அதிமுக கூட்டத்தில் பரபரப்பு..! முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவை அடிக்க பாய்ந்த சி.வி.சண்முகம்..!


அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவை மற்றொரு முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அடிக்கப் பாய்ந்ததாக கூறப்படுகிறது.

இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர். அதில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா பேசும்போது, தேர்தல் தோல்வி குறித்தும் சசிகலா விவகாரம் குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது.

அப்போது முன்னாள் அமைச்சரும் விழுப்புரம் மாவட்ட செயலாளருமான சி.வி. சண்முகம் எழுந்து ஒருமையில் பேசி அன்வர் ராஜாவை உட்காரும்படி கூறினாராம்.

Also Read  "விரைவில் அதிமுக சசிகலாவை நோக்கி வரும்" - சி.ஆர். சரஸ்வதி

அப்போது வார்த்தைப் போர் முற்றியதில் ஆத்திரத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தனது இருக்கையிலிருந்து எழுந்து அன்வர் ராஜாவை அடிக்க பாய்ந்துள்ளார். அப்போது அருகில் இருந்த மற்ற அதிமுக நிர்வாகிகள் அவரைப் பிடித்துக் கொண்டனராம்.

இதனால் அந்த கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அன்வர் ராஜா சசிகலாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார். இதனால் அன்வர் ராஜாவுக்கும் சசிகலாவை எதிர்க்கும் சி.வி.சண்முகத்திற்கும் இடையே சிறு பூசல் நிலவியுள்ளது.

Also Read  அவசர உதவிக்கு இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்.. சென்னை காவல்துறை அறிவிப்பு..

இந்நிலையில், கட்சியின் மூத்த தலைவராக உள்ள அன்வர் ராஜாவை சிவி சண்முகம் அடிக்க பாய்ந்து கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னை: 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொட்டி தீர்த்த கனமழை!

Lekha Shree

தமிழகத்தில் கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி

Tamil Mint

“மாணவர் தனுஷின் இறப்பிற்கு திமுக தான் முழு பொறுப்பு!” – அண்ணாமலை குற்றச்சாட்டு

Lekha Shree

தே.மு.தி.க செயலாளர் தி.மு.கவில் இணைந்தார்

Tamil Mint

இன்று முதல் குறைந்த விலையில் வெங்காயங்களை விற்கும் தமிழக அரசு

Tamil Mint

’என் பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம்’ – சசிகலா வேண்டுகோள்!

suma lekha

தமிழகம்: தொடரும் கனமழை…! 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்..!

Lekha Shree

“உளுத்து போயிருக்கின்றன” – இணையத்தில் வைரலாகும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் குறிப்பு…!

sathya suganthi

சீமானுடன் கூட்டணி… கமலின் அடுத்த மூவ்..!

suma lekha

வேல் யாதிரைக்கு அனுமதி கிடையாது – தமிழக அரசு உத்தரவு

Tamil Mint

நுழைவுச் சீட்டில் ஆண் புகைப்படம்.. தேர்வு எழுத முடியாமல் தவித்த மாணவி.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Lekha Shree

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree