a

விவேக் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறிய நடிகர் விஜய்


படப்பிடிப்புக்காக ஜார்ஜியா சென்ற நடிகர் விஜய், சென்னை திரும்பிய நிலையில், மறைந்த நடிகர் விவேக்கிற்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

தளபதி 65 படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் ஜார்ஜியா சென்றிருந்தார். அந்த நேரத்தில் தான் நடிகர் விவேக்கின் திடீர் மரணமும் நிகழ்ந்தது. விவேக் இறந்த தகவலை அறிந்த விஜய் மிகுந்த சோகத்தில் இருந்தாலும், அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த முடியாத இக்கட்டான சூழலில் ஜார்ஜியாவில் இருந்தார். இதன் தொடர்ச்சியாக நேற்று சென்னை திரும்பிய நடிகர் விஜய், விருகம்பாக்கத்தில் உள்ள நடிகர் விவேக்கின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி மற்றும் மகள்களுக்கு ஆறுதல் கூறினார்.

Also Read  மலையாள திரைப்படப் பாடலாசிரியரான அனில் பனச்சூரன் காலமானார்

அந்த சந்திப்பின் போது விவேக் உடனான தனது நட்பு பற்றியும், அவரது இழப்பு தனிப்பட்ட முறையில் மிகுந்த வேதனை அளிப்பதாகவும் விவேக் குடும்பத்தினரிடம் விஜய் கூறியதாக தெரிகிறது. விஜய் திரைத்துறையில் பிரபலம் அடையும் முன்பாகவே, விவேக் உடன் நடித்து வந்தார். இருவரும் சிறந்த நண்பர்களாக திகழ்ந்த நிலையில், விவேக்கின் மறைவு, விஜயை சோகத்தில் ஆழ்த்தியதாக, அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எம்.எஸ் தோனி பட நடிகர் தற்கொலை! அதிர்ச்சியில் பாலிவுட்!

Tamil Mint

பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

Lekha Shree

விஷாலின் சக்ரா படத்தை வெளியிட தடை… உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு…!

Tamil Mint

தன்னை ட்ரோல் செய்தவர்களுக்கு நடிகர் சாந்தனு கொடுத்த நெத்தியடி பதில்..!

HariHara Suthan

பிக்பாஸ் குரலுக்குச் சொந்தக்காரர் இவரா?… பாலாஜி முருகதாஸால் வைரலாகும் வீடியோ…!

Tamil Mint

பிக்பாஸ் ஆரிக்கு பிறந்தநாள்… முத்தத்துடன் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட பாலாஜி…!

Tamil Mint

கீழ் இருந்து மேலே ரசிகர்களை கிறங்கடித்த நடிகை வேதிகாவின் போட்டோ ஷூட்

Jaya Thilagan

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’…!

Lekha Shree

விவசாயிகள் போராட்டம்… “அசுரன்” டீமில் இருந்து வந்த அழுத்தமான ஆதரவு குரல்…!

Tamil Mint

சொந்தமாக வெப்சைட் தொடங்கும் பிரபல இசையமைப்பாளர்! தேதி அறிவிப்பு குறித்த சூப்பர் அப்டேட்!

Tamil Mint

கர்ணன் முதல் பாதி மட்டும் 10 அசுரனிற்க்கு சமம்! இணையத்தில் தெறிக்கும் கர்ணன் பட விமர்சனம்

Jaya Thilagan

Chef தாமுவிற்கு இவ்வளவு பெரிய மகள்களா..! அவரே வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரல்…

HariHara Suthan