தொடங்கிய படப்பிடிப்பு… விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்: அப்டேட் கூட இல்லாமல் சைலன்ட்டான அஜீத் ரசிகர்கள்!


நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரியில் வெளியாகியது. கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த தடைகளையெல்லாம் தாண்டி மாஸ்டர் திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் அனைவரும் இணைந்து வெற்றி படமாக்கி துவண்டிருந்த திரையரங்கு வர்த்தகத்தை துளிர் விட செய்தனர்.

அதன்பின் நம்பிக்கையுடன் சில படங்கள் தியேட்டரில் வெளியாகி வெற்றியடைந்தன.

Also Read  'மாஸ்டர்' பட நடிகருக்கு 'மக்கள் செல்வன்' நேரில் சென்று வாழ்த்து…! காரணம் இதுதான்..!

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு விஜய் யாருடன் கூட்டணி இணைய போகிறார் என அனைவரும் எதிர்பாத்திருந்த நிலையில், கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் தான் அந்த அதிர்ஷடசாலி என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை இன்பக்கடலில் ஆழ்த்தியது.

பட அறிவிப்பு விளையான அதே வேகத்தில் முதற்கட்ட படப்பிடிப்பை ஜார்ஜியாவில் தொடங்கினர் படக்குழு.

Also Read  'நதிகளிலே நீராடும் சூரியன்' படத்தில் இணைந்த 'பொன்னியின் செல்வன்' பிரபலம்?

விறுவிறுவென சென்ற படப்பிடிப்பு கொரோனா 2-ம் அலை பரவலால் தடைபட்டு படக்குழு தாயகம் திரும்பினர்.

இதற்கிடையில் கடந்த ஜூன் 22-ம் தேதி நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு சார்பில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகன்ட் லுக் வெளியிடப்பட்டது.

Also Read  மீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி - ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிக்கும் மோகன் லால்!

இதனை கொண்டாடி தீர்த்த விஜய் ரசிகர்கள், அப்டேட் கூட வராமல் அப்பாவியாக இருக்கும் அஜீத் ரசிகர்களை கேலி, கிண்டல் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

பீஸ்ட் திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியுள்ளது.

இதனால் படத்தினை கூடிய விரைவில் முடிக்க படக்குழு திட்டமிட்டிருப்பது தெளிவாகிறது. பீஸ்ட்டை முந்தும் வலிமை இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“வரி குறைப்பு கேட்போரை நடிகர் என பார்ப்பது தவறு” – கார்த்தி சிதம்பரம் எம்.பி.

Lekha Shree

மாஸ்டர் உங்கள் இல்லம் தேடி வருகிறது! எப்போது தெரியுமா?

Tamil Mint

‘குக்கூ’ பட இயக்குனர் வீட்டில் நிகழ்ந்த சோகம்… ராஜூமுருகனின் அண்ணன் கொரோனாவால் உயிரிழப்பு!

Lekha Shree

கோடி கணக்கில் விலை போன வலிமை பட உரிமம்..! வலிமை அப்டேட் இதோ..

Jaya Thilagan

“நீங்க ஏதும் விருது வாங்கலையா? ” – ரசிகரின் கேள்விக்கு விவேக் அளித்த பதில் என்ன தெரியுமா?

Shanmugapriya

கொடுத்த வாக்கை காப்பாற்ற படாத பாடுபட்ட ரஜினிகாந்த்… தயாரிப்பாளரின் மனதை குளிர வைத்த சம்பவம்..!

Bhuvaneshwari Velmurugan

‘குக்கு வித் கோமாளி’ அஸ்வினுக்கு ‘தளபதி’ விஜய் தரப்பில் இருந்து கிடைத்த உதவி!

Lekha Shree

“கர்ப்பமாக இருக்கிறேன்” புகைப்படத்துடன் நல்ல செய்தி சொன்ன பிரபல பாடகி… குவியும் வாழ்த்துக்கள்…!

Jaya Thilagan

விக்னேஷ் சிவன், நயன்தாரா நிச்சயதார்த்தம் முடிந்ததா? விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம் வைரல்…

HariHara Suthan

மக்கள் செல்வனின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பட டீசர் இன்று வெளியீடு!

Lekha Shree

ரஷ்யாவில் டாப்ஸி! – வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்

Shanmugapriya

‘ஜெய்பீம்’: வெளியானது சூர்யா 39வது படத்தின் பர்ஸ்ட் லுக்…!

Lekha Shree