a

தொடரும் ஈபிஎஸ்-ஓபிஎஸ் பூசல்? – போஸ்டரால் பரபரப்பு..!


அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை கலந்தாலோசிக்காமல் எடுத்த முடிவால் தான் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததாக கூறி திருநெல்வேலியில் அக்கட்சி தொண்டர்கள் பெயரில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அதிமுக மானூர் பகுதி தொண்டர்கள் என்கிற பெயரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் ஆலோசனையை கேட்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read  தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்! ஒரே நாளில் 197 பேர் பலி…!

மேலும், பன்னீர்செல்வத்தின் ஆலோசனையைப் பெறாமல் செயல்பாட்டால் அதிமுக தலைமையகம் முற்றுகையிடப்படும் என்றும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் அதிமுகவில் பரபரப்பும் சர்ச்சையும் கிளம்பியுள்ளது.

ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர் தேர்ந்தெடுக்கும் போது ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே கடும் மோதல் ஏற்பட்டு கட்சியினர் இருதரப்பாக பிரிந்தனர். ஆனால், பலர் பழனிச்சாமியின் பக்கம் நின்றதால் ஓபிஎஸ் வேறுவழியின்றி ஈபிஎஸ்-ஐ எதிர்க்கட்சி தலைவராக தேர்தெடுக்க சம்மதித்தார்.

Also Read  சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை நேரம் குறைப்பு

இந்த தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் பழனிசாமி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் சசிகலாவின் ஆடியோ மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றினார் போல இந்த போஸ்டர் இலைமறை காய்மறையாக உள்ள பூசலை மீண்டும் தூண்டியுள்ளது.

Also Read  கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடம் - வெளியான பகீர் தகவல்!

எனவே, தற்போது அரசியல் வட்டாரத்தில் பலர் நிச்சயம் அதிமுக இரண்டாக பிரியும் என கிசுகிசுத்து வருகின்றனர்.

தற்போது ஓபிஎஸ்க்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் அதிமுகவினரிடையே சர்ச்சையை கிளப்பியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கோவை அருகே ரயிலில் மோதி காயம் அடைந்த யானை பலி!

Lekha Shree

நாளை வேலூர் செல்கிறார் முதல்வர்

Tamil Mint

வெடித்து சிதறிய பலூன் -பிரதமர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் தீ காயங்களுடன் தப்பிய நிர்வாகிகள் .

Tamil Mint

மருத்துவ கலந்தாய்வு இன்று தொடக்கம்

Tamil Mint

200 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் முன்னிலை.. ஆனால் சிக்கலில் மம்தா..

Ramya Tamil

“அரசுப் பேருந்துகளில் இனி பெண்களுக்கு கட்டணம் கிடையாது!” – பஞ்சாப் அரசு

Shanmugapriya

நடிகர் விக்ரம் ரூ. 30 லட்சம் நிதியுதவி…!

Lekha Shree

7 மாவட்டங்களில் முழு ஊரடங்கு? ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை

Devaraj

தமிழகத்தை வாட்டி எடுத்த வெயில் – குளிர்வித்த மழை..!

Lekha Shree

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் இன்று மாலை 6 மணிக்கு சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி.

Tamil Mint

தமிழகத்தில் ஏப்ரல் 6-ல் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு! ஒரே கட்டமாக தேர்தல்!

Bhuvaneshwari Velmurugan

துரைமுருகன், டி ஆர் பாலுவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

Tamil Mint