ரஜினியை அடுத்து ‘Man Vs Wild’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகும் பிரபல நடிகர்..! யார் தெரியுமா?


டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சி மேன் Vs வைல்ட். இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரதமர் மோடி உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அதனால் இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல நடிகர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  28 மனைவிகள்! 135 குழந்தைகள்! 126 பேரக்குழந்தைகள்! 37வது திருமணம் செய்த தாத்தா!

மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியில் பிரபலங்களை காட்டுக்கு அழைத்துச் சென்று அவர்களின் அனுபவத்தை வீடியோவாக எடுத்து டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்புவார்கள்.

இந்த நிகழ்ச்சியின் நோக்கம் விதவிதமான விலங்குகள், பறவைகள், பாம்பு வகைகள் ஆகியவை இருக்கும் காட்டுக்குள் பிரபலங்கள் இணைந்து பயணம் செய்யும் திக் திக் காட்சிகளை மக்களுக்கு வழங்குவது.

Also Read  மோடி கூறும் அனைத்தும் பொய் மூட்டைகள்: பிரதமரை கடுமையாக விமர்சித்த திரிணாமுல் காங்கிரஸ்!

தமிழ் உள்பட அனைத்து இந்திய மொழிகளிலும் டப் செய்து ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக உள்ளது.

Bear Grylls என்பவர் பல ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அதில், இந்தியாவை பொருத்தமட்டில் பிரதமர் மோடி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்,த் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Also Read  உலகின் செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்ற பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா…!

இந்த நிலையில் தற்போது லேட்டஸ்ட் அப்டேட் ஆக பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

மாலத்தீவு நாட்டில் உள்ள காட்டில் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நேற்று நடந்ததாகவும் இந்த நிகழ்ச்சி விரைவில் டிஸ்கவரியில் ஒளிபரப்பாக உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கிர்த்தி ஷெட்டியுடன் ஜோடியாக நடிக்க மறுத்த பிரபல நடிகர்? காரணம் என்ன?

Lekha Shree

விவேக் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறிய நடிகர் விஜய்

Jaya Thilagan

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் பிரபல டோலிவுட் ஹீரோ?

Lekha Shree

இவர் தான் ரியல் மாஸ்டர்…… வேஷ்டி சட்டையில் வாத்தி கம்மிங்……..

Devaraj

சச்சின் கவனமாக செயல்பட வேண்டும் – சரத் பவாரின் சூப்பர் அட்வைஸ் இதோ!

Tamil Mint

“புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது கட்சியின் முடிவு” – வைரலாகும் ஷைலஜாவின் பேட்டி!

Shanmugapriya

அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண்: வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

suma lekha

கார்த்திக்கு ஜோடியாகும் இயக்குநர் ஷங்கர் மகள் : ஷாக்கில் ரசிகர்கள்

suma lekha

டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும்: கமல்ஹாசன்

Tamil Mint

வெளியானது ‘நாரப்பா’ படத்தின் ட்ரெய்லர்…!

Lekha Shree

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!

suma lekha

பிரதமர் மோடி விவசாயிகள் போராட்டத்தை பற்றி தமிழில் ட்வீட் செய்துள்ளார்

Tamil Mint