“கூட்டணியில் இருந்து விலகுவது பாமகவுக்கு தான் இழப்பு” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்


கூட்டணியில் இருந்து விலகுவது பாமகவுக்கு தான் இழப்பு என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து பாமக கட்சியின் தலைவர் ஜி.கே.மணி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசுகையில், ” கடந்த தேர்தல்களில் கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை. அதிமுகவுக்கு ஆளுமைமிக்க தலைமை இல்லாததால் அதிமுக தொண்டர்கள் முழுமையான ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

சொந்தக்கட்சிக்காரர்கள் கட்டுப்படுத்த முடியாத எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி வைத்தால் வெற்றி பெறமுடியும? அதிமுகவோடு கூட்டணி வைத்தாலும் நமக்கு உரிய இடம் கிடைக்காது. பாமகவால் கூட்டணி கட்சிகள் பலன் அடைந்தது. கூட்டணி கட்சியால் பாமகவுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

Also Read  பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு...

ஆகவே, அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம். உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று குறிப்பிட்ட இடங்களில் வென்று பாமக வாக்கு சதவீதத்தை நிரூபிப்போம்” என கூறியிருந்தார்.

இதையடுத்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பாமக தனித்துப் போட்டி என்பது அவர்கள் கட்சி எடுத்த முடிவு. அதிமுகவை விமர்சனம் செய்வது என்பதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது.

Also Read  "திமுகவுக்கு வாக்களிக்கா விட்டால் உடல் நிலை சரியில்லாமல் போகும்" - சாபம் விட்ட வேட்பாளர்!

அது தொடர்ந்தால், நாங்களும் விமர்சிக்க வேண்டிய சூழல் ஏற்படும். சிலரோடு சேர்ந்து இந்த முடிவை எடுத்திருக்கலாம்.

அதிமுக ஆட்சியில் செய்த திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்வோம். பாமக எடுத்த முடிவு, அவர்களுக்கு தான் இழப்பு” என கூறியுள்ளார்.

அதேபோல அதிமுக எம்.எல்.ஏ. செல்லூர் ராஜு கூட்டணி விலகல் குறித்து கருத்து தெரிவிக்கையில், “கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டு போலத்தான்; தேவை என்றால் போட்டுக்கொள்வோம், இல்லையென்றால் கழற்றி வைத்து விடுவோம். கூட்டணியை நம்பி அதிமுக இல்லை” என கூறியுள்ளார்.

மேலும், இந்த கூட்டணி முறிவு குறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி தெளிவுபடுத்தியபோது, “ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம்” என தெரிவித்துள்ளார்.

Also Read  ஒன்றிய அரசு என அழைக்க தடை இல்லை: ஐகோர்ட் மதுரை கிளை

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. அதனால் உள்ளாட்சித் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாமகவின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அ.தி.மு.க. எம்.எல்.ஏ., காரில் கட்டுக்கட்டாக பணம் – ரூ.1 கோடியை பறிமுதல் செய்த பறக்கும் படை…!

Devaraj

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. லாக்டவுன் 2.O? அச்சத்தில் மக்கள்…!

HariHara Suthan

யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகா கைது…!

Lekha Shree

கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரிப்பு : இல்லத்தரசிகள் ஷாக்

suma lekha

இது தேவையா? – போதைக்காக தின்னரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து குடித்து இறப்பு!

Shanmugapriya

திருமணத்தில் புகுந்து கன்று ஈன்ற பசு! – வினோத சம்பவம்

Shanmugapriya

தமிழகம்: பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்…!

Lekha Shree

டிஆர்பியில் சக்கை போடு போட்ட சன் டிவி… காணாமல் போன விஜய் டிவி!

Tamil Mint

இந்தியாவில் இந்து மரபணு மட்டும்தான் உள்ளது – ஆர்எஸ்எஸ் தலைவர் தத்தாத்ரேயா சர்ச்சை பேச்சு!

Lekha Shree

பொள்ளாச்சி உணவகத்தில் காதலர் தினத்தை கொண்டாடிய காஜல் அகர்வால்

Tamil Mint

“மீண்டும் அண்ணா… வேண்டும் அண்ணா.. அண்ணா யாரு?” – விஜய் ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு..!

Lekha Shree

தமிழ் தேசிய புலிகள் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார் மன்சூர் அலி கான்!

Shanmugapriya