மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவரைத் தேர்வு செய்யும் தேர்வுக் குழுக் கூட்டத்தினை புறக்கணிக்கிறேன்: மு.க. ஸ்டாலின்


அ.தி.மு.க அரசால் கூட்டப்படும் தேர்வுக்குழுக் கூட்டத்தை, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் புறக்கணித்துள்ளார்.  இதுகுறித்து அரசு முதன்மைச் செயலாளரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், “மனித உரிமைகள் என்ற உள்ளார்ந்த அடிப்படைக் கொள்கை உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அதிமுக ஆட்சிக்கு அதன் மீது தேவைப்படும் அளவுக்கு நம்பிக்கையில்லை என்பதை, கடந்த பத்தாண்டு கால ஆட்சியின் அணுகுமுறை   வெளிப்படுத்தியிருக்கிறது. மனித உரிமைகள் கண்மூடித்தனமாக மீறப்பட்டுள்ளன.  

Also Read  "ஒப்பந்தக்காரரின் பணத்தில் புதிதாக கட்டடம் கட்ட வைக்க வேண்டும்": கமல் ஆவேசம்.!

பரமக்குடி துப்பாக்கிச் சூடு, ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு, சாத்தான் குளம் காவல் நிலைய மரணம், டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, சேலம்  எட்டு வழிச்சாலையை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது பலப் பிரயோகம், கதிராமங்கலம் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடிய பேராசிரியர் ஜெயராமன் மீது தேசியப் பாதுகாப்புச் சட்ட நடவடிக்கை, டாஸ்மாக்கை மூட அமைதியாகப் போராடிய தாய்மார்கள் மீது சரமாரித் தாக்குதல், சுற்றுப்புறச்சூழலுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த சேலம் மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் என்று, வரிசையாக மனித உரிமைகள் அ.தி.மு.க ஆட்சியில் பறிபோயிருக்கின்றன.

இந்த ஆட்சியில் மாநில மனித உரிமைகள் ஆணையம் அளித்த பரிந்துரைகளுக்கு, எந்தவித மதிப்பும் அளிக்கப்படவில்லை என்ற நிலை இன்று வரை தொடருகிறது. பத்தாண்டுகால ஆட்சியிலும்- ஓராண்டுகாலம் தலைவர் பதவியை நிரப்பாமல் இருந்த காலத்திலும், முடிந்த அளவு ஊறு விளைவித்து விட்டு, இப்போது திடீரென்று கூட்டப்படும் இந்த தேர்வுக்குழு கூட்டத்தினால் எவ்வித முன்னேற்றமும் ஏற்பட்டுவிடாது; அதில் பங்கேற்பதால் எந்த பயனும் உண்டாகாது .

Also Read  தமிழகத்தின் 25வது ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவி ஏற்கிறார்.!

 ஆகவே, அதிமுக ஆட்சியின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து, இன்று (26.12.2020) நடைபெறும் மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவரைத் தேர்வு செய்யும் தேர்வுக் குழுக் கூட்டத்தினை புறக்கணிக்கிறேன் என்று தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘வார் ரூம்’ வரலாறு தெரியுமா? முழு விவரம் இதோ..!

Lekha Shree

மாஸ் ஒழுங்கா போட வேண்டிய அவசியமில்லை…! வேற லெவல் ஆயுதத்தை கையில் எடுத்த அரசு அதிகாரி…!

Devaraj

டாஸ்மாக் இன்று முதல் திறப்பு – கமல்ஹாசன் சொன்ன பஞ்ச் டயலாக்

sathya suganthi

இனி எப்ப வேணும்னாலும் தடுப்பூசி போடலாம்..!

suma lekha

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எப்போது குறையும் – மருத்துவ நிபுணர்கள் சொன்ன தகவல் இதோ…!

Devaraj

கொரோனா வார்டுக்கு கவச உடையில் சென்ற கனிமொழி எம்.பி…!

sathya suganthi

டெல்லி: ‘பேட்டரி-டார்ச்’ சின்னம் ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையீடு

Tamil Mint

பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழகம் வருகிறார்!

Tamil Mint

காவி உடையணிந்த திருவள்ளுவர் படம் மாற்றம்…!

sathya suganthi

தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம்பெறும் தொகுதிகள் அறிவிப்பு

Tamil Mint

பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? முழுவிவரம் இதோ.!

Tamil Mint

செங்கல்பட்டு: அரசு மருத்துவமனையில் மேற்கூரை விழுந்து விபத்து…! அதிர்ஷடவசமாக உயிர்தப்பிய குழந்தை..!

Lekha Shree