தமிழகம்: அதிமுகவின் முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று தொடங்கியது


சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் அதிமுகவினர் தங்களின் முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தை தொடங்கினர். 

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்பிக்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் அக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். பொதுக்கூட்டத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Also Read  வாழை கழிவுகளில் விமான பாகம் தயாரிக்கலாம் - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். 

அதைத்தொடர்ந்து இன்றைய பிரச்சார கூட்டத்தில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க தொடர்ந்து 100 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்யும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். 

Also Read  நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் – ஒரே நாளில் 24,492 பேருக்கு பாதிப்பு

தொடர்ந்து பேசிய அவர், “2021 சட்டமன்ற தேர்தலில் இமாலய வெற்றியை அ.தி.மு.க பெற இருக்கிறது. மறைந்த முதல்வர் அம்மாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழ் மண்ணில் அமைப்போம்” என உறுதி கூறினார்.

மேலும், “எந்த தேசிய கட்சி வந்தாலும் தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையில் தான் கூட்டணி இருக்கும். எந்த தேசிய கட்சியும் தமிழகத்தில் வரவிடாமல் திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்து கொண்டு இருக்கின்றன. தற்போதைய  சூழ்நிலையை பயன்படுத்தி சிலர் அரசியலில் நுழைய பார்க்கிறார்கள்” என அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறினார்.

Also Read  1,585 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று: தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்.!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வைகோல் போருக்குள் பதுக்கப்பட்ட ரூ.ஒரு கோடி – வருமானவரித்துறை சோதனையில் சிக்கிய எம்எல்ஏவின் ஓட்டுநர் …!

Devaraj

நடிகர் விஜயின் தந்தை புதிய கட்சி தொடக்கம்

Tamil Mint

பாரம்பரிய கலைகளை அழித்து விடாதீர்கள்: சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

Tamil Mint

மேற்கு வங்கத்தில் சாவர்க்கர் குறித்த சர்ச்சை கேள்வி… கொதித்தெழுந்த பாஜக…! என்ன நடந்தது?

Lekha Shree

நிறைமாத கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி – ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி கோர விபத்து…!

sathya suganthi

சென்னையில் 41% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி – ஆய்வில் தகவல்!

Tamil Mint

குப்பைகளை கொட்ட ஜனவரி 1 முதல் கட்டணம்!

Tamil Mint

“ஆன்லைன் வகுப்புகள் ரெக்கார்ட் செய்யப்பட வேண்டும்” – முதலமைச்சர் அதிரடி!

Lekha Shree

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

suma lekha

2 கட்டங்களாக நடத்தப்படும் உள்ளாட்சி தேர்தல் – அதிமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!

Lekha Shree

விலங்குகள் ட்வீட் செய்தால் எப்படி இருக்கும்? – ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஒன்றிய உயிரினங்கள்…!

Lekha Shree

“கோடநாடு விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை” – முதலமைச்சர் ஸ்டாலின்

Lekha Shree