a

ஸ்டெர்லைட்டுக்கு 4 மாதத்திற்கு அனுமதி – அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய 4 மாதத்துக்கு மட்டும் அனுமதி வழங்கலாம் என அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2-வது அலை தீவிரமைடைந்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.

இந்த நிலையில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாக சீல் வைக்கப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை நிர்வாகம், தங்களுக்கு அனுமதி வழங்கினால் ஆக்சிஜன் தயாரித்து வழங்க தயாராக உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இது குறித்து பதிலளிக்க தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், மத்திய அரசு தரப்பில், ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே கையகப்படுத்தி ஆக்சிஜன் தயாரிக்கலாம் என்று யோசனை வழங்கி இருந்தது.

Also Read  "ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது மக்களுக்கு செய்யும் பச்சை துரோகம்" - சீமான்

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்தும் ஆலையை திறந்து அங்கு தமிழக அரசே ஆக்சிஜன் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடலாமா? என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.

இதில், அதிமுக சார்பில் ஓ. பன்னீர் செல்வம், விஜயபாஸ்கர், ஆர்பி உதயகுமார், திமுக சார்பில் கனிமொழி, ஆர்.எஸ். பாரதி உள்பட அங்கீகரிக்கப்பட்ட 8 கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கம் அல்ல என்றும் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

Also Read  அமேசான் தனித் திரையரங்குகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு குடோன்களாக மாற்றப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்: திருப்பூர் சுப்பிரமணியம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் முருகன் ஆதரவு தெரிவித்திருந்தார்.

ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகள் கருத்து தெரிவித்தனர். ஆக்சிஜன் உற்பத்தியை தவிர்த்து வேறு எந்த செயல்பாடுகளுக்கும் அனுமதி வழங்கக்கூடாது என்றும் மாவட்ட மாநில அளவில் குழு அமைத்து ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க நடவ்டிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

Also Read  முதல்வர் பழனிசாமி 2021 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை எடப்பாடியில் தொடங்கினார்

தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை அரசின் அனுமதி இல்லாமல் மத்திய அரசு வேறு மாநிலங்களுக்கு வழங்க கூடாது என்ற நிபந்தனைகளுடன் மனிதாபிமான அடிப்படையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறினார்.

இதையடுத்து ஆக்சிஜன் உற்பத்திக்காக 4 மாதத்துக்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் 3000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது – அமைச்சர் விஜயபாஸ்கர்

Tamil Mint

பிலவ ஆண்டில் 12 புயல்கள் உருவாகும்: பஞ்சாங்கத்தில் கணிப்பு

Devaraj

அமைதியை கெடுப்போர் மீது நடவடிக்கை – காவல் ஆணையர் எச்சரிக்கை

Tamil Mint

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? – தமிழக அரசு ஆலோசனை!

Lekha Shree

கொரோனா 2ம் அலை – 60 போலீசார் உயிரிழப்பு!

Lekha Shree

அத்தியாவசியபொருட்கள் உள்ளிட்டவற்றை தங்களுடன் வைத்துக்கொள்ள – தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத் துறை

Tamil Mint

2 ஓட்டு வாங்கிய அந்த 3 பேர்…! வரலாற்று சாதனை படைத்த கரூர் வேட்பாளர்கள்…!

sathya suganthi

நடிகர் ரஜினிக்கு விசாரணை ஆணையம் மீண்டும் சம்மன்

Tamil Mint

அவசர கோலத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது மருத்துவ அறிவியலுக்கு பொருத்தமானதல்ல –

Tamil Mint

சிறைத் துறைக்கு சசிகலா புதிய கோரிக்கை

Tamil Mint

தமிழகத்தில் புயல் தொடர்பான தகவல்களை பெற உதவி எண்கள் அறிவிப்பு

Tamil Mint