பாஜக 60 சீட் கேட்டு தொடர் பிடிவாதம் எதிரொலி: அதிமுக இன்று அவசர ஆலோசனை


தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவும் இடம் பெற்று இருந்தது. அந்த கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அந்த 5 தொகுதிகளில் பாஜக தோல்வியடைந்தது. 

தொடர்ந்து, அதிமுக அரசின் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக பாஜக அவ்வப்போது அறிக்கைகள் வாயிலாகவும், மூத்த தலைவர்கள் பேட்டியின் வாயிலாகவும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நேரத்தில் பாஜக தலைமையில் தான் கூட்டணி என்று அக்கட்சி தலைவர்கள் பேட்டி அளித்த சம்பவம் அரங்கேறியது. இது அதிமுகவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

இதற்கு, பதிலடி கொடுக்கும் வகையில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அதிமுக அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று அதிரடியாக தெரிவித்தனர். 

Also Read  நாளை முதல் சென்னை-திருப்பதி இடையே ரயில் சேவை தொடக்கம்

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, கூட்டணி தொடர்பாக பாஜக தேசிய தலைவர் தமிழகம் வந்து அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வரும் சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று அதிமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்தனர்.

இந்த நிலையில்,  உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா, இபிஎஸ், ஓபிஎஸ்சிடம் பாஜவுக்கு 60 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றும், 100 தொகுதிகளின் பட்டியலை கொடுத்து அதில் 60 தொகுதிகளை எங்களுக்கு கண்டிப்பாக தர வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தார். 

அமித்ஷா கொடுத்த பட்டியலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு என்று கருதப்படும் தொகுதிகள் இடம் பெற்று இருந்தது. மேலும், பாஜவுக்கு 60 தொகுதிகளை கொடுத்தால் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு சீட்டுகளை கொடுப்பதில் பிரச்னை ஏற்படும் என்று இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தெரிவித்தனர். 

விரைவில் கட்சியினரிடம் பேசி முடிவை தெரிவிப்பதாகவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர்.  பாஜகவுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க கூடாது என்று அதிமுகவில் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

Also Read  நாளை செய்தியாளர் சந்திப்பு: ஓபிஎஸ் சூசகம்

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை கூட்டணியில் சேர்த்ததால் தான் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் அவர்களை கூட்டணியில் சேர்ந்து கொண்டால், அதிக இடங்களை கொடுத்தால் அதிமுகவால் வெற்றி பெற முடியாது என்று அவர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இந்த பரபரப்பான சூழலில் அதிமுக ஆலோசனை கூட்டம் இன்று மாலை 4.30 மணியளவில் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் நடக்கிறது. 

Also Read  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எப்போது குறையும் - மருத்துவ நிபுணர்கள் சொன்ன தகவல் இதோ…!

இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இக்கூட்டத்தில், சட்டமன்ற தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது. 

சட்டசபை தேர்தலை எவ்வாறு சந்திப்பது, கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்தும், பாஜக கேட்டுள்ள சீட் விவகாரம் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. 

மேலும், இக்கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 300 பேர் கொலை.! Top List-ல் தூத்துக்குடி, மதுரை.!

mani maran

“பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி” – முதலமைச்சர் ஸ்டாலின்

Lekha Shree

டாஸ்மாக் மூலம் ரூ.188 கோடிக்கு மது விற்பனை

Tamil Mint

ஹோட்டலில் அராஜகம் செய்த உதவி ஆய்வாளர்! பெண் மீது தடியடி! வைரல் வீடியோ இதோ!

Lekha Shree

இ.பி.எஸ், ஓ.பி.எஸ். எதிரி அல்ல; எங்கள் ஒரே பொது எதிரி தி.மு.க. தான் – டிடிவி தினகரன்

Tamil Mint

டிஆர்பியில் சக்கை போடு போட்ட சன் டிவி… காணாமல் போன விஜய் டிவி!

Tamil Mint

கைது செய்யப்படுவாரா திருமாவளவன்?

Tamil Mint

மோசடி மன்னனிடம் பைனான்ஸ் வாங்கி சிக்கலில் மாட்டிக் கொண்ட பிரபல தயாரிப்பாளர்கள்… அதிர்ச்சியில் தமிழ் திரையுலம்!

Tamil Mint

தமிழகம்: கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் தொடக்கம்!

Lekha Shree

பெரியார் சிலை மீது காவிச் சாயம் வீச்சு: கோவையில் பரபரப்பு

Tamil Mint

ஆம்புலன்ஸ் ஆக மாறிய கார்கள்; ககன்தீப் சிங் பேடி அதிரடி திட்டம்!

Lekha Shree

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு – தனிப்படை அமைப்பு..!

Lekha Shree