‘பிகில்’ படத்தை பார்த்து சிகிச்சை பெற்ற சிறுவனை நேரில் சந்திக்கும் நடிகர் விஜய்..!


‘பிகில்’ படத்தை பார்த்து சிகிச்சை பெற்ற சிறுவனை நேரில் நடிகர் விஜய் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த 10 வயது சிறுவன் சசிவர்ஷன் தனது மாமா அரவிந்த் உடன் இரவில் மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்றுள்ளார்.

அண்ணாசாலை அருகே இவர்கள் சென்று கொண்டிருந்தபோது பின்சீட்டில் அமர்ந்திருந்த சிறுவன் தூக்க கலக்கத்தில் சாலையில் தவறி விழுந்துள்ளான்.

கீழே விழுந்ததில் நெற்றி மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்த சிறுவனை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Also Read  வெள்ளை உடையில் மின்னும் பிரியா பவானிசங்கர்… வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

நெற்றியில் பலத்த காயம் இருந்ததால் அச்சிறுவனுக்கு தையல் போட மருத்துவர்கள் முடிவு செய்து முதலில் ஊசி போட முயன்றனர்.

ஆனால் பயத்தில் அலறி ஊசி செலுத்த ஒத்துழைக்காமல் அடம்பிடித்துள்ளான் சிறுவன் சசிவர்ஷன். எவ்வளவு முயன்றும் மருத்துவர்களின் சிகிச்சைக்கு அவன் ஒத்து வராததால் மருத்துவர்கள் என்ன செய்வது என தெரியாமல் விழித்துள்ளனர்.

அப்போது அங்கு இரவு பணியிலிருந்த தன்னார்வலர் ஜின்னா, சிறுவனை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

உனக்கு என்ன பிடிக்கும் என அவர் கேட்டதற்கு எனக்கு நடிகர் விஜய்யை ரொம்ப பிடிக்கும் எனவும் அவருடைய தீவிர ரசிகர் என்றும் அச்சிறுவன் கூறியுள்ளான்.

Also Read  வைரலாகும் ‘குட்டி பட்டாஸ்’ HookStep! நடனமாடி வீடியோ வெளியிடும் ரசிகர்கள்!

இதனை அடுத்து செல்போனில் வைத்திருந்த நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ படத்தை போட்டு சிறுவனிடம் கொடுத்து இருக்கிறார் ஜின்னா.

வலியை மறந்த சிறுவன் மெய்மறந்து ‘பிகில்’ படம் பார்த்துக் கொண்டிருந்த போது ஊசி போட்டு அதன் பின்னர் தையல் போட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.

Also Read  இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு பாஜக அதிருப்தி

விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கு வலி தெரியாமலிருக்க நடிகர் விஜய்யின் ‘பிகில்’ படத்தை போட்டு காண்பித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்த சம்பவத்தை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் காயம்பட்ட சிறுவனை நேரில் அழைத்து பேச நேரம் ஒதுக்கியுள்ளார் நடிகர் விஜய். சிறுவனின் உடல்நிலை சரியானதும் அவனை நடிகர் விஜய் சந்திப்பார் என விஜய் மக்கள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியில் தொடரும் இழுபறி.. இதுதான் காரணம்..

Ramya Tamil

பட்டுக்கூடுகளை அரசு கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் கவலை!

Devaraj

மாறுவேடத்தில் தப்ப பிளான் போட்ட சிவசங்கர் பாபா…! சென்னைக்கு பிடித்து வந்த போலீஸ்…!

sathya suganthi

தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தும் ‘சீயான்’ விக்ரம் ரசிகர்கள்… ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹாஷ்டேக்!

Lekha Shree

பேருந்துகளை இயக்க மாட்டோம்: தகராறு செய்யும் தனியார் பேருந்து உரிமையாளர்கள்

Tamil Mint

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் சென்னை வருகை!!

Tamil Mint

“தமிழக துணை முதலமைச்சர் ஓ.பழனிசாமி!” – அமைச்சரின் பேச்சால் சலசலப்பு!

Lekha Shree

விமர்சனங்களை வரவேற்கிறேன் – கமல் பளிச்

Devaraj

தமிழ்நாட்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்?அமைச்சர் விளக்கம்

Tamil Mint

கபிலன், மாரியம்மா, ரங்கன் வாத்தியார் – வெளியானது ‘சார்பட்டா பரம்பரை’ கதாபாத்திரம்…

HariHara Suthan

பப்ஜி மதன்… பிட்காயின்… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்…!

Lekha Shree

‘ஜகா’ படத்தில் கடவுள் அவமதிப்பு? தடை செய்ய வலுக்கும் கோரிக்கை..!

Lekha Shree