யூடியூபில் 10 மில்லியன் பார்வைகளை கடந்த ‘வலிமை’ மோஷன் போஸ்டர்…!


அஜித்தின் ‘வலிமை’ மோஷன் போஸ்டர் யூடியூபில் 10 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஜூலை 11ம் தேதி வ’லிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.

நீண்ட நாள் காத்திருப்புக்கு பலன் கிடைத்ததால் அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் ‘வலிமை’ குறித்த ஹேஸ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து ட்விட்டரை தெறிக்கவிட்டனர்.

Also Read  'சூர்யா 40' அப்டேட் - பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு தேதி அறிவிப்பு! ரசிகர்கள் குஷி..!

நேர்கொண்ட பார்வை படத்தின் மெகா வெற்றிக்கு பின்னர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை.

இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தில் ‘காலா’ பட நடிகை ஹுமா குரோஷி அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

Also Read  அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் இவரா? வெளியான 'தெறி' அப்டேட்..!

அஜித் இந்த படத்தில் ஒரு காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படம் தொடங்கி வெறும் டைட்டில் மட்டுமே வெளியான நிலையில் அஜித் ரசிகர்கள் பார்க்கும் இடமெல்லாம் வலிமை அப்டேட் கேட்டு சேட்டை செய்தனர்.

அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பல இடங்களிலும் பல பேரிடமும் வலிமை படம் குறித்த அப்டேட் கேட்டு மிரளவைத்தனர்.

சில தினங்களுக்கு ரசிகர்களும் அமைதி காத்த ரசிகர்கள் மீண்டும் சாமியார், ட்விட்டர் என வலிமை அப்டேட் கேட்க துவங்கினர்.

Also Read  பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி!

அந்தவகையில் யூரோ கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்று வரும் மைதானத்திலும் ஒரு ரசிகர் வலிமை அப்டேட் என பேப்பரில் எழுதி காட்டியுள்ள புகைப்படம் வைரல் ஆகியது.

இந்நிலையில் தான் அஜித்தின் ‘வலிமை’ மோஷன் போஸ்டர் வெளியாகியது. அந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர் ‘தல’ ரசிகர்கள்.

தற்போது அஜித்தின் ‘வலிமை’ மோஷன் போஸ்டர் யூடியூபில் 10 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இதையும் அவரது ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி தேசிய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எதிர்பார்ப்பு இல்லாத அன்பு எப்போதும் இருக்கும்.! வாழு வாழ விடு: தல அஜீத் அதிரடி அறிக்கை

mani maran

மலர் டீச்சர் கேரக்டரில் இவரைத்தான் நடிக்க வைப்பதாக இருந்தேன்! – பிரேமம் இயக்குனர் சொன்ன புது தகவல்

Shanmugapriya

முதல்வன்…! பாய்ஸ்…! சிவாஜி…! கே.வி.ஆனந்த் மரணம் குறித்து ஷங்கர் சொன்னது என்ன?

Devaraj

வெற்றிமாறன் படத்திற்கு விஜய் சேதுபதி கேட்ட சம்பளம் இவ்வளவா?

Tamil Mint

பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறாரா ஷாலினி?

Tamil Mint

பைக் ரைடில் அசத்தும் ‘மங்காத்தா’ பட நடிகை… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

“கற்றது தமிழ்” இயக்குநர் ராமுடன் இணைகிறார் ஆர்.ஜே.பாலாஜி…!

sathya suganthi

மகள் ஆராதனாவால் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த பெருமை…!

Tamil Mint

திருமணத்திற்கு முன்பே தனது மகனை அறிமுகம் செய்த வரலட்சுமி சரத்குமார்…!

sathya suganthi

குட் லக் சகி ரிலீஸ் தேதி அறிவிப்பு! செம குஷியில் கீர்த்தி சுரேஷ்!

Bhuvaneshwari Velmurugan

ஆர்யாவுக்கு எதிரான பண மோசடி புகார் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

suma lekha

தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நடிகை தாப்ஸி…!

Lekha Shree