ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்… வெளியானது அஜித்தின் ‘வலிமை’ மோஷன் போஸ்டர்!


அஜித்தின் ‘வலிமை’ மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

நீண்ட நாள் காத்திருப்புக்கு இன்று பலன் கிடைத்துவிட்டதால் அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் வலிமை குறித்த ஹேஸ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

நேர்கொண்ட பார்வை படத்தின் மெகா வெற்றிக்கு பின்னர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை.

இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தில் ‘காலா’ பட நடிகை ஹுமா குரோஷி அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

Also Read  இயக்குனர் பாலா திருமணத்தில் விக்ரம்-சூர்யா… யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்!

அஜித் இந்த படத்தில் ஒரு காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படம் தொடங்கி வெறும் டைட்டில் மட்டுமே வெளியான நிலையில் அஜித் ரசிகர்கள் பார்க்கும் இடமெல்லாம் வலிமை அப்டேட் கேட்டு சேட்டை செய்தனர்.

அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பல இடங்களிலும் பல பேரிடமும் வலிமை படம் குறித்த அப்டேட் கேட்டு மிரளவைத்தனர்.

இதன் பிறகு அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரிய நேரத்தில் அப்டேட் வரும் என கூறி ரசிகர்களை அமைதி காக்க சொன்னார்.

Also Read  'ஹார்ட்டுக்குள்ள சத்தம் இல்ல" - வைரலாகும் 'குக் வித் கோமாளி' சிவாங்கியின் பாடல்!

பின்னர் சில தினங்களுக்கு ரசிகர்களும் அமைதி காத்தனர். ஆனால், இப்பொழுது சாமியார், ட்விட்டர் என மீண்டும் வலிமை அப்டேட் கேட்க துவங்கினர்.

அந்தவகையில் யூரோ கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்று வரும் மைதானத்திலும் ஒரு ரசிகர் வலிமை அப்டேட் என பேப்பரில் எழுதி காட்டியுள்ள புகைப்படம் வைரல் ஆகியது.

Also Read  ஷாருக்கானுக்கு ஜோடியாகும் நயன்தாரா?

அஜித்தின் ‘வலிமை’ கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பில் உள்ளது. மேலும், கொரோனா தொற்று அச்சுறுத்தலால் படப்பிடிப்பு இன்னும் தாமதமாகியது.

இந்நிலையில், ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு இன்று பலன் கிடைத்துவிட்டது. இன்று அஜித்தின் ‘வலிமை’ மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு வலிமை அப்டேட் கிடைத்துள்ள உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள் ட்விட்டர் மூலம் தங்களின் மகிழ்ச்சியையும் ஆரவாரரத்தையும் பகிர்ந்து தெறிக்கவிட்டு வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ராயல் என்பீல்டு பைக்கில் மாஸ் காட்டும் மாளவிகா மோகனன்! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

பிரபலங்களை குறிவைக்கும் கொரோனா – இயக்குனர் பாக்யராஜுக்கு கொரோனா தொற்று உறுதி!

Lekha Shree

தனுஷின் ‘D43’ படத்தில் இருந்து கார்த்திக் நரேன் விலகல்?

Lekha Shree

அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் இவரா? வெளியான ‘தெறி’ அப்டேட்..!

Lekha Shree

சோனு சூட் கட்டவுட்டுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்த மக்கள்!

Shanmugapriya

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ள தனுஷின் ‘அசுரன்’…!

Lekha Shree

நெட்ஃபிலிக்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்த நவரசா ப்ரோமோ வெளியீடு – ரசிகர்கள் குஷி

HariHara Suthan

பெட்ரோல் விலை ஏறிடுச்சு.! சைக்கிள் ரைடு போலாமா.! – சன்னி லியோன் கிண்டல்

suma lekha

வெளியானது 4 முன்னணி நடிகைகள் நடிக்கும் படத்தின் ‘மாஸ்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Lekha Shree

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் இணையும் தமிழ்படம்!

Tamil Mint

ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது: ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணன்

Tamil Mint

கர்ணன் முதல் பாதி மட்டும் 10 அசுரனிற்க்கு சமம்! இணையத்தில் தெறிக்கும் கர்ணன் பட விமர்சனம்

Jaya Thilagan