a

கொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகு இதயப்பரிசோதனை அவசியம் – ஆய்வில் தகவல்


கொரோனா நோயாளிகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சேராமல், வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று குணமடைந்து வருகிறார்கள்.

ஆனால் தொற்று நோயில் இருந்து மீண்டு வந்தாலும் அதனால் நீண்ட கால பக்க விளைவுகளை நோயாளிகள் எதிர்கொண்டு வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Also Read  ராணுவத்துக்கு அதிகம் செலவிட்ட நாடுகள் பட்டியல் - இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

ஆக்ஸ்போர்டு ஜர்னல் நடத்திய ஆய்வில், கொரோனாவின் கடும் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர், நோயிலிருந்து மீண்டு பிறகும் பல மாதங்கள் கழித்து இதய பாதிப்புக்கு உள்ளாவது தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்று, உடலில் வீக்கத்தைத் தூண்டுவதால் இதய தசைகள் பலவீனமடைய வழிவகுக்கும் என்றும் இதய தாளத்தில் அசாதாரணத்தன்மை மற்றும் உறைதலை கூட உண்டாகும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read  மகாராஷ்டிரா சட்டமன்ற ஊழியர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் 36 பேருக்கு கொரோனா! அதிகரிக்கும் பாதிப்பு!

வைரஸ் நேரடியாக மாரடைப்பு திசுக்களுக்குள் ACE2 ஏற்பிகள் எனப்படும் ஏற்பி செல்களை ஆக்கிரமித்து நேரடி தாக்குதலை ஏற்படுத்தும் என்பதால் மாரடைப்பு போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால், குணமடைந்த பிறகும் நோயாளிகளின் இதயத்தை பரிசோதிப்பது முக்கியம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read  மரங்களைக் காக்க ஆம்புலன்ஸ் சேவை! - பஞ்சாபில் புது முயற்சி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கமலா என்ற பெயர் கொண்டவர்களுக்கு இலவச அனுமதி! – எங்கு தெரியுமா?

Tamil Mint

தமிழகம் உள்பட பல மாநிலங்களில் 18+ வயதினருக்கு தற்போது தடுப்பூசி இல்லை…!

Devaraj

அமிதாப் பச்சன் மீது புகார்

Tamil Mint

கொரோனா மருத்துவமனைகளாக மாற்றப்படும் ராணுவ முகாம்கள்…!

Devaraj

திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மேல் அனுமதி – மத்திய உள்துறை அமைச்சகம்

Tamil Mint

“கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட வேண்டாம்” – தமிழக சுகாதாரத்துறை

Lekha Shree

கல்லூரி களில் நவம்பர் 1ந்தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்

Tamil Mint

கொரோனா வைரஸ் தொற்று பேரழிவை உண்டாக்கும் என்பதற்கு இந்தியாவே சான்று – உலக சுகாதார அமைப்பு

Lekha Shree

ஆக்சிஜய் வாயு கசிவு – மருத்துவமனையில் 22 நோயாளிகள் உயிரிழப்பு

Devaraj

குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா! – கர்நாடகாவில் 30 குழந்தைகள் பாதிப்பு..!

Lekha Shree

“மக்கள் கொரோனாவில் இருந்து மீள வேண்டும்” – கர்ப்ப காலத்திலும் நோன்பு வைக்கும் செவிலியர்!

Shanmugapriya

அமித்ஷாவுக்கு கொரோனா உறுதி

Tamil Mint