a

“விஷாலுக்கு பயந்து ஓடிய நடிகை யார்?” – காயத்ரி ரகுராமிடம் கேள்வி கேட்ட நடிகர்!


சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் காமர்ஸ் ஆசிரியராக இருந்த ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக புகார் எழுந்தது. போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பல பிரபலங்களும் பிஎஸ்பிபி பள்ளிக்கு எதிராக தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் என்னை பயப்பட செய்கிறது மற்றும் அந்த பள்ளி மூடப்பட வேண்டும். இதுவரை பள்ளி நிர்வாகம் பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் பெற்றொர்களிடம் மன்னிப்பு கூட கேட்கவில்லை. இதுபோன்ற குற்றங்களை கடுமையாக கையாள வேண்டும். எனது நண்பர் அன்பில் மகேஷ் ஸ்ட்ராங்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவை விஷால் பதிவிட்ட உடனே நடன இயக்குநரும், பாஜக பிரமுகரும் ஆன காயத்ரி ரகுராம் ட்விட்டரில் விஷால் மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தார்.

Also Read  'ஆர்ஆர்ஆர்' படத்தில் 'சீதா' ரோலில் நடிக்கும் ஆலியா பட்டின் First Look poster வெளியாகும் தேதி அறிவிப்பு!

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் “சினிமா துறையை பொறுத்தவரையில் முதலில் கண்டிக்கப்பட வேண்டியவர்கள், பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுப்பவர்களைத்தான். விஷால், சினிமாவில் புதிதாக நுழையும் பெண்களுக்கு என்ன நடக்கிறது என்று பாருங்கள்.

துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படும் மூத்த பெண் நடிகர்களை பாருங்கள்.நீங்களும் உங்களது நண்பர்களும் அந்த இடத்தில் இருந்து வந்தவர்கள்தான். பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்து விடுவீர்கள்.

Also Read  "கே.வி. ஆனந்துடன் படம் பண்ண நினைத்தேன்… மிஸ் பண்ணிவிட்டேன்!" - நடிகர் ரஜினியின் வைரல் வீடியோ!

உங்களால் நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சினிமா துறையில் உதவித்தேவைப்படும் பெண்களுக்குத் துணையாக உங்கள் வீரத்தை நீங்கள் காண்பித்து இருக்க வேண்டும்.

ஆனால் நடப்பதோ வேறாக இருக்கிறது.உங்களது தொடர் அணுகுமுறையால், மூத்த பெண் நடிகர்கள் உங்களைக் கண்டாலே ஓடுகிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் நிலையில், விஷால் காயத்ரியின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று சிலர் பதிவிட்டனர்.

இந்நிலையில், விஷாலின் நண்பரும் நடிகருமான நந்தா, காயத்ரி ரகுராமிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “விஷாலுக்கு பயந்து எந்த நடிகை கூறினார் என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக குரல் கொடுப்பது தான் சிறந்தது என்றும் அரசியலுக்காக முட்டாள்தனமான கருத்து கூற வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

Also Read  மாஸ்டர் பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் தம்பி!

இதற்கு பதில் அளித்த காயத்ரி ரகுராம், “முடிந்தது முடிந்ததுதான் அந்த பிரச்சனையிலிருந்து மீண்டு உள்ள அவர்களின் எதிர்காலத்தை நான் கேட்க விரும்பமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ இந்தி ரீமேக்கில் நடிக்கும் அபிஷேக் பச்சன்?

Lekha Shree

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் நெஞ்சுவலியால் மரணம்

Devaraj

கொரோனா காலத்தில் பிரபலங்களின் சுற்றுலா செல்ஃபி – கடுமையாக சாடிய ஸ்ருதிஹாசன்!

Lekha Shree

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 5 படங்கள் நடிக்கும் சிவகார்த்திகேயன்? இவ்வளவு கோடி சம்பளமா?

Lekha Shree

லோகேஷ் கனகராஜ் என்னை கொன்று விடுவார் – பீதியில் மாளவிகா மோகனன்

Tamil Mint

மணிமேகலையிடம் நலம் விசாரித்த ஷகிலா – வைரலான புகைப்படம்!

HariHara Suthan

ராஷ்மிகா மந்தனாவிற்கு அடித்த ஜாக்பாட்… சூப்பர் ஸ்டார் வாரிசுடன் ஜோடி சேர வாய்ப்பு…!

Bhuvaneshwari Velmurugan

நடிகரும் தயாரிப்பாளருமான ஜி.ராமசந்திரன் காலமானார்

sathya suganthi

ஓடிடியில் ‘ஜகமே தந்திரம்’: ஏமாற்றத்தை வெளிப்படுத்திய தனுஷ்… விளக்கமளித்த தயாரிப்பாளர்..!

Lekha Shree

“தனுசும் நானும் ஒன்றாக படித்தோம்” – மனம் திறந்த குக் வித் கோமாளி பிரபலம்!

Shanmugapriya

“இசைக்கு இளைஞர்… என் மனதுக்குக் கிளைஞர்” – இசைஞானிக்கு வாழ்த்து கூறிய உலகநாயகன்!

Lekha Shree

‘தெறி’ படப்பிடிப்பில் விஐய் மகன் சஞ்சய் – கலக்கல் போட்டோ இதோ…!

Lekha Shree