விவசாயிகள் போராட்டத்தில் உ.பி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவிற்கு அனுமதி மறுப்பு


நாடு முழுவதும் இந்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி, ஹரியாணா, பஞ்சாப், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் தொடர்ந்து 12ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று உத்தர பிரதேச மாநிலத்தின் கனோஜ் மாவட்டத்தில் விவசாயிகள் பேரணி நடந்த திட்டமிட்டு இருந்தனர். அதில் பங்கேற்க அம்மாநில முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் திட்டமிட்டார்.

Also Read  நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானி வீட்டில் பாகப் பிரிவினை...! யார் யாருக்கு என்ன சொத்து...!

ஆனால் அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்கள். அவருடன் நூற்றுக்கணக்கான சமாஜ்வாதி கட்சியினரும் இருந்தனர். 

காவல்துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்து, விக்ரமாதித்யா மார்க் பகுதியில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பாஜக கூட்டணி அரசுக்கு எதிராகவும் சமாஜ்வாதி கட்சியினர் கோஷமிட்டனர். இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. 

Also Read  மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா! அலறும் மாநில அரசுகள்! முழு விவரம்!

அகிலேஷ் யாதவ் உள்பட அனைவரையும் காவல்துறை பேருந்தில் வேறு இடத்துக்கு அழைத்துச் செல்லபட்டனர். 

கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால், அக்கட்சியினரை அனுமதிக்கவில்லை என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

“எங்களுடைய ஜனநாயக உரிமைகளை மறுக்கும் வகையில் காவல்துறையை பயன்படுத்தி உத்தர பிரதேசத்தில் ஆளும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை ஜனநாயகமற்றது” என சமாஜ்வாதி கட்சியின் செய்தித்தொடர்பாளர் ராஜேந்திர செளத்ரி தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வலுப்பெற்று வருகிறது.

Also Read  இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை தொடங்கியது! கேரளாவில் தீவிரமாக பரவும் வைரஸ்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மகாராஷ்டிரா முதல்வர் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி…!

Lekha Shree

“விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் இருக்கும்” – பிரியங்கா காந்தி

Shanmugapriya

உள்நாட்டு விமான கட்டணம் – நாளை மறுநாள் முதல் உயர்வு

sathya suganthi

2021-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிப்பு: மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு பத்ம விபூஷன் விருது! முழு விவரம் இதோ.!

Tamil Mint

“பார்க்கத்தான் புலி.. ஆனா…!” – புலி போல காட்சியளிக்கும் அரிய விலங்கின் புகைப்படம் வைரல்..!

Lekha Shree

நாடு முழுவதும் 500 ஏழுமலையான் கோயில்கள்…!

sathya suganthi

விலங்குகளில் இருந்து கொரோனா பரவுமா? – நிபுணர் விளக்கம்

sathya suganthi

கொரோனா தடுப்பூசி தந்த ஞானோதயம் – மன்னிப்பு கேட்ட திருடன்…!

Devaraj

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் – ஒரே நாளில் 24,492 பேருக்கு பாதிப்பு

Devaraj

இது கூட சாத்தியமா? – ஒரு வீட்டையே அப்படியே தூக்கிச்சென்ற நாகாலாந்து மக்கள்! | வைரல் வீடியோ

Tamil Mint

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்…

suma lekha

தமிழக வீராங்கனை பவானி தேவியின் உருக்கமான பதிவு… உடனே பதிலளித்த பிரதமர் மோடி..!

Lekha Shree