அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள்: முதல்வர் பழனிசாமி


இன்று சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் அதிமுகவின் முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் தொடங்கியது.

அப்பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி, “தமிழகத்தில் 30 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த ஒரே கட்சி அதிமுக தான். அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் பூமி உள்ளவரை நிலைத்திருக்கும். அதிமுக ஆட்சியில் தமிழகம் அனைத்து துறையிலும் முதலிடத்தில் உள்ளது. அதிமுக ஆட்சியை விமர்சிப்பவர்கள், அவர்களது வீட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் நாட்டு மக்களுக்கான ஆட்சியைத் தந்தவர்கள். அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள். பல்வேறு சோதனைகளை சந்தித்து வளர்ந்த இயக்கம் அதிமுக. 

Also Read  ப.சிதம்பரம் மருமகளின் புகைப்படத்தை பயன்படுத்திய பாஜக!

சில புல்லுருவிகள் அதிமுகவை உடைக்க நினைத்தனர் ஆனால் அவர்களது முயற்சி தவிடுபொடியாக்கப்பட்டது. ஒற்றுமையின் மூலம் எதையும் வெல்லும் சக்தி அதிமுகவிற்கு உள்ளது. இந்தியாவிலேயே தொண்டர் முதலமைச்சராக வரக்கூடிய ஒரே கட்சி அதிமுக தான். எதிரிகளும் உச்சரிக்கும் பெயராக எம்ஜிஆர் பெயர் உள்ளது. பிரிந்த பின் மீண்டும் இணைந்த ஒரே இயக்கம் அதிமுக தான். அதிமுகவில் விசுவாசமாக இருப்பவர்களுக்கு ஏதாவது ஒரு பதவி நிச்சயம்” என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம், “தமிழ்நாட்டின் அரசியல், நேற்று இன்று நாளை என எப்போதுமே புரட்சி தலைவர் எம்ஜிஆரை சுற்றியே சுழலும். அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தில் தொண்டனாக இருப்பதே பெருமை. மக்களுக்கு நலத்திட்டங்களை கொடுத்து, அசைக்க முடியாத முதல்வராக இருந்தவர் புரட்சி தலைவர் எம்ஜிஆர். ஏழை மக்களின் வாழ்க்கை தரம் உயர பல்வேறு நலத்திட்டங்கள் அமல் படுத்தப்பட்டுள்ளன. பல சோதனை, வேதனைகளை தாண்டி, அதிமுகவை எஃகு கோட்டையாக மாற்றியவர் புரட்சி தலைவி அம்மா. மாநில வருவாய் நிதியில் 60% ஏழை மக்களின் பயன்பாட்டிற்கு செலவிட்டவர் ஜெயலலிதா. 

Also Read  சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து காவல்துறையினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து அதனை செய்து கொடுப்பது அதிமுக அரசு. அம்மாவின் கனவை நனவாக்கும் விதமாக, 2023க்குள் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படும். எத்தனை இயற்கை சீற்றங்களாக இருந்தாலும் அதனை எதிர்கொண்டு வெற்றி பெற்றது அதிமுக அரசு. பெண்கள் நாட்டின் கண்கள் என கருதிய புரட்சி தலைவி ஜெயலலிதா, பெண்களுக்கு சம உரிமையை பெற்று தந்தார். ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவ கல்லூரிகளை கொண்டுவந்து சாதனை படைத்துள்ளது அதிமுக அரசு. தமிழகத்திற்கு பல்வேறு நல்லதிட்டங்களை செய்து தருவதால் மத்திய ஆதரிக்கிறோம்” எனக் கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கார் விபத்தில் யாஷிகா ஆனந்த் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு

suma lekha

சாத்தான்குளம் ஆகிறதா செங்கல்பட்டு? படா தொல்லை தரும் படாளம் இன்ஸ்பெக்டர்

Tamil Mint

எம்.ஜி.ஆரின் கோட்டையாக இருந்த மதுரையை திமுகவின் கோட்டையாக மாற்றியது நான்: மு.க. அழகிரி

Tamil Mint

கொரோனா தடுப்பூசி ஆக்கியதில் தமிழகம் முதலிடம்!

Shanmugapriya

தமிழகம்: நீட் தேர்வுக்கு அஞ்சி இளைஞர் தற்கொலை…! திமுகவை கடுமையாக சாடும் நெட்டிசன்கள்..!

Lekha Shree

“இந்தியாவிற்கு முன் மாதிரியாக கோவை தொகுதியை மாற்றுவேன்” – கமல்

Shanmugapriya

தமிழகத்தில், ஐந்து மாவட்டங்களில், 17 இடங்களில், இன்று(ஜன.,2) கொரோனா தொற்று தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெறும்

Tamil Mint

24 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

sathya suganthi

பிப் 17 முதல் விருப்ப மனுக்களை பெறுகிறது திமுக

Tamil Mint

ஒரு மழைக்கே தாங்காத ஸ்மார்ட் சிட்டி தடுப்புச் சுவர்; கோவையின் அவலம்

Devaraj

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கொலை மிரட்டல்

Tamil Mint

செல்பி மோகத்தால் ஆற்றில் விழுந்த இளைஞர்: 10 மணிநேரம் கழித்து காப்பாற்றிய காவலர்.!

mani maran