ரூ.1 லட்சம் அபராதம் – நடிகர் விஜய் மேல்முறையீடு..!


நடிகர் விஜய் தரப்பில் சொகுசு காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரிய வழக்கில் விதித்த அபராதத்தை எதிர்த்தும் தீர்ப்பில் உள்ள விமர்சனங்களை நீக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் கடந்த 2012ல் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

Also Read  பாலியல் வழக்கில் சிறப்பு டிஜிபி-யை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்? உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!

இதை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம் அவரது மனுவை தள்ளுபடி செய்ததோடு விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்தார்.

மேலும், “நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்கவேண்டும். சினிமா ஹீரோக்கள் நிஜ வாழ்வில் ரீல் ஹீரோக்களாக இருக்கக்கூடாது.

சமூக நீதிக்காகப் பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது. வரி செலுத்துவது என்பது நன்கொடை கொடுப்பது போன்றது அல்ல. நாட்டிற்கு குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு” என கருத்து தெரிவித்தார்.

இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆக வரி கட்டுங்க விஜய் மற்றும் வரி ஏய்ப்பு விஜய் போன்ற ஹேஷ்டேக்குகள் வைரலாகி ட்ரெண்ட் ஆனது. இதனிடையே விஜய்க்கு ஆதரவாக அவரது ரசிகர்களும் WeSupportThalapathyVijay என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.

Also Read  'இன்போசிஸ்' நிறுவனத்துக்கு நிர்மலா சீதாராமன் போட்ட ஆர்டர்…!

அதைத்தொடர்ந்து அவருக்கு ஆதரவாக கார்த்தி சிதம்பரம் எம்.பி., காயத்ரி ரகுராம், சீமான் போன்ற அரசியல் பிரமுகர்கள் குரல் கொடுத்தனர்.

இந்நிலையில் தற்போது சொகுசு காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரிய வழக்கில் விதித்த அபராதத்தை எதிர்த்தும் தீர்ப்பில் உள்ள விமர்சனங்களை நீக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில்நடிகர் விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Also Read  நடிகை ஐஸ்வர்யா மேனனின் கலக்கல் கடற்கரை போட்டோஷூட்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சர்ச்சை இயக்குநர் படத்தில் நடிக்கும் காதல் இயக்குநர்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

Tamil Mint

‘பாரிஸ் பங்களா சாவி கிடைச்சிடுச்சா?’… ரெய்டு நடத்திய அதிகாரிகள் செம்ம தில்லாக கேலி செய்த டாப்ஸி…!

malar

என் வீட்டுத் தோட்டத்தில்…! சிவகார்த்திகேயன் வெளியிட்ட கலக்கல் வீடியோ…!

sathya suganthi

இயக்குனர் பாலா திருமணத்தில் விக்ரம்-சூர்யா… யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்!

Lekha Shree

“முதலில் நான் நலமாக இருக்க வேண்டும்”… கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட குஷ்பு…!

HariHara Suthan

மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக பிரபல நடிகர் மீது போலீஸில் புகார்!

Tamil Mint

விஜய்யிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடம் – பிரியங்கா சோப்ரா புகழாரம்

Tamil Mint

விஷாலின் சக்ரா படத்தை வெளியிட தடை… உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு…!

Tamil Mint

நடிகை காஜல் அகர்வாலின் ‘Anu and Arjun’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!

Lekha Shree

‘நான் முதல் ஆளாய் வந்து நிற்பேன்’… தாய் சங்கத்திற்கு பாரதிராஜா விடுத்த எச்சரிக்கை…!

malar

மாநாடு படத்தில் இணைந்த விஜய் டிவி பிரபலம்…! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

வென்றான் ‘அசுரன்’: 2வது முறையாக தேசிய விருது வென்ற தனுஷ்-வெற்றிமாறன் காம்போ…!

Lekha Shree