a

திமுக அரசை குறைகூறும் எண்ணம் இல்லை.. ஆனால்..! – தனித்து அறிக்கை விட்ட ஓ.பி.எஸ்.!


அதிமுக பொதுச்செயலாளர் பதவி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு காலியாகவே உள்ளது. இந்த நிலையில், இரு அணியாக பிரிந்த அதிமுகவை ஒன்று சேர்க்கும் முயற்சியாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டனர்.

இதன் பின்னர் அதிமுக கட்சி சார்பான அனைத்து அறிக்கையும் ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ். இரண்டு பேரின் கையெழுத்துடனே வெளியிடப்பட்டு வந்தது.

ஆனால் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 65 தொகுதிகளில் வெற்றிபெற்று பிரதான எதிர்க்கட்சி இடத்தை அதிமுக பிடித்துள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற சர்ச்சை அக்கட்சிக்குள் நிலவி வந்தது.

இதனால், திரும்பியும் கோஷ்டி மோதல் ஏற்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

Also Read  சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு: ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை இல்லை

இந்த நிலையில் தமிழகத்தில் நிலவும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மட்டும் தனித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக 18 வயதினருக்கு மேற்பட்டவர்கள், மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புவதாக அந்த அறிக்கையில் ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.

Also Read  ஜூன் 8 வரை PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபலனை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு

ஆன்லைனில் முன்பதிவு செய்ய முயலும் போது, பதிவு முடிந்துவிட்டது என்றும் இருப்பு இல்லை என்றும் வருவதாக கூறிப்பிட்டுள்ள ஓ.பி.எஸ், 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 2வது டோஸ் போட போதிய தடுப்பூசி கிடைப்பது இல்லை என்றும் புகார்கள் வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி செலுத்துவதில் உள்ள சிக்கல்கள் அரசின் கவனத்துக்கு எடுத்து வர வேண்டும் என்கின்ற நல்ல நோக்கத்துடன் தான் இதை சுட்டிக்காட்டுவதாகவும் அரசை குறை கூற வேண்டும் என்பது நோக்கமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Also Read  தீபாவளிக்கு கிட்டத்தட்ட 15,000 சிறப்பு பேருந்துகள்

கொரோனா பரவலை தடுக்க தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசிடம் இருந்து பெற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசை ஓ.பி.எஸ். அறிவுறித்தி உள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நோ கமெண்ட்ஸ்: விஜய்யின் அறிக்கை பற்றி எஸ்ஏசி

Tamil Mint

வாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை – உயர்நீதிமன்றம்

Devaraj

திருப்பூர் சுப்ரமணியம் தமிழ் சினிமாவிற்கு வரமா சாபமா ?

Tamil Mint

திமுக வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள மருத்துவர்கள் விவரம் இதோ…!

Devaraj

மதுரையில் ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் – மு.க. அழகிரியை சந்திக்க வாய்ப்பு!

Lekha Shree

“கருத்துக்கணிப்பில் திமுக வெற்றி பெறும்; தேர்தலில் வெற்றி பெறாது” – ஹெச்.ராஜா காட்டம்

Shanmugapriya

தமிழக கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை குறையும் – வானிலை மையம் தகவல்…!

Devaraj

பாஜகவில் இணையும் கங்குலி? விரைவில் அறிவிப்பு!

Jaya Thilagan

முகக்கவசம் அணியாவிடில் அபராதம் – தமிழக அரசு

Devaraj

தமிழகத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த, அடிக்கல் நாட்டிய திட்டங்கள் எவை?

Tamil Mint

கவுதம் கம்பீரின் தொண்டு நிறுவனம் மீது நடவடிக்கை! – நடந்தது என்ன?

Lekha Shree

புதிய கல்விக் கொள்கை பற்றி தமிழக அரசு இன்று கருத்து கேட்கிறது

Tamil Mint