a

கொரோனா காலத்தில் பிரபலங்களின் சுற்றுலா செல்ஃபி – கடுமையாக சாடிய ஸ்ருதிஹாசன்!


இந்தியாவில் கொரோனாவின் 2ம் அலை மக்களை கடுமையாக பாதிப்படைய செய்துள்ளது. கொரோனா முதலாம் அலையை விட 2ம் அலை வீரியமாக உள்ளதால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் பல பிரபலங்கள் மாலத்தீவு மாற்று கோவா என சுற்றுலா சென்று புகைப்படங்களை பகிர்வதை கடுமையாக விமர்சித்துள்ளார் நடிகர் ஸ்ருதிஹாசன்.

Also Read  பெண் ஆட்டோ டிரைவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சமந்தா!

சமீபத்தில் அவர் ‘தி குயின்ட்’ என்ற தளத்துக்கு அளித்த பேட்டியில், “நான் ஒருபோதும் இதுபோன்ற செயலை செய்யமாட்டேன். மக்கள் அனைவரும் கடுமையான துன்பத்தில் உள்ளனர்.

சிலர் (பிரபலங்கள்) ஒரு சிறந்த விடுமுறை கிடைத்த மகிழ்ச்சியில் களிக்கின்றனர். அவர்கள் தங்களின் விடுமுறையை கொண்டாட தகுதியானவர்கள் தான். ஆனால், மக்கள் துன்பப்பட்டு கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நீச்சல் குளத்தில் நீந்தி மகிழ்வதற்க்கான நேரம் இது என்று தனிப்பட்ட முறையில் நான் உணரவில்லை.

Also Read  'வாத்தி கம்மிங்' பாடலுக்கு வேற லெவல் ஆட்டம் போட்ட பிக் பாஸ் பிரபலம்..!

உங்கள் செல்வத்தால் கிடைக்கும் மகிழ்ச்சியை மக்களின் முகத்தில் வீசவேண்டாம். இதுபோன்ற துன்பமான நேரத்தில் ஒருவர் தன்னிடம் இருக்கும் பணத்தையும் வசதியையும் பந்தாவாக வெளியே காட்டுவது பொறுப்பான செயலாக இல்லை. மாறாக, மக்களால் நாம் பெற்ற இந்த வசதிகளுக்கு நன்றி செலுத்துவதற்கான நேரம் இது என்று நான் நினைக்கிறன்.

முதலாம் அலை ஓய்ந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதும் நான் பாதுகாப்பை குறைக்கவில்லை. நாம் இன்னும் ஒரு தொற்றுநோய் பிடியில் இருக்கிறோம் என்பதை நான் ஒருபோதும் மறக்கவில்லை.

Also Read  "கொரோனா 2ம் அலை சுனாமி போல் வருகிறது…!" - எச்சரிக்கும் அதிகாரி..!

இதை நான் 3 மாதங்களுக்கு முன்பே கூறியபோது, ‘நான் பைத்தியம்’ என மக்கள் நினைத்தார்கள்” என வெளிப்படையாக கூறினார் ஸ்ருதிஹாசன்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘திரிஷ்யம் 2’ படத்தின் ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

Lekha Shree

விஜய்யின் நெருங்கிய உறவினர் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் திமுக நிர்வாகி மகன்…!

Tamil Mint

தளபதி விஜய்யை தொடர்ந்து குக் வித் கோமாளி புகழ் வாக்களிக்கும் வேற லெவல் வீடியோ இதோ!

Jaya Thilagan

கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட நடிகை நக்மாவுக்கு மீண்டும் கொரோனா!

Shanmugapriya

பாகுபலி ஹீரோ பிரபாஸுக்கு விரைவில் ‘டும் டும் டும்’… மணப்பெண் யார் தெரியுமா?

Tamil Mint

ஆன்லைனில் வளைகாப்பு கொண்டாடிய பிரபல பாடகி…!

Devaraj

பிக்பாஸ் வனிதா சொன்ன ‘குட் நியூஸ்’… செம்ம குஷியில் ரசிகர்கள்…!

HariHara Suthan

பிக்பாஸ் ஆரிக்கு சனம் கொடுத்த சர்ப்பிரைஸ்… ஒரே நாளில் இரட்டை கொண்டாட்டம்…!

Tamil Mint

தல அஜித் 5000 கிமீ பைக்கில் பயணம்! வைரல் ஆகும் புகைப்படம்… முழுவிவரம் இதோ.!

Tamil Mint

ரோஜா சீரியல் நட்சத்திரங்கள் திடீரென வெளியிட்ட வீடியோ… காரணம் என்ன தெரியுமா?

Lekha Shree

விஜய் 65 படத்தின் புதிய அப்டேட்! சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..

HariHara Suthan

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் இணையும் தமிழ்படம்!

Tamil Mint