அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன்…!


சிறையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.

ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ. 3 கோடி பணமோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது முன்னதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கர்நாடகாவின் ஹாசன் பகுதியில் வைத்து தமிழக காவல்துறையினர் கைது செய்தனர்.

முன்னதாக ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது எழுந்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்ய 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

Also Read  பிரதமரின் படம் இல்லாததால் தடுப்பூசி முகாம் பேனரை கழற்றிய பாஜகவினர்..!

முன்னதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

அப்போது ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

Also Read  5 சிறுநீரகங்களுடன் உயிர் வாழும் நபர்…! காரணம் இதுதான்..!

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில்,தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட நால்வரை பிடிக்க குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

சுமார் 20 நாட்களாக 8 தனிப்படை காவல்துறையினர் ராஜேந்திர பாலாஜியை தேடி வந்த நிலையில், இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Also Read  பிரதமரின் காலில் விழ முயன்ற அதிமுக எம்பி - மோடி கொடுத்த சூப்பர் அட்வைஸ்! இது தேவையா?

இந்நிலையில், அவருக்கு நான்கு வார இடைக்கால ஜாமீன் வழங்கிய நீதிபதிகள், அவர் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் நிபந்தனைகளை விதித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாலியல் வன்கொடுமை வழக்கு: விமான படை அதிகாரியை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி!

Lekha Shree

ஊரக உள்ளாட்சி தேர்தல் – விஜய் மக்கள் இயக்கத்தினர் வேட்புமனு தாக்கல்..!

Lekha Shree

“வெற்று அறிவிப்புகள் வேண்டாம்!” – உலகத்தலைவர்களுக்கு பாடம் எடுத்த 15 வயது தமிழக சிறுமி…!

Lekha Shree

செல்பி மோகத்தால் ஆற்றில் விழுந்த இளைஞர்: 10 மணிநேரம் கழித்து காப்பாற்றிய காவலர்.!

mani maran

“ஆடி” சொகுசு கார் இல்லையா…! சந்தேகத்தை கிளப்பிய பப்ஜி மதனின் மனைவி…!

sathya suganthi

எம்.டெக்., பயோடெக்னாலஜி மற்றும் எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் – அண்ணா பல்கலைக்கழகம்

Tamil Mint

“கொரோனா விழிப்புணர்வு கூட்டம் என கூறி தப்பித்துக்கொள்வேன்!” – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Lekha Shree

ஸ்டாலின் எப்போது முதல்வராக பதவியேற்கிறார்..? நாளை முக்கிய ஆலோசனை..

Ramya Tamil

அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு 6 மடங்கு அதிகரிப்பு…!

Lekha Shree

தமிழகத்தில் 2,200-ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

ரிவல்டோ யானைக்கு சிகிச்சை; வனத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Tamil Mint

காலியாகும் கமல் கட்சி..? மேலும் ஒரு நிர்வாகி விலகல்..

Ramya Tamil