அனைத்து கட்சி கூட்டம் நிறைவு – பாஜகவை தவிர்த்து மற்ற கட்சிகள் நீட் விலக்குக்கு ஆதரவு..!


தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காத நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

திமுக சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மா. சுப்பிரமணியன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், காங்கிரஸின் செல்வபெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிந்தனைச் செல்வன் மற்றும் பாலாஜி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஜி.கே. மணி, பாரதிய ஜனதா கட்சி சார்பில் வானதி சீனிவாசன் மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Also Read  “குடிப்பதற்கு தண்ணீர் இல்லை; ஆனால் வாஷிங் மெஷின் கொடுக்கிறார்கள்!” - கமல்ஹாசன் விமர்சனம்!

இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், “நீட் ரத்து நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக உள்ளது. நீட்தேர்வு விவகாரத்தில் அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் அதிமுக துணை நிற்கும்” என கூறினார்.

நீட் தேர்வுக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்துவது என்றும் அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்தார்.

Also Read  சென்னை: சாலைகளில் உள்ள பள்ளம், குழிகளை சரி செய்ய நிதி ஒதுக்கீடு..!

அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், “மாநில அரசின் உரிமையை மத்திய அரசு பறித்து விட்டது. இது மாநில சுயாட்சிக்கு எதிரானது. நீட் தேர்வானது தேர்வுக்கு சிறப்பு பயிற்சிகளை பெற வசதி உள்ள மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது.

12 ஆண்டுகள் படிக்க கூடிய பள்ளி கல்வியால் எந்த உபயோகமும் இல்லை. நீட் தேர்வுக்கு எதிராக சட்ட போராட்டத்தை முன்னெடுப்பது என்று அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. நீட் விலக்கு தீர்மானத்திற்கு பாஜகவை தவிர்த்து 12 கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

Also Read  மறைந்த சண்முகநாதனுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்ணீர் அஞ்சலி!

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் இன்னும் குடியரசு தலைவருக்கு அனுப்பாதது சட்டமன்ற மாண்பை சிதைக்கும் வகையில் உள்ளது. மீண்டும் உள்துறை அமைச்சரை சந்திக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மின் வாரிய அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை

Tamil Mint

அமைச்சருடன் பேச்சுவார்த்தை தோல்வி: அண்ணா சாலையை முடக்கிய ஓட்டுநர்கள்!

Lekha Shree

கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும் – தமிழக அரசு எச்சரிக்கை

Devaraj

தமிழகம்: மதுக்கடைகள் திறப்பு! கூடுதல் தளர்வுகள் என்னென்ன?

Lekha Shree

’அடுத்த ஆதீனம் நான்தான்’ – அறிக்கை வெளியிட்ட நித்தியானந்தா..!

suma lekha

யாஸ் புயல் சேதங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் – பாதியில் வெளியேறிய முதல்வர் மம்தா பானர்ஜி!

Lekha Shree

சர்ச்சைக்குள்ளான மதமாற்றம்… வசீம் ரிஜ்வீயை கைது செய்ய வலியுறுத்தல்..!

suma lekha

தமிழகம்: மாவட்ட நீதிபதி தேர்வில் 6 பேர் மட்டும் தேர்ச்சி!

Tamil Mint

பள்ளிகளை தற்போது திறக்க முடியாது: அமைச்சர்

Tamil Mint

“18 வயதில் பிரதமரை தேர்ந்தெடுக்கலாம்… வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்க முடியாதா?” – ஓவைசி காட்டம்!

Lekha Shree

தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு!

Lekha Shree

சென்னை புறநகர் ரயில்கள் இரவில் இயங்காது

Jaya Thilagan