக செய்திகள் வருகிறதே எனக் கேட்டதற்கு, “அது நிறைய பேச்சுவார்த்தையில் இருக்கிறது. திரைப்படங்களும் இருக்கின்றன. நல்லதே நடக்கும்” என்றார்.

Also Read  'கேஜிஎப்' இயக்குனருடன் இணையும் மாஸ் ஹீரோ… வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

அதன் பின்னர் கொங்கு மண்டலத்தை கொங்குநாடாக பிரிக்க வேண்டும் என பேச்சு உள்ளது பற்றி கேள்வியெழுப்பியதற்கு, “ராம்நாடு, ஒரத்தநாடு என இருக்கிறது. இவ்வளவு நாட்டையும் பிரிக்க முடியுமா?

அதெல்லாம் எதுக்கு பாவம். நன்றாக இருக்கும் தமிழகத்தை ஏன் பிரிக்க வேண்டும்? அரசியல் பேசவில்லை. அது வேண்டாம். இவற்றையெல்லாம் கேட்கும் போது தலை சுற்றுகிறது” என கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வெளியானது மக்கள் நீதி மய்யம் கூட்டணி தொகுதிப் பங்கீடு விவரம்!

Shanmugapriya

“வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் நிரந்தரமானது” – பாமக நிறுவனம் ராமதாஸ்

Lekha Shree

நடிகர் விஜய் பிறந்தநாள் – ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு!

Lekha Shree

முழு ஊரடங்கு: டாஸ்மாக்கிற்கு எவ்வளவு கோடி வருவாய் இழப்பு தெரியுமா?

sathya suganthi

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

Tamil Mint

தைப்பூச திருநாளையொட்டி முருகனின் அறுபடை வீடுகளில் சிறப்பு வழிபாடு! குவியும் பக்தர்கள் கூட்டம்!

Tamil Mint

தமிழகத்தில் மே 1, 2ம் தேதிகளில் முழு ஊரடங்கு..! சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை!

Lekha Shree

தமிழகத்தில் இன்று முதல் அனைத்து கல்லூரிகளும் திறப்பு

Tamil Mint

“பெண்களின் உத்தரவை ஏற்க சில ஆண்கள் தயாராக இல்லை” – குஷ்பூ

Shanmugapriya

மக்கள் திலகம் எம்ஜிஆரின் 104-வது பிறந்தநாளை முன்னிட்டு, ‘தலைவி’ திரைப்படத்தின் புதிய ஸ்டில் வெளியீடு!

Tamil Mint

திமுக இன்று மாநிலம் முழுக்க போராட்டம், போலீஸ் குவிப்பு

Tamil Mint

செவிலியர்கள் பாதங்களில் மலர் தூவி நன்றி கூறிய வழக்கறிஞர் – அரசு மருத்துவமனையில் நெகிழ்ச்சி சம்பவம்…!

sathya suganthi