‘வலிமை’ படத்தில் அஜித் உபயோகித்த கையுறையை ஏலத்தில் எடுத்த ரசிகர்…!


நடிகர் அஜித்குமார் வாலிமை படத்தில் பயன்படுத்திய கையுறையை அஜித்குமாரின் ரசிகர் ஒருவர் ஏலத்தில் எடுத்துள்ளார்.

Kindness பவுண்டேஷனுக்காக நடிகர் அஜித்தின் ஆட்டோகிராப் இட்ட கையுறையை பள்ளிக் குழந்தைகளின் நலனுக்காக கடந்த 2021 மார்ச் மாதம் ஏலம் விடப்பட்டது.

இதை பெங்களூரை சேர்ந்த அஜித் ரசிகர் சூர்யா என்பவர் ஏலத்தில் வாங்கியுள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சூர்யா.

அதில், “இந்த பதிவை பதிவு செய்ய கிட்டத்தட்ட ஒரு வருடம் காத்திருந்தேன். இந்த ரைட்டிங் கையுறைகள் இந்திய சினிமாவின் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவரும் முன்னாள் F2 பந்தய வீரருமான தல அஜித் குமாரின் கையுறை.

Also Read  வினோத திருட்டு.... மக்களே உஷார்..... காரில் உலாவரும் நாய்கள்... கண்ணிமைக்கும் நொடி பொழுதில் மாயம்...

சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து ஒரு நல்ல காரணத்திற்காக ஏலத்தில் கலந்து கொண்டு இதை பெற்றேன். அஜித் தற்போது உலக பைக் பயணத்தில் பிஸியாக இருப்பதால் பின்னர் இந்த மாதத்திற்குள் எனக்கு போன் செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

நடிகர் அஜித்தின் இந்த ஒற்றை நினைவு சின்னத்தின் உரிமையாளர் நான் என்று சொல்வது எனக்கு மிகவும் பெருமையாகவும் அதிர்ஷ்டமாகவும் உணருகிறேன்.

Also Read  'தல' பிறந்தநாளன்று வைரலாகும் அவரது முதல் பட காட்சிகள்…! வீடியோ இதோ..!

இதை என்னிடம் வாங்க பல தரப்பினரும் லட்சக்கணக்கில் பணம் கொடுக்க முன்வந்தனர். பணத்தை விட இது எனக்கு அதிக மதிப்பு உடையது என்பதால் எல்லா சலுகைகளையும் நிராகரித்தேன்.

சமீபத்தில் வெளியாகி இருக்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் வலிமை படத்திலும் இதே கையுறையை தான் அஜித் சார் பயன்படுத்தியிருக்கிறார் என்பது எனக்கு தெரிந்தது.

இது ட்ரெய்லரில் காணப்பட்டது. இது மிகவும் விரும்பப்பட்ட டிரைலராக தற்போது மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது” என கூறியுள்ளார்.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாகும் என போனிகபூர் அறிவித்துள்ளார்.

Also Read  விஜய் டி.வி. ரக்‌ஷனின் மனைவி இவரா?... வைரலாகும் தம்பதியின் இளம் வயது போட்டோ...!

இந்த படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும் நாயகியாக ஹுமா குரேஷியும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். போனிகபூர் உடன் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஊரடங்கு நேரத்தில் ஊர் சுற்றியவர்களுக்கு அபராதம்!

Lekha Shree

பாலிவுட்டில் கால் பதிக்கும் சாய்பல்லவி…!

sathya suganthi

அருண்விஜய்யின் ‘பார்டர்’ பட டிரெய்லர் நாளை வெளியீடு..!

Lekha Shree

தமிழகம் முழுவதும் பயோ-மெட்ரிக் முறையில் ரேஷன் பொருள் வழங்கும் பணி தற்காலிக நிறுத்தம்

Tamil Mint

விஜய் டிவியில் ஒளிபரப்பான புது சீரியலின் ப்ரோமோவால் சர்ச்சை! காரணம் இதுதான்..!

Lekha Shree

கொரோனா அறிகுறியா? மருத்துவமனைக்கு செல்லாமல் ஸ்க்ரீனிங் சென்டருக்கு வாருங்கள் – ராதாகிருஷ்ணன்

Devaraj

நாகர்கோவில், மும்பை இடையே சிறப்பு ரயில்கள்

Tamil Mint

குடிமகன்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்: நவ., 1-ம் தேதி முதல் பார்களை இயக்க அனுமதி!

suma lekha

அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் நோயாளிகள் அவதி!

Lekha Shree

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்த முகாம் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு

Tamil Mint

தமிழகம்: மாவட்ட நீதிபதி தேர்வில் 6 பேர் மட்டும் தேர்ச்சி!

Tamil Mint

புஷ்பாவின் ‘ஸ்ரீவள்ளி’ – ராஷ்மிகா மந்தனா கதாபாத்திர போஸ்டர் வெளியீடு..!

Lekha Shree