a

இந்தியா-பிரிட்டன் இடையேயான ஏர் இந்தியா விமான சேவை ரத்து!


ஏப்ரல் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை இந்தியா-பிரிட்டன் இடையேயான ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2ம் அலை படு வேகமாக பரவி வரும் நிலையில் பிரிட்டன் அரசு இந்தியாவுக்கான விமான சேவையை தடை செய்தது. மேலும் பிரிட்டனின் சிவப்பு பட்டியலில் இந்தியாவை சேர்த்தது.

Also Read  தமிழகத்தில் 4000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

இந்தியாவில் கொரோனா 2வது அலை மற்றும் மரபணு மாறிய கொரோனா காரணமாக, இங்கிலாந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகள் அடங்கிய சிவப்பு பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட்டது.

இந்தியாவில் பரவி வரும் இரட்டை மரபணு மாறிய கொரோனா வைரஸ், இங்கிலாந்திலும் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்தது.

இதையடுத்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டது.

நோய் பரவல் மேலும் அதிகரிப்பதை தடுக்கும் வகையில், இந்தியாவில் 10 நாட்களுக்கு மேல் தங்கி இருந்தவர்கள், குடிமக்கள் அல்லாதவர்கள் இங்கிலாந்துக்கு வர தடை விதிக்கப்பட்டது.

Also Read  கோமியம் குடித்தால் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்! - பாஜக அமைச்சர்

விதிகளுக்குட்பட்டு ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் இந்தியாவிலிருந்து வருபவர்கள், 10 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சுட்டிக்காட்டிய ஏர் இந்தியா நிறுவனம் இந்தியா-பிரிட்டன் இடையேயான ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

Also Read  கொரோனா தொற்றால் உருவாகியுள்ள மற்றொரு ஆபத்து! 7 மாதங்களில் 33 ஆயிரம் டன் மருத்துவக் கழிவுகள்!

மேலும், ஏற்கெனவே டிக்கெட் புக் செய்தவர்களுக்கு கட்டணம் திருப்பி வழங்குதல் மற்றும் புதிய அட்டவணை போன்றவை பற்றிய விவரங்களை விரைவில் அறிவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நான் முதலில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளமாட்டேன்: மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்

Tamil Mint

மகாராஷ்டிராவில் அடுத்த 6 மாதங்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம்: முதல்வர் உத்தவ் தாக்கரே

Tamil Mint

நாட்டில் இதுவரை இல்லாத அளவு புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு – முழு விவரம் இதோ…!

Devaraj

அன்லாக் 4.0: மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி

Tamil Mint

தொழில்நுட்ப துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு ஆதார் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு….

VIGNESH PERUMAL

“மேற்கு வங்கத்தில் ஒற்றைக் காலால் வெல்வேன்” – மம்தா பானர்ஜி

Shanmugapriya

பஞ்சாப் பகீர்: விஷசாராயம் அருந்தி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Tamil Mint

காதலர் தின கொண்டாட்டம்: வெளிநாடுகளுக்கு ரோஜா ஏற்றுமதி 80 சதவீதம் பாதிப்பு – விவசாயிகள் வேதனை!

Tamil Mint

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா – கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்திய கர்நாடக அரசு

Lekha Shree

கேரள முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. மகிழ்ச்சியில் மக்கள்..

Ramya Tamil

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையேற்ற எதிரொலி – மத்திய அரசுக்கு தலைவர்கள் வலியுறுத்தல்

Tamil Mint

50 வருடமாக ஒரே தொகுதியில் எம்.எல்.ஏ..! அரசியல் அசுரவாதி உம்மன் சாண்டி ஓர் பார்வை…

HariHara Suthan