சாதியால் வஞ்சிக்கப்பட்ட ரோஜா சாதித்த கதை..!


ஜனவரி 19ஆம் தேதி ஆந்திர மாநில சட்டமன்ற உரிமை குழு தலைவர் கோவர்தன் ரெட்டி தலைமையில் திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது., ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் ஆந்திர மாநில தொழிற்சாலைகள் துறை உட்கட்டமைப்பு கழகத் தலைவருமான நடிகை ரோஜா தன்னை திருப்பதி ஏழுமலையான் கோவில் அதிகாரிகள் புறக்கணிப்பது பற்றியும் தன்னுடைய பதவிக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை எனவும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய குடும்பத்தாருடன் சென்றாலும் உரிய மரியாதை அளிக்கப்படுவது கிடையாது என்றும் கண்கலங்கி முறையிட்டார் இந்த செய்தி அப்போது சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. யார் இந்த ரோஜா.? அரசியலில் அசைக்க முடியாத நம்பிக்கையாக அவர் மாறியது எவ்வாறு.?

1992ஆம் ஆண்டு செம்பருத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமான ரோஜாவின் இயற் பெயர் ஸ்ரீலதா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்து ஆணாதிக்கம் நிறைந்த ஆந்திர அரசியலில் அசைக்க முடியாத ஆளுமையாக வலம் வந்து கொண்டிருக்கும் இந்த ஸ்ரீலதாவிற்கு ரோஜா என பெயர் சூட்டியவர் இயக்குனர் சிகரம் பாரதி ராஜா. அடுத்தடுத்து ரஜினி பிரபு தேவா சரத்குமார் போன்ற முன்னணி ஜாம்பவான்கள் உடன் நடித்ததால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் No:1 நடிகையாக உயர்ந்தார்.

Also Read  உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மருத்துவமனையில் அனுமதி!

பொலிட்டிகல் சயின்ஸ் மாணவியான ரோஜா நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக மட்டுமே நடித்துள்ளார். 1999-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து தனது அரசியல் ஆட்டத்தை தொடங்கினார். 2002ஆம் ஆண்டு தனது அறிமுக திரைபடத்தின் இயக்குனரான செல்வமனியை காதல் திருமணம் செய்துகொண்டார் ரோஜா. தெலுங்கு தேசம் கட்சியில் நேர்ந்த உட்கட்சி துரோகத்தால் அந்த கட்சியில் இருந்து விலகி ஆந்திர முதல்வர் YSR முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

அதற்கு அடுத்த சில மாதங்களிலேயே விமான விபத்தில் YSR உயிரிழக்கவே ரோஜா கட்சியில் சேர்ந்த நேரம் அவர் இறந்துவிட்டதாக எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் கடுமையாக சாடியது. காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் அதிகமாக இருந்ததால் ysr மகன் ஜெகன்மோகன் ரெட்டி அதிலிருந்து விலகி YSR காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டு வந்த குளறுபடிகளை தாங்க முடியாத காரணத்தினால் கட்சியிலிருந்து ரோஜாவும் வெளியேறினார். அதன்பின் ஜெகன்மோகன் ரெட்டியுடன் YSR காங்கிரஸில் இணைந்து தீவிரமாக செயல்பட்டு கட்சியை மாநிலம் முழுவதும் கொண்டு சென்றார். முக்கியமாக சந்திரபாபு நாயுடு கற்றுக்கொடுத்த பாடம் மற்றும் சொந்த கட்சி சொல்லிக்கொடுத்த அரசியல் துரோகம் போன்றவற்றினால் கிடைத்த நுணுக்கங்கள் ரோஜாவை அரசியலில் முத்திரை பதிக்க கற்றுக் கொடுத்தது. பம்பரமாக சுற்றி கட்சிக்காக வேலை பார்த்த ரோஜா 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திர சட்டமன்ற தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ரோஜாவின் இந்த தைரியமான போக்கு பல சர்ச்சைகளுக்கு உள்ளானது உண்டு ஆனால் அவற்றில் பல நியாயமானவை. 2015ஆம் ஆண்டு ஆந்திர சட்டப்பேரவையில் தன்னைப் பார்த்து மோட்டார் வாய் எம்எல்ஏ என கிண்டல் செய்த ஆளுங்கட்சி எம்எல்ஏவை நோக்கி தன் செருப்பை தூக்கிக் காட்டினார்.

Also Read  “ஊரடங்கு வேண்டாம் என்றால் ஒத்துழைப்பு கொடுங்கள்” - மக்களிடம் வலியுறுத்திய கர்நாடக முதல்வர்!

இதனால் ஆந்திர சட்டமன்றத்தில் பெரும் சலசலப்பு மூண்டு மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது. இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய ரோஜா தன்னை தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள் மானபங்கம் செய்ய முயற்சித்ததாக தெரிவித்த கருத்து ஆந்திர மாநிலத்தில் உள்ள பெண்கள் அனைவரையும் ரோஜாவின் பக்கம் நிற்க வைத்தது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது inspiration என கூறும் ரோஜா தமிழகத்திலிருந்து நடிப்பை மட்டும் இல்லாது அரசியலையும் கற்றுக்கொண்டார். ஆந்திர சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதாக குற்றம் சாட்டி ரோஜாவை இரண்டு ஆண்டுகள் சட்டமன்றத்தில் இருந்து இடை நீக்கம் செய்தனர்.

ஆந்திராவின் ஆணாதிக்க அரசியலில் தான் பழிவாங்கப் படுவதாக சரோஜா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கினார். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மக்களிடம் தனக்கிருக்கும் செல்வாக்கை கடுகளவும் கசியாமல் பார்த்துக் கொண்டார். அதன்பின் அரசியலில் மீண்டும் முழுவீச்சில் ஈடுபட்டு ரோஜா மாநிலம் முழுவதும் மூலை முடுக்கெல்லாம் ஜெகனின் புகழையும் கட்சியின் நிலைப்பாட்டையும் கொண்டு சென்றார். முக்கியமாக இவரது பேச்சு அடித்தட்டு மக்களையும் YSR காங்கிரஸின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. சொல்லப்போனால் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அடுத்து கட்சியில் வசீகரம் கொண்ட தலைவராக ரோஜா உருவெடுத்தார்.

Also Read  12-ம் வகுப்பு பொதுத்தேர்வு.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..

2019ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடுவை வீழ்த்த பெரும் பங்காற்றிய ரோஜா நகரி தொகுதியில் மீண்டும் நின்று வெற்றி பெற்றார். அதுமட்டுமில்லாமல் ஆந்திரா முழுவதும் YSR காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றவுடன் ரோஜா விற்கான உரிய பதவி வழங்கப்படாமல் இருந்தது அது பெரும் பேசுபொருளாக இது குறிப்பிடத்தக்கது. ரோஜாவும் தனது சாதி அடிப்படையில் தான் தனக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படவில்லை என ஆதங்கப்பட்டார்.

அதன்பின் மாநில தொழிற்சாலைகள் உட்கட்டமைப்பு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இரண்டரை ஆண்டுகள் கழித்து கண்டிப்பாக அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்கு வரும்போது அறிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பல்வேறு எம்எல்ஏக்கள் வகித்து வந்த வாரிய தலைவர் பதவி பறிக்கப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் இதில் ரோஜாவின் பதவியும் பறிக்கப்பட்டது .அதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், ஆந்திர அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட இருப்பதால் இதில் இணைவதற்கு வசதியாக ரோஜா பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஒரு கருத்தும் ஆந்திர அரசியலில் நிலவுகிறது. ஆந்திர அரசியலில் உள்ள பெண்களுக்கு உதாரணமாய் உருமாறி உள்ள ரோஜா உண்மையில் ஒரு சிங்க பெண்ணே.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழக அரசின் தலைமை கொறடாவாக கோவி. செழியன் நியமனம்..

Ramya Tamil

விஜய் ரசிகர்கள் என்மீது கோபப்பட்டு என்ன நடக்கப் போகிறது? சீமான்

Tamil Mint

யோகி பாபு நடித்த புதுப்படம் ஓடிடியில் ரிலீஸ்… மகிழ்ச்சியில் ரசிகர்கள்…

VIGNESH PERUMAL

நள்ளிரவில் வங்கியின் ஏடிஎம்மை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி

VIGNESH PERUMAL

குடிபோதையில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவி வெட்டிய கணவன் கைது…

VIGNESH PERUMAL

கொரோனா தொற்றால் மனைவியுடன் இணைந்த பேட்ட வில்லன்!

HariHara Suthan

பெண்ணிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற பறவை! – வைரல் வீடியோ

Shanmugapriya

கள்ள காதலால் கைதியான காவல் துறை…. மனைவி மற்றும் கள்ளகாதலன் கைது…

Devaraj

அரக்கனின் கொடூரச் செயல்… துடிதுடித்து போன மனைவி… அதிர்ச்சி தரும் செயல்…

VIGNESH PERUMAL

அமெரிக்க துணை அதிபராக தேர்வான கமலா ஹாரிஸ் மற்றும் அதிபர் ஜோ பிடென் நாட்டு மக்களுக்கு உரை

Tamil Mint

குக் வித் கோமாளிக்கு போட்டியாக களமிறங்கும் பிரபல நடிகர்…….

VIGNESH PERUMAL

மணமகனுக்கு இரண்டாம் வாய்பாடு தெரியாததால் திருமணத்தை நிறுத்திய பெண்!

Shanmugapriya