a

பிரச்சாரம் தேவையில்லை…மடல்கள் போதும்…! சிறையில் இருந்தபடியே வென்ற வேட்பாளர்…!


அசாம் மாநிலத்தில் குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பாளர், ஊழல் எதிர்ப்பு, தகவல் அறியும் உரிமைச்சட்ட போராளியாக அறியப்பட்டிருப்பவர் அகில் கோகோய். கடந்த 2019-ம் ஆண்டு தேசத்துரோக வழக்கில் அகில் கோகோய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ராய்ஜோர் தள் என்ற புதிய கட்சியை தொடங்கி இருந்த அகில், சிறையில் இருந்தபடியே அசாம் சட்டசபை தேர்தலில் சிப்சாகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார்.

Also Read  விவசாய சங்கங்களுடன் இரண்டு அல்லது மூன்று நாட்களில் மீண்டும் பேச்சுவார்த்தை. சுமுகத் தீர்வு ஏற்படும் என நம்பிக்கை: ஹரியானா முதலமைச்சர் கட்டார்

ஒருமுறைகூட வெளியில் வந்து பிரசாரம் செய்ய முடியாத நிலையில், சிறையில் இருந்தபடியே தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் குறித்து பல திறந்த மடல்களை எழுதி தொகுதி மக்களுக்குக்கு அனுப்பி வைத்தார்.

மகன் அகிலுக்காக அவரது 85 வயதான தாய் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரபல சமூக சேவகர் மேதா பட்கர், சந்தீப் பாண்டே போன்றோரும் அசாமுக்கு சென்று அகிலின் தாயாருடன் இணைந்து பிரசாரம் மேற்கொண்டனர். ராய்ஜோர் தள் கட்சியின் இளைஞர் படையும் தேர்தல் களத்தில் கடுமையாக உழைத்தது.

Also Read  பாஜக வேட்பாளர் வாகனத்தில் வாக்குபெட்டி – தேர்தல் அதிகாரிகள் தந்த பலே பதில்…!

இதன் பலனாக, 57 ஆயிரத்து 219 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் சுரபி ராஜ்கோன்வாரியை 11 ஆயிரத்து 875 வாக்கு வித்தியாசத்தில் அகில் தோற்கடித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசுக்கு பிறகு, சிறையில் இருந்தே வெற்றி பெற்ற 2-வது நபர் என்று வரலாற்றில் தனது பெயரை அகில் கோகோய் பதிவு செய்துள்ளார்.

Also Read  வாஜ்பாய்க்கு மோடி, அமித்ஷா அஞ்சலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

2 கோடி ரூபாய் வரை சிறிய அளவிலான வங்கி கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை-மத்திய அரசு அறிவிப்பு

Tamil Mint

சரியாக படிக்கவில்லை என்று கூறி பெற்ற மகன் மீது தீ வைத்த தந்தை! – அதிர்ச்சி சம்பவம்!

Tamil Mint

கம்பளா போட்டியில் இந்தியாவின் உசேன்போல்ட் சாதனை…!

Devaraj

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ரிஹானாவின் நாட்டுக்கு தடுப்பூசி நன்கொடை

Tamil Mint

கழிவறைக்குள் சிறுத்தை மற்றும் நாயை ஒன்றாக பூட்டிய பெண்; நாய் உயிருடன் மீட்கப்பட்டதா?

Tamil Mint

“குட்டி சிரு வந்துவிட்டார்” – மகன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மேக்னா ராஜ்

Tamil Mint

பீகார் சட்டமன்ற தேர்தலில் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

Tamil Mint

இந்தியாவில் மீண்டும் எகிறும் கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 40,000யை தாண்டியது…!

Devaraj

கொரோனா குறித்து போலி செய்திகள்! – 100க்கும் அதிகமான சமூக வலைதள பதிவுகள் நீக்க உத்தரவு..!

Lekha Shree

பணம் சேர்த்து வைத்து பறவைகளுக்கு உணவு வழங்கும் சூரத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள்!

Shanmugapriya

போலீஸார் பதிந்து வைத்த ஆணிகளுக்கு அருகிலேயே பூச்செடி நட்டு வைத்த விவசாயிகள்!

Tamil Mint

துரைமுருகன், ஜெயக்குமார் இல்லாத சட்டமன்றமா?

Devaraj